உடையார்பாளையம்
| உடையார்பாளையம் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | அரியலூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | எம். ரவிகுமார் [3] |
| மக்கள் தொகை | 11 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
உடையார்பாளையம் (ஆங்கிலம்:Udayarpalayam), இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி. ஆகும்[4][5]
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,325 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். உடையார்பாளையம் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடையார்பாளையம் நகர மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பெயர்க்காரணம்[தொகு]
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன் தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டியிருக்கிறார்கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு 'உடையார்பாளையம்' என்னும் பெயருண்டாயிற்று.
தனித்துவம்[தொகு]
உடையார்பாளையம் நகரத்தில் பலகாலம் முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோயில்கள் அமைந்திருப்பதால் வரலாற்று மற்றும் ஆன்மிக சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இவ்வூருக்குப் திருப்பத்ராரணியம், திருமுற்கபுரி,திருப்பயறணீச்சுரம் முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள “திரு பயறணீசுவரர் ஆலயம்” மிகப் பழமையானது. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப்பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக திகழ்வது உடையார்பாளையம் “திரு பயறணீசுவரர் ஆலயம்” ஆகும். தமிழகத்தில் இருக்கின்ற தொன்மையான கோயில்களில் முக்கியமான கோயில்தான் உடையார்பாளையம் “திரு பயறணீசுவரர் ஆலயம்”. இத்திருக்கோயில் காலத்தை வென்று நிற்கும் அதிசயமாக திகழ்கிறது. புகழ் பெற்ற இத்திருக்கோயில் ஆச்சர்யங்களின் பொக்கிஷமாக கருதபடுகிறது.
சோழர் காலக் கலை நகரம்[தொகு]
அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் சரித்திரப் புகழ் வாய்ந்த மற்றும் புராணக் கால-ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் தான் உடையார்பாளையம்.
இது பழைமையான நகரம். இந்நகரைத் தலைமையகமாகக் கொண்டு பல ஊர்களை பாளையத்துகாரர்கள் ஆண்டார்கள்.இன்றளவிலும் இந்நகரில் அரண்மனை சிதலடைந்த வடிவில் இருக்கிறது. அங்கே அரச வம்சத்தினரும் வாழ்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்காலத்திலிருந்து நகரத்தின் உள்கட்டமைப்பு செம்மையாக திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. சிறந்த கட்டமைப்பு கொண்ட சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிதிலமடைந்த பெருமாள் கோவிலும் உள்ளது.
பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் (ஆதாரம்) "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 25 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. "தமிழ்த் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர். சுற்றுலா செல்வதற்கு சிறந்த நகரமாக் விளங்குகிறது
நகரின் முக்கிய சுற்றுலா இடங்கள்[தொகு]
- பாளையக்காரர்கள் அரண்மனை(600 ஆண்டுகள் பழைமையானது)
- கைலாச மஹால்
- சிவன் ஆலயம் (1400 ஆண்டுகள் பழைமையானது)
- விஷ்ணு ஆலயம்
- வில் வளைத்த விநாயகர் ஆலயம்
புகழ்ப்பெற்ற திருத்தலங்கள்[தொகு]
- திரு பயற்ணீசுவரர் ஆலயம்
- திரு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம்
- திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம்
- திரு மகிழமரத்து விநாயகர் ஆலயம்
- திரு ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம்
- திரு வடக்கு காளியம்மன் ஆலயம்
- திரு வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
- திரு காமன் ஆலயம்
- திரு 'கண்ணனூர்' மகா மாரியம்மன் ஆலயம்
சினிமா படப்பிடிப்பு[தொகு]
- திருச்சி மண்டலத்திலேயே மிகவும் பாரம்பரியமிக்க நகராக உடையார்பாளையம் நகரம் கருதபடுவதால் சினிமா படப்பிடிப்புகள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்திலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக உடையார்பாளையம் நகரம் மாறி வருகிறது.
