உடையார்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடையார் பாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடையார்பாளையம்
—  நகரம்  —
உடையார்பாளையம்
இருப்பிடம்: உடையார்பாளையம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°11′08″N 79°17′32″E / 11.185475°N 79.292278°E / 11.185475; 79.292278ஆள்கூறுகள்: 11°11′08″N 79°17′32″E / 11.185475°N 79.292278°E / 11.185475; 79.292278
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
வட்டம் உடையார்பாளையம் வட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[3]
மாவட்ட ஆட்சியர் திரு எ.சரவணவேல்ராஜ் இ.ஆ.ப [4]
பேரூராட்சி தலைவர் பானுமதி
மக்கள் தொகை

அடர்த்தி

11,325 (2001)

944/km2 (2,445/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 12 சதுர கிலோமீற்றர்கள் (4.6 sq mi)

உடையார்பாளையம் (ஆங்கிலம்:Udayarpalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும்.[5][6] உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சிறீ பயற்ணீநாத சுவாமி ஆலயம் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பொருளடக்கம்

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,325 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவர். உடையார்பாளையம் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. உடையார்பாளையம் நகர மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

பெயர்க்காரணம்[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இதனைச் சிறப்புடன் ஆண்டிருக்கிறார்கள். இது 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடம் மட்டுமல்லாமல் பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு 'உடையார்பாளையம்' என்னும் பெயருண்டானது.

புராணக் காலபெயர்கள்[தொகு]

 • ஜில்லிகா வனம்
 • திருப்பத்ராரணியம்
 • திருமுற்கபுரி
 • திருப்பயறணீச்சுரம்

பிற பெயர்கள்[தொகு]

 • கோயில்கள் நகரம்
 • ஜமீன்தார் நகரம்
 • ஏழைகளின் பட்டு நகரம்
 • பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் காஞ்சிபுரம் நகராகவே இந்நகரம் இருந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

ஆன்மிகப் பெருமை[தொகு]

உடையார்பாளையம் நகரத்தில் பலகாலம் முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோயில்கள் அமைந்திருப்பதால் வரலாற்று மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இவ்வூருக்குப் திருப்பத்ராரணியம், திருமுற்கபுரி, திருப்பயறணீச்சுரம் முதலிய பல பெயர்கள் உண்டு.

முன்பு, இவ்வூர் வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப்பட்டதால் அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்திவிட்டுக் கொண்டு செல்ல, விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகியிருக்கவே, இத்தல சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பதுணர்ந்து இங்கு வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிறெல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான். இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன. [8]

இங்கே உள்ள “சிறீ பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப்பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலா இடமாகும்.

இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது.[8]

சோழர்-பல்லவர் காலக் கலை நகரம்[தொகு]

அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் உடையார்பாளையம்.

பழைமை வாய்ந்த இந்நகரைத் தலைமையகமாகக் கொண்டு பல ஊர்களை பாளையத்துக்காரர்கள் ஆண்டார்கள். இன்றளவிலும் இந்நகரில் அரண்மனை சிதலடைந்த வடிவில் இருக்கிறது. இன்றளவும் அங்கே அரச வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்காலத்திலிருந்து நகரத்தின் உள்கட்டமைப்பு செம்மையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சிவன் கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.[சான்று தேவை] இங்கு சிதிலமடைந்த பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது.

பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் [9] "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. "தமிழ்த் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர்.

சினிமா படப்பிடிப்பு[தொகு]

 • திருச்சி மண்டலத்தில் பாரம்பரியமிக்க நகராக உடையார்பாளையம் நகரம் கருதபடுவதால் சினிமா படப்பிடிப்புகள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் சிறந்த படப்பிடிப்புத் தளமாக உடையார்பாளையம் நகரம் மாறி வருகிறது. இந்நகரைப் பற்றி அறிந்த தமிழக மற்றும் ஆந்திர - தெலுங்கானா மாநில திரைப்படத்துறை தொடர்ந்து சினிமா படப்பிடிப்புகள் இந்நகரில் எடுத்தவண்ணம் உள்ளனர் .

பழமொழிகளில் உடையார்பாளையம்[தொகு]

பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

விளக்கம்: உடையார்பாளையம் என்பது பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு அரசுப் பகுதியில் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.

