வனிந்து அசரங்க
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பின்னதுவாகே வனிந்து அசரங்க டி சில்வா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 29 சூலை 1997 காலி, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் (பல்துறை) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | சதுரங்க டி சில்வா (சகோதரர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 180) | 2 சூலை 2017 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 1 மார்ச் 2020 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 80) | 1 செப்டம்பர் 2019 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 6 மார்ச் 2020 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015-இன்று | கொழும்புத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–இன்று | சில்கெட் சிக்சர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020 | யாழ்ப்பாணம் இசுடாலியன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 திசம்பர் 2020 |
வனிந்து அசரங்க (Wanindu Hasaranga, பிறப்பு: 29 சூலை 1997), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார் இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] இவரது மூத்த சகோதரர் சதுரங்கா டி சில்வாவும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.[2]
ஆரம்ப ஆண்டுகளில்
[தொகு]வனிந்து அசரங்க டி சில்வா காலியின் ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். அந்தக் கல்லூரியில் பயிலும் பொழுது தனது துடுப்பாட்ட ஆடங்களைத் துவங்கினார் . 2016 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இவர் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்டார்.[3]
உள்ளூர் போட்டிகள்
[தொகு]2015 ஆம் ஆண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். நவம்பர் 30 இல் ஏ ஐ ஏ பிரிமியர் குறைந்தபட்ச ஓவர் போட்டி தொடரில் இவர் முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார்.[4]
2015 டிசம்பரில் அவர் 2016 ஆம் ஆண்டில் நடைபெறக் கூடிய 19 வாதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இலங்கையின் அணியில் இடம் பெற்றார்.[5] பிப்ரவரி 26, 2016 அன்று நடைபெற்ற 2015–16 பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை துடுப்பாட்ட சங்கம் சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[6]
நவம்பர் 2017 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் ஆண்டு விருதுகளில் 2016 -17 ஆம் ஆண்டுகளில் இவர் சிறப்பாக செயல்பட்டதற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[7] 2017–18 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 நவம்பர் 2017 அன்று சில்ஹெட் சிக்ஸர் அணிக்காக இவர் இருபது-20 போட்டியில் அறிமுகமானார்.[8]
மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டித் தொடரில் கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9][10] அடுத்த மாதம், அரிவிக்கப்பட்ட 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியிலும் அவர் இடம் பெற்றார் .[11] ஆகஸ்ட் 2018 இல், 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் தம்புல்லாவின் அணியில் இடம் பெற்றார்.[12]
2018 19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரிமியர் லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் கொழும்பு அணி சார்பாக கலந்து கொண்டார். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் 765 ஓட்டங்க எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.[13] மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[14]
2020 அக்டோபரில், இவர் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார். இதன் முதலாவது தொடரில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சுக்காக விளையாடினார்.[15] இத்தொடரில் அதிக இலக்குகளை (17) பெற்ற வீரராகவும், தொடர் நாயகனாகவும் விளங்கினார்.[16]
சர்வதேச போட்டிகள்
[தொகு]சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் அவர் இடம் பெற்றார்.[17] இவர் ஜூலை 2, 2017 அன்று ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[18] இந்த போட்டியில், மூன்று இலக்குகளை தொடர்ச்சியாக வீழ்த்தினார், இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இளம் வயது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.[19]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Wanidu Hasaranga". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "Chaturanga de Silva". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
- ↑ Sri Lanka Under 19 World Cup Squad – Player Profiles பரணிடப்பட்டது 2018-07-13 at the வந்தவழி இயந்திரம், Sri Lanka Cricket
- ↑ "AIA Premier Limited Over Tournament, Group A: Sri Lanka Ports Authority Cricket Club v Tamil Union Cricket and Athletic Club at Colombo (CCC), Nov 30, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "SL include Charana Nanayakkara in U-19 World Cup squad". ESPNCricinfo. 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "AIA Premier League Tournament, Plate Championship: Sri Lanka Ports Authority Cricket Club v Bloomfield Cricket and Athletic Club at Panagoda, Feb 26-28, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2016.
- ↑ "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. November 2017. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ "10th match (N), Bangladesh Premier League at Dhaka, Nov 11 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 November 2017.
- ↑ "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018.
- ↑ "SLC T20 League 2018 squads finalized". http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018.
- ↑ "Premier League Tournament Tier A, 2018/19 - Colombo Cricket Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
- ↑ "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
- ↑ "Chris Gayle, Andre Russell and Shahid Afridi among big names taken at LPL draft". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
- ↑ "Lanka Premier League, 2020 - Most Wickets". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
- ↑ "Chandimal left out for first two Zimbabwe ODIs". ESPN Cricinfo. 27 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
- ↑ "Zimbabwe tour of Sri Lanka, 2nd ODI: Sri Lanka v Zimbabwe at Galle, Jul 2, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
- ↑ "Sri Lanka vs Zimbabwe, 2nd ODI: Wanidu Hasaranga becomes youngest player to take hat-trick on debut". Indian Express. 2 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.