யாழ்ப்பாணம் இசுடாலியன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சு
Jaffna Stallions
Jaffna Stallions logo.png
விளையாட்டுப் பெயர்(கள்)வாடா மச்சான்
தொடர்லங்கா பிரிமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்திசாரா பெரேரா
பயிற்றுநர்திலின கந்தம்பே
உரிமையாளர்ஆனந்தன் ஆர்னல்டு, ராகுல் சூட்[1]
முகாமையாளர்ஹரி வாகீசன்
அணித் தகவல்
நகரம்யாழ்ப்பாணம், வட மாகாணம்
நிறங்கள்     கடும் நீலம்,      வான நீலம்
உருவாக்கம்2020
வரலாறு
எல்.பி.எல் வெற்றிகள்1 (2020)
அதிகாரபூர்வ இணையதளம்:www.jaffnastallions.com

இ20 ஆடை

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சு (Jaffna Stallions, ஜப்னா ஸ்டாலியன்ஸ், சிங்களம்: යාපනය ස්ටැලියන්ස්) என்பது இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் (LPL) போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணி ஐக்கிய ராச்சியம், ஆத்திரேலியா, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் சில புலம்பெயர் தமிழர்களால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது.[2] ஆர்னல்டு ஆனந்தன், மற்றும் மைக்கிரோசாப்ட் வென்சர்சு (எம்12) நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சூட் ஆகியோர் இதன் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.[3] சாரங்க விஜயரத்தின இலங்கைக்கான தகவல், ஊடகப் பணிப்பாளராக உள்ளார்.[4] இவ்வணியின் முகாமையாளராக ஹரி வாகீசன் உள்ளார்.

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட அணித் தலைவர் திலின கந்தம்பே இவ்வணியின் பயிற்சியாளராக உள்ளார்.[5] திசாரா பெரேரா இவ்வணியின் முத்திரை வீரராக விளையாடுகிறார்.[6]

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் முதலாவது வாகையாளர் கிண்ணத்தை யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணி வென்றது. 2020 திசம்பர் 16 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் காலி கிளேடியேட்டர்சு அணியை 53 ஓட்டங்களால் வென்று தனது முதலாவது வெற்றிக் கிண்ணத்தை பெற்றது.[7][8]

பருவங்கள்[தொகு]

ஆண்டு லீக் அட்டவணை இறுதி
2020 5 அணிகளில் மூன்றாவது வாகையாளர்

2020 அணி[தொகு]