நகரின் முக்கிய சுற்றுலா இடங்கள்[தொகு]

ஆலயங்கள் மற்றும் திருவிழாக்கள்[தொகு]

நகரில் அமைந்துள்ள கோயில்கள் சில[தொகு]

 • திரு பயற்ணீசுவரர் ஆலயம்
 • திரு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம்
 • திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம்
 • திரு மகிழமரத்து விநாயகர் ஆலயம்
 • திரு கரைமேல் அழகர் ஸ்ரீஅய்யனார் சுவாமி ஆலயம்
 • திரு 'தீர்த்தக்குள' விநாயகர் ஆலயம்
 • திரு அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்
 • திரு ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம்
 • திரு குருசாமி ஆலயம்
 • திரு வட பத்ரகாளியம்மன் ஆலயம்
 • திரு வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
 • திரு 'பட்டத்து'மாரியம்மன் ஆலயம்
 • திரு பெரியநாயகியம்மன் ஆலயம்
 • திரு செல்வ மாரியம்மன் ஆலயம்
 • திரு திரௌபதியம்மன் ஆலயம்
 • திரு காமன் ஆலயம்
 • திரு அரூப காளியம்மன் ஆலயம்
 • திரு ஓம்சக்தி-பராசக்தி வழிப்பாட்டு மன்ற ஆலயம்
 • திரு 'சித்தேரிக்கரை' மாரியம்மன் ஆலயம்
 • திரு இன்ப மாரியம்மன் ஆலயம்
 • திரு திரௌபதி அம்மன் ஆலயம்
 • திரு கருடகம்ப அனுமன் ஆலயம்
 • திரு காமாட்சி அம்மன் ஆலயம்
 • திரு கிழக்கு திரௌபதி அம்மன் ஆலயம்
 • திரு கிழக்கு பிள்ளையார் ஆலயம்
 • திரு செல்லியம்மன் ஆலயம்
 • திரு பாலமுருகன் ஆலயம்
 • திரு பாலவிநாயகர் ஆலயம்
 • திரு பெரியநாயகி அம்மன் ஆலயம்
 • திரு கிழக்கு காசி விசுவநாதர் ஆலயம்
 • திரு ஏரிக்கரை விநாயகர் ஆலயம்
 • திரு 'கலியுக'சீனிவாசப்பெருமாள் ஆலயம்
 • திரு 'கண்ணனூர்' மகா மாரியம்மன் ஆலயம்
 • திரு 'வழித்துணை'விநாயகர் ஆலயம்
 • பள்ளிவாசல்கள்
 • திரு குழந்தை இயேசுபாலன் தேவாலயம்

புகழ்பெற்றவை[தொகு]

 • திரு பயற்ணீசுவரர் ஆலயம்
 • திரு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம்
 • திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம்
 • திரு மகிழமரத்து விநாயகர் ஆலயம்
 • திரு ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம்
 • திரு வட பத்ரக்காளியம்மன் ஆலயம்
 • திரு வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
 • திரு காமன் ஆலயம்
 • திரு 'கண்ணனூர்' மகா மாரியம்மன் ஆலயம்

சோடச(16)விநாயகர் என்று சொல்லகூடிய 16 விநாயகர் உள்ளடக்கிய பெரிய சிவன் கோவில்

முக்கிய திருவிழாக்கள்[தொகு]

 • திரு பயற்ணீசுவரர் ஆலய பூஜைகள்-உற்சவங்கள்-சனிப்பெயர்ச்சி விழா-குருப்பெயர்ச்சி விழா-பிரதோச விழா-மஹா சிவராத்திரி விழா-பெளர்ணமி கிரிவலம்-அன்னாபிசேக விழா
 • திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலய தெப்பத்திருவிழா மற்றும் வாணவேடிக்கை
 • திரு 'சித்தேரிக்கரை' திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
 • திரு பாலமுருகன் ஆலய காவடியாட்ட திருவிழா
 • திரு வட பத்ரக்காளியம்மன் ஆலய உற்சவ திருவிழா
 • திரு பெரியநாயகி அம்மன் ஆலய மண்டல பூஜைகள்
 • திரு ஓம்சக்தி-ஆதிபராசக்தி ஆடி மாத மாபெரும் கஞ்சிக்கலயத் திருவிழா

முக்கிய திருவீதி உலா[தொகு]

 • திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் திருவீதியுலா மற்றும் தெப்பத்திருவிழா
 • திரு 'ஏரிக்கரை' விநாயகர் திருவீதியுலா
 • திரு பெரியநாயகி அம்மன் திருவீதியுலா
 • திரு பாலமுருகன் திருவீதியுலா
 • திரு கருடகம்ப அனுமன் திருவீதியுலா
 • திரு வட பத்ரக்காளியம்மன் திருவீதியுலா
 • திரு செல்வ மாரியம்மன் திருவீதியுலா
 • திரு குழந்தைஇயேசு திருவீதியுலா
 • திரு காளியம்மன் திருவீதியுலா
 • திரு திரௌபதியம்மன் திருவீதியுலா ,பாரதம் பாடுதல் மற்றும் தீமிதி திருவிழா

