செலினா ஜெயிட்லி
| Celina Jaitley | |
|---|---|
Celina in Los Angeles (2007) |
|
| இயற் பெயர் | Celina Jiya Jaitley |
| பிறப்பு | நவம்பர் 24, 1981 [1][2] Kabul , Afghanistan |
| தொழில் | Model, actress |
| நடிப்புக் காலம் | 2001 - present |
| துணைவர் | None |
செலினா ஜெயிட்லி [1](பிறப்பு - 24 நவம்பர் 1981) ஒரு இந்திய நடிகையும் மற்றும் முன்னாள் அழகியுமாவார் . 2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் வென்றவர்.
பொருளடக்கம் |
[தொகு] இளமைப் பருவம்
ஜெயிட்லி ஆப்கானிஸ்தானிலுள்ள காபூலில் ஹிந்து பஞ்சாபி பிராமண தந்தைக்கு மகளாகப் பிறந்தார்.[3] இவரது தந்தை வி.கே. ஜெயிட்லி இந்திய ராணுவத்தில் கர்னலாகப்[5] பணியாற்றி ஓய்வு பெற்றவர் மற்றும் இவரது தாய் முன்னாள் ஆப்கானிய அழகு ராணியாக இருந்தவர்.[4] இவரது சகோதரர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
செலினா லக்னோ உட்பட பல நகரங்களில் வளர்ந்தவர். இவர் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசரி பள்ளியில் படித்தார். இவர் அவரது தந்தை பணியாற்றிய ஒரிசாவில் உள்ள பெர்ஹம்புரிலும் கல்வி பயின்றார். இவர் தனது பெரும்பாலான நாட்களை மேற்கு வங்காளத்தின், கொல்கத்தாவில் கழித்தார். தனது நேர்காணல்களில், தன் சிறு வயதில் ராணுவத்தில் மருத்துவராகவோ அல்லது விமான ஓட்டியாகவோ சேர விரும்பியதாகக் கூறியுள்ளார். இவர் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றார்.
[தொகு] தொழில் வாழ்க்கை
2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜெயிட்லி முதலிடத்தைப் பெற்று பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் 2001 என்ற பட்டத்தை வென்றார். மேலும், இவர் மிஸ் மார்கோ ப்யூடிபுல் ஸ்கின், இந்தியாடைம்ஸ் சர்பர்ஸ் சாய்ஸ் மற்றும் MTV யின் மோஸ்ட் வான்டட் விருதுகளையும் வென்றுள்ளார். இவற்றைத் தொடர்ந்து இவர் மிஸ் யூனிவர்ஸ் 2001 போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். அதில் இவர் இறுதிப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றார்.[5]
முதல் முறையாக 2003 ஆம் ஆண்டில் இவர் பெரோஸ் கானின் ஜனஷீன் என்ற படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டில் ஜெயிட்லி நியூசிலாண்டுக்குச் சென்று தனது முதல் அகில உலகப் படமான லவ் ஹாஸ் நோ லாங்க்வேஜ் என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்தார். அங்கிருந்தபோது இந்தியாவிலிருந்து இவரைப் பின் தொடர்ந்த தீய குணம் உடைய ஒருவரால் குறி வைக்கப்பட்டார். இவ்வனுபவத்தால் இவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
ஜெயிட்லி, சீன் கானரி மற்றும் ஆர்லாண்டோ ப்ளூம் ஆகியோருடன் க்வெஸ்ட் ஆப் ஷேஹரேசடே என்னும் படத்தில் பெர்சிய இளவரசியாக நடிக்க இருக்கிறார். கென் கானால் இயக்கப்பட உள்ள இப்படம் அராபிய இரவுகள் கதையை அடிப்படையாகக் கொண்டது. செலினாவின் முதல் ஹாலிவுட் படமாக இது அமையும். இவர் எகிப்திய சுற்றுலா மற்றும் டி'டமாஸ் ஆகியவற்றின் பிரச்சாரத் தூதுவராக உள்ளார்.
(LGBT) - இந்திய ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் ஜெயிட்லி விளங்குகிறார்.[6][7][8]
[தொகு] திரைப்பட விவரங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2003 | ஜனஷீன் | ஜெசிக்கா பெரைரா | |
| கேல் | சாஞ் பத்ரா | ||
| 2005 | சில்சிலே | பிரீத்தி | |
| நோ என்ட்ரி | சஞ்சனா சக்சேனா | ||
| சூர்யம் | மது | தெலுங்கு மொழிப்படம் | |
| 2006 | ஜவானி திவானி : எ யூத்புல் ஜாய் ரைட் | ரோமா பெர்னாண்டஸ் | |
| ஜிந்தா | நிஷா ராய் | ||
| டாம், டிக், அண்ட் ஹாரி | செலினா | ||
| அப்னா ஸப்னா மனி மனி | சானியா பத்னாம் | ||
| 2007 | ரெட் : தி டார்க் சைட் | அனஹிதா சக்சேனா | |
| ஷகலக பூம் பூம் | ஷீனா | ||
| ஹேய் பேபி | சிறப்புத் தோற்றம் | ||
| 2008 | சி கொம்பனி | கவர்ச்சி நடிகை | |
| மனி ஹை தோ ஹனி ஹை | ஸ்ருதி | ||
| கோல்மால் ரிடேர்ன்ஸ் | மீரா | ||
| 2009 | பேயிங் கெஸ்ட் | கல்பனா | |
| ஆக்சிடென்ட் ஆன் ஹில் ரோட் | சோனம் சோப்ரா | 31 டிசம்பர் 2009 வெளியீடு | |
| ஒன் நைட் | |||
| அனார்கலி | |||
| 2010 | ரன் போலா ரன் | 22 ஜனவரி 2010 வெளியீடு | |
| த க்வெஸ்ட் ஆப் ஷேஹரேசடே | அறிவிக்கப்பட்டது | ||
| ஹலோ டார்லிங் | கேண்டி பெர்னாண்டஸ் | ஆகஸ்ட் 20 அன்று வெளியாகிறது | |
| ஸ்ரீமதி | சோனியா | கன்னட மொழிப் படம்-படப்பிடிப்பில் | |
| வில் யு மேரி மீ | தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் | ||
| 2011 | தேன்க் யு | படப்பிடிப்பில் |
[தொகு] குறிப்புகள்
- ↑ "I am unlucky in love: Celina". The Hindu (25 November 2008). பார்த்த நாள் 2009-05-13.
- ↑ Gavin Rasquinha, Reagan (19 November 2006). "On your guard". Times of India. பார்த்த நாள் 2009-05-13.
- ↑ "The whole world knows me: Celina Jaitley". Sify.com. Indo-Asian News Service (14 July 2008). பார்த்த நாள் 2009-04-28.
- ↑ "Celina Jaitley". The Global Indian. பார்த்த நாள் 2009-02-22.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedcelina - ↑ Hingorani, Piya (30 June 2009). "Celina Jaitley campaigns for gay rights". CNN-IBN. பார்த்த நாள் 4 July 2009.
- ↑ ""Bollywood supports gay rights", says_Celina Jaitley". Sify (29 June 2009). பார்த்த நாள் 4 July 2009.
- ↑ "Celina Jaitley talks about Twitter, LGBT issues". HeadlinesIndia (14 September 2009). பார்த்த நாள் 14 September 2009.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Celina Jaitley |
| முன்னர் Lara Dutta |
Miss India Universe 2001 |
பின்னர் Neha Dhupia |