உள்ளடக்கத்துக்குச் செல்

சதுரங்க டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னடுவகே சதுரங்க டி சில்வா ( Pinnaduwage Chaturanga de Silva பிறப்பு 17 ஜனவரி 1990) பொதுவாக் சில்வா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இலங்கை தேசிய அணி தவிர சிலா மரியான்சு துடுப்பாட்ட சங்கம், கம்பைண்டு மாகாணத் துடுப்பாட்ட அணி, மூர்ச் துடுப்பாட்ட சங்கம், இலங்கை அ அணி, இலங்கை அ வளர்ந்து வரும் அணி (எமெர்ஜிங் அணி) ஆகிய துடுப்பாட்ட அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

டி சில்வா தனது நீண்டகால தோழியான நிர்மா டி சில்வாவை 7 ஆகஸ்ட் 2015 அன்று திருமணம் செய்து கொண்டார். கொழும்பின் கிங்ஸ்பரி விடுதியில் இவர்களின் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.[1] அவரது தம்பி வனிந்து அசரங்கா ஒரு வரையறுக்கப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிரார். 2017 ஆம் ஆண்Dஇல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறுமுகமனார்.[2]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். அதற்கு அடுத்த மாதம் நடைபெற்ற 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான காலி துடுப்பாட்ட அணியிலும் அவர் இடம் பெற்றார் .

ஆகஸ்ட் 2018 இல், அவர் கொழும்பு துடுப்பாட்ட அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இடம் பெற்றார் . பிப்ரவரி 2019 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இவரை 2017–18 எஸ்.எல்.சி இருபது20 போட்டியின் வீரராக அறிவித்தது.[3] மார்ச் 2019 இல் நடைபெற்ற 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் .[4]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

2009 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். அக்டோபர் 30 இல் கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

2009 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமனார். செப்டமபர் 16 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் கொழும்பு துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் மூர்ச் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியில் டி சில்வா முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிப்ரவரி 25, 2014 அன்று ஆசிய கோப்பையில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலிவர் அறிமுகமானார். அந்தத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் மட்டையாட்டத்தில் இவர் 44 ஓட்டங்களை எடுத்தார்.[5]

ஜூலை 2015 இல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் எந்த ஒரு ஆட்டத்திலும் விளையாடவில்லை.[6] அக்டோபர் 2017 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் பன்னாட்டு இருபது20 அணியில் இடம் பெற்றார்.[7] அவர் அக்டோபர் 29, 2017 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான இருபத்20 துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமனார்.[8]

குறிப்புகள்[தொகு]

  1. "Chathuranga de Silva's wedding photos". Island Cricket. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  2. "Wanidu Hasaranga". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2017.
  3. "New contracts for domestic players; 2017/18 best performers rewarded". The Papare. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  4. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  5. "Kusal Perera, two uncapped players in SL squad for fifth ODI". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 6 March 2014.
  6. "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
  7. "Thisara Perera to captain Sri Lanka in Lahore". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
  8. "3rd T20I (N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Lahore, Oct 29 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்க_டி_சில்வா&oldid=3075885" இலிருந்து மீள்விக்கப்பட்டது