திருமண மண்டபங்கள்[தொகு]

 • திரு பயற்ணீசுவரர் ஆலயம்
 • திருவள்ளுவர் திருமண மண்டபம்
 • ஏ.கே.ஆர் திருமண மண்டபம்
 • வி.பி.ஆர்&வி திருமண மண்டபம்
 • ஏ.வி.கே திருமண மண்டபம்
 • ஜெ.ஜெ திருமண மண்டபம்
 • திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலயம்

போக்குவரத்து[தொகு]

விமான போக்குவரத்து[தொகு]

இவ்வூருக்கு அருகிலமைந்துள்ள திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

அரியலூர் மற்றும் கும்பகோணம், விருத்தாச்சலம் ஆகியவை உடையார்பாளையத்திற்கு அருகில் உள்ள மூன்று முக்கிய தொடருந்து நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு, தெற்குப்பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகள் உள்ளன.

பேருந்து போக்குவரத்து[தொகு]

உடையார்பாளையம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக உடையார்பாளையம் விளங்குகிறது.

பேருந்து நிலையங்கள்[தொகு]

 • வேலாயுதம் நினைவு (பழைய)பேருந்து நிலையம் - அமைவிடம்:பெரிய கடைவீதி
 • புதிய பேருந்து நிலையம் - அமைவிடம்:திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை

முக்கிய சாலைகள்[தொகு]

 • திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை
 • உடையார்பாளையம் நகர புறவழிச்சாலை
 • உடையார்பாளையம்-திருச்சி சாலை
 • உடையார்பாளையம்-சிதம்பரம் சாலை
 • உடையார்பாளையம்-கும்பகோணம் சாலை
 • உடையார்பாளையம்-அரியலூர் சாலை
 • உடையார்பாளையம்-செந்துறை சாலை
 • உடையார்பாளையம்-இலையூர்,வாரியங்காவல் சாலை(பழைய சென்னை நெடுஞ்சாலை)
 • உடையார்பாளையம்-சோழன்குறிச்சி சாலை
 • உடையார்பாளையம்-கழுமங்கலம் சாலை
 • உடையார்பாளையம்-சுத்தமல்லி சாலை
 • உடையார்பாளையம்-முனியதிரயன்பட்டி சாலை
 • உடையார்பாளையம்-ஒக்கணம் சாலை
 • உடையார்பாளையம்-ஏந்தல் சாலை

வாகனஎரிபொருள் விற்பனைநிலையம்[தொகு]

 • எச்பி ஆயில்,சிதம்பரம் சாலை

தொழிற்சாலைகள்[தொகு]

 • முந்திரி தொழிற்சாலை-வளர்ப்பிறை கல்விநிறுவனம் அருகில்
 • 'இடையார்' கோழிப்பண்ணை-ஸ்ரீஅன்னை கல்வி நிறுவனம் அருகில்

கல்வி[தொகு]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

 • மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்
 • வளர்ப்பிறை கல்விநிறுவனம்
 • அன்னை கல்விநிறுவனம்
 • மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
 • மீனாட்சி இராமசாமி இன்டஸ்ட்ரியல் ஸ்கூல்
 • மீனாட்சி இராமசாமி ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்ரிங் டேக்னாலஜி

பள்ளிகள்[தொகு]

 • மீனாட்சி இராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலவழி)
 • மீனாட்சி இராமசாமி வித்யாலயா பள்ளி (சிபிஎஸ்இ)
 • மீனாட்சி இராமசாமி மேனிலைப் பள்ளி(தமிழ்வழி)
 • ராஜவேல் ஏ டூ இசட் பதின்நிலைப் பள்ளி
 • அன்னை பதின்நிலைப் பள்ளி
 • அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
 • அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
 • அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்
 • குழந்தை இயேசுபாலன் துவக்கப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 • மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி
 • மீனாட்சி இராமசாமி மெரிட் கல்வியியல் கல்லூரி
 • அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி

மருத்துவமனைகள்[தொகு]

 • ஜமீன்தார் தாலுக்கா அரசு மருத்துவமனை
 • நவஜீவன் மருத்துவமனை
 • முஸ்தபா மருத்துவமனை
 • ஜி.டி மருத்துவமனை
 • கலைமகள் பல் மருத்துவமனை
 • இ.எஸ் பல் மருத்துவமனை
 • ஸ்மைல் பல் மருத்துவமனை

நகரம்[தொகு]

புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திரு பயற்ணீசுவரர் ஆலயம் அமைந்துள்ள காரணத்தினால் இது ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய தாலுக்கா'வாக இன்றளவும் இருப்பது உடையார்பாளையம் தாலுக்கா தான். இன்று பல தாலுக்கா'களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய தாலுக்கா'வாகவே கருதப்படுகிறது. பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் மாபெரும் வணிக நகராகவே இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூரை சேர்ந்த இராமசாமி முதலியார் இம்மாவட்டத்திலேயே முதன் முதலில் மீனாட்சி ராமசாமி என்ற பெயரில் கல்லூரிகளை உருவாக்கினார்.