  • பன்னாட்டு அணி வீரர்கள் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளனர்.
  •  *  - பருவத்தின் கடைசிக் காலத்தில் விளையாட மாட்டார்கள்
S/N பெயர் தேசி. பிறந்த நாள் (அகவை) துடுப்பாட்ட வகை பந்துவீச்சு வகை குறிப்புகள்
துடுப்பாளர்கள்
28 அவிஷ்கா பெர்னாண்டோ இலங்கை 5 ஏப்ரல் 1998 (1998-04-05) (அகவை 22) வலக்கை வலக்கை மித-வேகம்
29 டேவின் ஜொகானஸ் மலான் இங்கிலாந்து 3 செப்டம்பர் 1987 (1987-09-03) (அகவை 33) இடக்கை வலக்கை நேர்ச்சுழல் வெளிநாட்டு வீரர்
45 ஆசிப் அலி பாக்கித்தான் 1 அக்டோபர் 1991 (1991-10-01) (அகவை 29) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல் வெளிநாட்டு வீரர்
23 நுவனிது பெர்னாண்டோ இலங்கை 13 அக்டோபர் 1999 (1999-10-13) (அகவை 21) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல்
பன்முக வீரர்கள்
1 திசாரா பெரேரா இலங்கை 3 ஏப்ரல் 1989 (1989-04-03) (அகவை 31) இடக்கை வலக்கை விரைவு வீச்சு தலைவர்
75 தனஞ்சய டி சில்வா இலங்கை 6 செப்டம்பர் 1991 (1991-09-06) (அகவை 29) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல்
13 வனிந்து அசரங்கா இலங்கை 29 சூலை 1997 (1997-07-29) (அகவை 23) வலக்கை நேர்ச்சுழல்
18 சோயிப் மாலிக் பாக்கித்தான் 1 பெப்ரவரி 1982 (1982-02-01) (அகவை 39) வலக்கை வலக்கை எதிச்சுழல் வெளிநாட்டு வீரர்
10 ரவி பொப்பாரா இங்கிலாந்து 4 மே 1985 (1985-05-04) (அகவை 35) வலக்கை வலக்கை மிதவீச்சு வெளிநாட்டு
14 சரித் அசலங்கா இலங்கை 29 சூன் 1997 (1997-06-29) (அகவை 23) இடக்கை வலக்கை எதிர்ச்சுழல்
தெய்வேந்திரம் தினோசன் இலங்கை 26 மார்ச்சு 2002 (2002-03-26) (அகவை 18) வலக்கை வலக்கை வேகம்
குச்சக் காப்பாளர்கள்
18 மினோத் பானுக்க இலங்கை 29 ஏப்ரல் 1995 (1995-04-29) (அகவை 25) இடக்கை
50 சதுரங்க டி சில்வா இலங்கை 17 சனவரி 1990 (1990-01-17) (அகவை 31) இடக்கை மெதுவான இடது-கை வழமைச் சுழல்
25 ஜோன்சன் சார்ல்சு செயிண்ட். லூசியா 14 சனவரி 1989 (1989-01-14) (அகவை 32) வலக்கை வலக்கை விரைவு வீச்சு வெளிநாடு
23 டொம் மூர்சு இங்கிலாந்து 4 செப்டம்பர் 1996 (1996-09-04) (அகவை 24) இடக்கை வெளிநாடு
பந்து வீச்சாளர்கள்
82 சுரங்க லக்மால் இலங்கை 10 மார்ச்சு 1987 (1987-03-10) (அகவை 33) வலக்கை வலக்கை மத்திம விரைவு வீச்சு
பினுர பெர்னாண்டோ இலங்கை 12 சூலை 1995 (1995-07-12) (அகவை 25) வலக்கை இடக்கை மத்திம விரைவு
பிரபாத் ஜெயசூரிய இலங்கை 5 நவம்பர் 1991 (1991-11-05) (அகவை 29) வலக்கை மெதுவான இடது-கை வழமைச் சுழல்
14 உஸ்மான் கான் சின்வாரி பாக்கித்தான் 5 சனவரி 1994 (1994-01-05) (அகவை 27) வலக்கை இடக்கை மெதுவான விரைவு வெளிநாடு
87 கைல் அபொட் தென்னாப்பிரிக்கா 18 சூன் 1987 (1987-06-18) (அகவை 33) வலக்கை வலக்கை விரைவு-மத்திமம் வெளிநாடு
74 துவான் ஒலிவியர் தென்னாப்பிரிக்கா 9 மே 1992 (1992-05-09) (அகவை 28) வலக்கை வலக்கை விரைவு-மத்திமம் வெளிநாடு
மகேசு தீக்சன இலங்கை 1 சனவரி 2000 (2000-01-01) (அகவை 21) வலக்கை வலக்கை எதிர்ச்சுழல்
கனகரத்தினம் கபில்ராஜ் இலங்கை 12 சூலை 1999 (1999-07-12) (அகவை 21) வலக்கை வலக்கை மத்திவ-விரைவு
விஜயகாந்த் வியாசுகாந்த் இலங்கை 5 திசம்பர் 2001 (2001-12-05) (அகவை 19) வலக்கை நேர்ச்சுழல்
செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ் இலங்கை வலக்கை வலக்கை விரைவு

மூலம்: இலங்கை துடுப்பாட்ட வாரியம், 2020[9]

நிருவாகிகளும், ஊழியர்களும்[தொகு]

பதவி பெயர்
இணை-உரிமையாளர், தலைமை அதிகாரி ஐக்கிய இராச்சியம் ஆனந்தன் ஆர்னல்டு
இணை-உரிமையாளர் கனடா ராகுல் சூட்
முகாமையாளர் இங்கிலாந்து ஹரி வாகீசன்
தலைமைப் பயிற்சியாளர் இலங்கை திலின கந்தம்பே
வழிகாட்டி இந்தியா ஹேமங் பதானி
விரைவுப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் இலங்கை மரியோ வில்லவராயன்
சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் இலங்கை சச்சித் பத்திரான
களத்தடுப்புப் பயிற்சியாளர் இலங்கை விமுக்தி தேசப்பிரிய

சிறப்புகள்[தொகு]

லீக்[தொகு]

தரவுகள்[தொகு]

பருவம் வாரியாக[தொகு]

ஆண்டு ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவில்லை % வெற்றி நிலை சுருக்கம்
2020 10 6 3 1 66.67% 3/5 வாகையாளர்கள்
மொத்தம் 10 6 3 1 66.67%

இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020

  • மூலம் :ESPNcricinfo[10]

எதிரணிகள் வாரியாக[தொகு]

எதிரணி ஆட்டங்கள் வெற்றி தோல்வி மு.இ % வெற்றி
கொழும்பு கிங்க்சு 2 0 2 0 0.00%
தம்புள்ளை வைக்கிங் 3 2 0 1 100.00%
காலி கிளேடியேட்டர்சு 3 3 0 0 100.00%
கண்டி டசுக்கர்சு 2 1 1 0 50.00%

இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]