நகரில் அமைந்துள்ள கோயில்கள் சில[தொகு]
- திரு பயற்ணீசுவரர் ஆலயம்
- திரு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயம்
- திரு வில் வளைத்த விநாயகர் ஆலயம்
- திரு மகிழமரத்து விநாயகர் ஆலயம்
- திரு கரைமேல் அழகர் ஸ்ரீஅய்யனார் சுவாமி ஆலயம்
- திரு 'தீர்த்தக்குள விநாயகர் ஆலயம்
- திரு ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம்
- திரு குருசாமி ஆலயம்
- திரு வட பத்ரக்காளியம்மன் ஆலயம்
- திரு வெள்ளைப்பிள்ளையார் ஆலயம்
- திரு செல்வ மாரியம்மன் ஆலயம்
- திரு காமன் ஆலயம்
- திரு அரூப காளியம்மன் ஆலயம்
- திரு ஓம்சக்தி-பராசக்தி வழிப்பாட்டு மன்ற ஆலயம்
- திரு 'சித்தேரிக்கரை' மாரியம்மன் ஆலயம்
- திரு இன்ப மாரியம்மன் ஆலயம்
- திரு திரௌபதி அம்மன் ஆலயம்
- திரு கருடகம்ப அனுமன் ஆலயம்
- திரு காமாட்சி அம்மன் ஆலயம்
- திரு கிழக்கு திரௌபதி அம்மன் ஆலயம்
- திரு கிழக்கு பிள்ளையார் ஆலயம்
- திரு செல்லியம்மன் ஆலயம்
- திரு பாலமுருகன் ஆலயம்
- திரு பாலவிநாயகர் ஆலயம்
- திரு பெரியநாயகி அம்மன் ஆலயம்
- திரு கிழக்கு காசி விசுவநாதர் ஆலயம்
- திரு ஏரிக்கரை விநாயகர் ஆலயம்
- திரு சீனிவாசப்பெருமாள் ஆலயம்
- திரு 'கண்ணனூர்' மகா மாரியம்மன் ஆலயம்
- பள்ளிவாசல்கள்
- குழந்தை இயேசு பாலன் தேவாலயம்
விமான போக்குவரத்து[தொகு]
திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது..
இரயில் போக்குவரத்து[தொகு]
அரியலூர் மற்றும் கும்பகோணம் , விருத்தாச்சலம் ஆகியவை உடையார்பாளையத்திற்கு அருகில் உள்ள மூன்று முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு,கிழக்கு மற்றும் மேற்கு,தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது.
பேருந்து போக்குவரத்து[தொகு]
உடையார்பாளையம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.
பேருந்து நிலையங்கள்[தொகு]
- வேலாயுதம் நினைவு (பழைய)பேருந்து நிலையம் - அமைவிடம்:பெரிய கடைவீதி
- புதிய பேருந்து நிலையம் - அமைவிடம்:திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை
முக்கிய சாலைகள்[தொகு]
- உடையார்பாளையம் நகர புறவழிச்சாலை
- திருச்சி-சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை
- உடையார்பாளையம்-கும்பகோணம் சாலை
- உடையார்பாளையம்-அரியலூர் சாலை
- உடையார்பாளையம்-செந்துறை சாலை
- உடையார்பாளையம்-இலையூர் சாலை
- உடையார்பாளையம்-சோழன்குறிச்சி சாலை
- உடையார்பாளையம்-கழுமங்கலம் சாலை
- உடையார்பாளையம்-சுத்தமல்லி சாலை
தொழிற்சாலைகள்[தொகு]
- முந்திரி தொழிற்சாலை-வளர்ப்பிறை கல்விநிறுவனம் அருகில்
கல்வி நிறுவனங்கள்[தொகு]
- மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்
- வளர்ப்பிறை கல்விநிறுவனம்
- அன்னை கல்விநிறுவனம்
பள்ளிகள்[தொகு]
- அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
- அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
- அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்
- குழந்தை இயேசுபாலன் துவக்கப்பள்ளி
- மீனாட்சி இராமசாமி பதின்நிலைப் பள்ளி
- மீனாட்சி இராமசாமி மேனிலைப் பள்ளி
- ராஜவேல் ஏ டூ இசட் பதின்நிலைப் பள்ளி
- அன்னை பதின்நிலைப் பள்ளி
கல்லூரிகள்[தொகு]
- மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி பொறியியல் மற்றும் தகவல் தொழினுட்பக் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி உடற்கல்வியியல் கல்லூரி
- மீனாட்சி இராமசாமி மெரிட் கல்லூரி
- அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
மருத்துவமனைகள்[தொகு]
- ஜமீன்தார் தாலுக்கா அரசு மருத்துவமனை
- நவஜீவன் மருத்துவமனை
- முஸ்தபா மருத்துவமனை
- ஜி.டி மருத்துவமனை
- கலைமகள் பல் மருத்துவமனை
- இ.எஸ் பல் மருத்துவமனை
- ஸ்மைல் பல் மருத்துவமனை
பல்துறை அரசு அலுவலகங்கள்[தொகு]
- உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
- உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம்
- உடையார்பாளையம் அஞ்சல் நிலையம்
