உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி
North Kalimantan Communist Party
Parti Komunis Kalimantan Utara
சுருக்கக்குறிNKCP
தலைவர்வென் மிங் சுயான்
தொடக்கம்
  • 19 செப்டம்பர் 1965 (நடைமுறையில்)[1]
  • 19 செப்டம்பர் 1971 (de jure)
கலைப்பு17 அக்டோபர் 1990
இளைஞர் அமைப்புசரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (SAYA)[2]
துணை இராணுவப் பிரிவு
  • சரவாக் மக்கள் கெரில்லா படை (SPGF)[3]
  • வடக்கு கலிமந்தான் மக்கள் இராணுவம் (NKPA/Paraku)[3]
கொள்கை
அரசியல் நிலைப்பாடுஇடது சாரி
நிறங்கள்Red

வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (ஆங்கிலம்: North Kalimantan Communist Party (NKCP); மலாய்: Parti Komunis Kalimantan Utara (PKKU); சீனம்: 北加里曼丹共產黨;) என்பது 1971-ஆம் ஆண்டில், மலேசியா, வடக்கு போர்னியோ (சரவாக்) மாநிலத்தில் இயங்கிய ஒரு கம்யூனிச அரசியல் கூட்டணியாகும்.[4]

இந்தக் கட்சி, 19 செப்டம்பர் 1971-இல் நிறுவப்பட்டது. அதற்கு முன், சரவாக் மக்கள் கெரில்லா படை (Sarawak People's Guerilla Force) என்ற பெயரில் இயங்கி வந்தது. வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியின் தலைவர் வென் மிங் சியுவான் (Wen Ming Chyuan); மற்றும் இந்தக் கட்சி மக்கள் சீனக் குடியரசு நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது.[5][2]

பொது

[தொகு]

சரவாக்கின் கம்யூனிச கிளர்ச்சியின் போது, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில் இரண்டு முக்கிய இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன:

சரவாக்கில் முன்பு சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL); சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) (SAYA) உட்பட பல கம்யூனிச மற்றும் இடதுசாரி குழுக்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் மூலம், 1970 மார்ச் மாதம் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி நிறுவப்பட்டது.[2]

சரவாக் விடுதலை இயக்கம்

[தொகு]

1949-இல் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) நிறுவப்பட்ட பிறகு, சரவாக் வெளிநாட்டுச் சீன சனநாயக இளைஞர் கழகம் (Sarawak Overseas Chinese Democratic Youth League) உருவாக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில், சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL) போன்ற பல சிறிய கம்யூனிச குழுக்களை உள்வாங்கி, சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1971-இல் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (North Kalimantan Communist Party) நிறுவப்பட்டது.[6]

வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில், நன்கு பயிற்சி பெற்ற கம்யூனிச பங்கேற்பாளர்கள் 800 - 1,000 பேர் இருந்ததாக அரசாங்க சான்றுகள் மதிப்பிட்டுள்ளன. தவிர சரவாக் கம்யூனிச இயக்கங்களில் ஒட்டு மொத்தமாக 24,000 பங்கேற்பாளர்கள் இருந்ததாகவும் மதிப்பிட்டுள்ளது.

1990 அக்டோபர் 17-ஆம் தேதி, வடக்கு கலிமந்தன் கம்யூனிச கட்சி, சரவாக் மாநில அரசாங்கத்துடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் பின்னர் சர்வாக்கில் நடைமுறையில் இருந்த சரவாக் கம்யூனிச கிளர்ச்சி முறையாக ஒரு முடிவுக்கு வந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Hara 2005.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Hara 2005, ப. 489–513
  3. 3.0 3.1 Chan & Wong 2011
  4. Cheah Boon Kheng2009, ப. 132–52
  5. Fong 2005, ப. 183–192
  6. Justus, M; Kroef, VD (February 1964). "Communism and the Guerrilla War in Sarawak". Royal Institute of International Affairs 20 (2): 50-60. https://www.jstor.org/stable/40393581. பார்த்த நாள்: 17 December 2022. 

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  • Hara, Fujiol (December 2005). "The North Kalimantan Communist Party and the People's Republic of China". The Developing Economies 43 (4): 489–513. doi:10.1111/j.1746-1049.2005.tb00956.x. 

வெளி இணைப்புகள்

[தொகு]