மதங்கள்[தொகு]

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.

மொழியும் பண்பாடும்[தொகு]

இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்களே. சிறுபான்மையினராக தெலுங்கு, சமஸ்கிருதம், உருது பேசும் மக்களும் உள்ளனர். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது அவரவர் இனத்தைச் சார்ந்த தமிழ் பண்பாடு.

உணவு[தொகு]

தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு.

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இங்கு முந்திரி, கடலை, கரும்பு, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. இங்கு முந்திரி, கடலை முக்கிய பயிர்கள் ஆகும்.பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கால்நடைகள் வளர்ப்பு பெரிதும் உதவுகிறது. இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

பணப்பயிர்கள்[தொகு]

இந்நகரப் பகுதியில் முந்திரி,கடலை ஆகியன பணப் பயிர்களாக கருதப்படுகிறது

நகர நிர்வாகம்[தொகு]

உடையார்பாளையம் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். 12.4 சதுரகி.மீ பரப்பளவு கொண்ட இந்நகரம் 18 பெரிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சித்தலைவர் மற்றும் செயல்அலுவலரால் நிர்வகிக்கபடுகிறது. பல்வேறு தெருக்களை உடைய இந்நகரத்தில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது. உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் தெருக்களுக்கு கவுன்சிலர்களும், அவர்களுக்குத் தலைமையாக பேரூராட்சித் தலைவரும் நகரின் நிர்வாகத்தைக் கவனிக்கின்றனர்.

பல்துறை அரசு அலுவலகங்கள்[தொகு]

 • உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
 • உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம்
 • உடையார்பாளையம் முதன்மை அஞ்சல் நிலையம்
 • உடையார்பாளையம் கிளை அஞ்சல் நிலையம்
 • உடையார்பாளையம் உதவி மின்பொறியாளர் அலுவலகம்
 • உடையார்பாளையம் உதவி செயற்ப்பொறியாளர் அலுவலகம்
 • உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம்
 • உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(மேற்கு)
 • உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(கிழக்கு)
 • உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
 • உடையார்பாளையம் வட்ட ஆய்வாளர் அலுவலகம்
 • உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம்
 • உடையார்பாளையம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம்
 • உடையார்பாளையம் கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
 • உடையார்பாளையம் காவல் நிலையம்
 • உடையார்பாளையம் கிளை நூலகம்
 • உடையார்பாளையம் ஆதித்திராவிடர் தனிவட்டாட்சியர் அலுவலகம்
 • உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம்
 • உடையார்பாளையம் பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்
 • உடையார்பாளையம் வனச்சரக அலுவலகம்(நாச்சியார்ப்பேட்டை)
 • உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்(ஜெயங்கொண்டம்)

சந்தைகள்[தொகு]

 • வாரசந்தை
 • தினசரி

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு[தொகு]

உடையார்பாளையம் நகரில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. திருச்சி பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. திருச்சி, காரைக்கால்,புதுச்சேரி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இந்நகரில் அதிகம் கேட்கப்படுபவை. முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினதந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்),மற்றும் தமிழ் முரசு, மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும்.

வங்கிகள்[தொகு]

 • இந்தியன் வங்கி
 • சிண்டிகேட் வங்கி
 • கனரா வங்கி

தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்[தொகு]

 • சிண்டிகேட் வங்கி
 • எஸ்பிஐ வங்கி
 • இந்தியன் வங்கி(விரைவில்)
 • இண்டிகேஷ் வங்கி

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

படத் தொகுப்பு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/197
 3. http://www.tn.gov.in/government/keycontact/18358
 4. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
 5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=16&centcode=0002&tlkname=Udayarpalayam#MAP
 6. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=16&tlkname=Jayankondan&region=7&lvl=block&size=1200
 7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 8. 8.0 8.1 http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html
 9. [http://www.youtube.com/watch?v=hCLlgWLadjk
"http://ta.wikipedia.org/w/index.php?title=உடையார்பாளையம்&oldid=1762188" இருந்து மீள்விக்கப்பட்டது