- உடையார்பாளையம் உதவி மின்பொறியாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் உதவி செயற்ப்பொறியாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம்
- உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(மேற்கு)
- உடையார்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்(கிழக்கு)
- உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் வட்ட ஆய்வாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம்
- உடையார்பாளையம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம்
- உடையார்பாளையம் கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
- உடையார்பாளையம் காவல் நிலையம்
- உடையார்பாளையம் கிளை நூலகம்
- உடையார்பாளையம் ஆதித்திராவிடர் தனிவட்டாட்சியர் அலுவலகம்
- உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகம்
- உடையார்பாளையம் வனச்சரக அலுவலகம்(நாச்சியார்ப்பேட்டை)
- உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்(ஜெயங்கொண்டம்)
சந்தை[தொகு]
- வாரசந்தை
வங்கிகள்[தொகு]
- இந்தியன் வங்கி
- சிண்டிகேட் வங்கி
- கனரா வங்கி
தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்[தொகு]
- சிண்டிகேட் வங்கி
- எஸ்பிஐ வங்கி
- இந்தியன் வங்கி(விரைவில்)
திருமண மண்டபங்கள்[தொகு]
- திரு பயற்ணீசுவரர் ஆலயம்
- திருவள்ளுவர் திருமண மண்டபம்
- ஏ.கே.ஆர் திருமண மண்டபம்
- வி.பி.ஆர்&வி திருமண மண்டபம்
- ஏ.வி.கே திருமண மண்டபம்
- ஜெ.ஜெ திருமண மண்டபம்
- திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலயம்
முக்கிய திருவிழாக்கள்[தொகு]
- திரு பயற்ணீசுவரர் ஆலய பூஜைகள்-உற்சவங்கள்-சனிப்பெயர்ச்சி விழா-குருப்பெயர்ச்சி விழா-பிரதோச விழா-மஹா சிவராத்திரி விழா-பெளர்ணமி கிரிவலம்-அன்னாபிசேக விழா
- திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலய தெப்பத்திருவிழா மற்றும் வானவேடிக்கை
- திரு 'சித்தேரிக்கரை' திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
- திரு பாலமுருகன் ஆலய காவடியாட்ட திருவிழா
- திரு 'வடக்கு' காளியம்மன் ஆலய உற்சவ திருவிழா
- திரு பெரியநாயகி அம்மன் ஆலய மண்டல பூஜைகள்
முக்கிய திருவீதி உலா[தொகு]
- திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் திருவீதியுலா
- திரு 'ஏரிக்கரை' விநாயகர் திருவீதியுலா
- திரு பெரியநாயகி அம்மன் திருவீதியுலா
- திரு பாலமுருகன் திருவீதியுலா
- திரு கருடகம்ப அனுமன் திருவீதியுலா
- திரு வடக்கு காளியம்மன் திருவீதியுலா
- திரு செல்வ மாரியம்மன் திருவீதியுலா
அருகிலுள்ள நகரங்கள்[தொகு]
![]() |
சேலம் | திட்டக்குடி, பெண்ணாடம், ஆண்டிமடம், விருத்தாசலம் | வரதராஜன்பேட்டை, திருமுட்டம், வடலூர், நெய்வேலி | ![]() |
| துறையூர், பெரம்பலூர், குன்னம், செந்துறை | ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் | |||
| திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர் | தா.பழூர், கும்பகோணம் | அணைக்கரை, பந்தநல்லூர், திருப்பனந்தாள், ஆடுதுறை, மயிலாடுதுறை |
வெளி இணைப்புகள்[தொகு]
- உடையார்பாளையம் சமஸ்தானம் வரலாறு
- உடையார்பாளையம் ஜமீன் வரலாறு பற்றிய காணொளி
- உடையார்பாளையம் 'பாளையக்காரர்கள் அரண்மணை' புகைப்படத்தொகுப்பு
- உடையார்பாளையம் 'பாளையக்காரர்கள் அரண்மனை' புகைப்படங்கள் சில
- உடையார்பாளையம் திரு 'கண்ணனூர்' மஹா மாரியம்மன் ஆலய தெப்பத்திருவிழா காணொளி
- காஞ்சிபுரம் திரு வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையார்பாளையம் உற்சவம்
- உடையார்பாளையம் மீனாட்சி இராமசாமி கல்விநிறுவனங்கள்
- விக்கிமேப்பியாவில் உடையார்பாளையம் அமைவிடம்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=16¢code=0002&tlkname=Udayarpalayam#MAP
- ↑ http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=16&tlkname=Jayankondan®ion=7&lvl=block&size=1200
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
||||||||||||||||||||||||||
