உள்ளடக்கத்துக்குச் செல்

மர வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிக உயரத்தில் அமைந்த மோண்ட் பிளாங்க் மலையின் மர வரிசைகள்
அல்பைன் மர வரிசைகள்

மர வரிசை அல்லது மரக் கோடு (tree-line or timberline) வட துருவம், தென் துருவம், மற்றும் ஆல்ப்ஸ் போன்ற பிரதேசங்களில் மரங்கள் வளரக்கூடிய விளிம்புப் பகுதியாகும். மர வரிசைப் பகுதிகளுக்கு அப்பால் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில் அப்பகுதியில் மிக மோசமான குளிர் அல்லது கடும் வெப்ப நிலை கொண்ட தட்பவெப்பம் கொண்டிருப்பதால் மரங்கள் வளர இயலாது.

சூழலியல் மற்றும் நிலவியல் கொள்கைகளின் படி, மர வரிசைகள் பல வகையாக விளக்கப்படுகிறது. அவைகள் முறையே:

  • ஆர்க்டிக் மர வரிசை (Arctic tree-line) வடதுருவத்தின் தூர வடக்கில் அமைந்த தூந்திரப் பகுதிகளில் மிகக்கடுமையான குளிர்நிலையும், உறைபனிக்கட்டிகளும் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மாறாக பாசிகள், புல், புதர்கள் மட்டுமே வளரக்கூடியதாகும்.
  • அண்டார்க்டிக்கா மர வரிசை (Antarctic tree-line) தென் துருவத்தின் தூர தெற்கில், மேட்டு நிலங்களில் வளரக்கூடிய மர வரிசையாகும்.
  • அல்பைன் மர வரிசை (Alpine tree-line): ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மிக உயரமான பகுதிகள், ஆண்டு முழுவதும் கடும் குளிரும், தரைப்பகுதிகள் உறைபனி மூடிக் கொண்டிருப்பதால் இப்பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை. மர வரிசைக்கு மேல் அமைந்த பகுதியில் ஆல்ப்ஸ் தட்பவெப்பம் நிலவுகிறது.
  • வெளிப்பாடு மர வரிசை (Exposure tree-line): கடற்கரை பிரதேசங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளில், வலுவான காற்று வீசுவதின் காரணமாக மரங்கள் வளர்வது தடை செய்யப்படுகிறது.
  • பாலவன மர வரிசை (Desert tree-line): மிகமிகக் குறைவான மழை பொழியும் பாலைவனப் பகுதிகளில் மரங்கள் வளர்வதில்லை.
  • நச்சு மர வரிசை (Toxic tree-line):எரிமலை குழம்புகள் வெளிப்படுத்தும் நச்சு வாயுக்கள், நச்சு வேதிப் பொருட்கள் சூழ்ந்த மலைப்பகுதிகளிலும், உப்பு நீர் கொண்ட சாக்கடல் மற்றும் பெரிய உப்பு ஏரி பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடுவதால் மரங்கள் வளர்வதில்லை.
  • ஈரப்பத மர வரிசை (Wetland tree-line): உவர் நீர் கொண்ட சதுப்புநிலம் மற்றும் நீர்த்தடம் கொண்ட ஈரப்பதம் மிக்க நிலங்களில் ஆக்சிசன் மிகவும் குறைவாக இருப்பதால் மரங்கள் வளர்வதில்லை. உவர் நீரையும், குறைந்த ஆக்சிசனைக் கொண்டு வளரும் குட்டையான அலையாத்தித் தாவரங்கள் மட்டுமே இவ்வகையான நிலங்களில் வளரும் தன்மைக் கொண்டது.
பனியால் மூடப்பட்ட ஆல்ப்ஸ் மர வரிசைகள், போலந்து

வழக்கமான மர வரிசை இனங்கள்

[தொகு]
ஆர்க்டிக்கின் வடகிழக்கின் சைபீரியாவின் மர வரிசை
  • தகுரியன் லார்ச் (Dahurian Larch) மர வரிசை[1]
  • நரி வால் பைன் மர வரிசைகள் (Foxtail Pine) [2]
  • பைனஸ் லாங்கியா (Pinus longaeva) [3]
  • பைனஸ் அரிஸ்டாடா (Pinus aristata) [4]
  • பைனஸ் கல்மினிகோலா (Pinus culminicola) [5]
  • பைனஸ் பியுசு (Pinus peuce) [6]
  • பைனஸ் அல்பிகௌலிஸ் (Pinus albicaulis) [7]
  • சுவிஸ் பைன் மரங்கள் [8]
  • மலை பைன் மரங்கள் (Pinus mugo)
  • பனிக்கோந்து மரங்கள் (Eucalyptus pauciflora) (Hartweg's Pine) (Pinus hartwegii)

அல்பைன் மர வரிசைகள் கொண்ட பகுதிகள்

[தொகு]
அமைவிடம் நிலநேர்க்கோடு மர வரிசையின் சராசரி உயரம் குறிப்புகள்
(மீ) (அடி)
சுவீடன் 68°N 800 2600
நார்வே 61°N 1100 3600 கடல் மட்டத்திற்கு கீழ்
சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் 46°N 2100 6900 தெற்கு ஆல்ப்ஸ்யை விட உயரம் கொண்டது.
நியூ ஹாம்சயர் 44°N 1220 4000 மண் அரிப்பால், தீயாலும் இம்மலையின் உச்சிகளின் கீழ் மர வரிசைகள் உள்ளது.
வயோமிங் 43°N 3000 9800
ராக்கி தேசியப் பூங்கா[9] 40°N 3500 11500
ஜப்பானிய ஆல்ப்ஸ் 39°N 2900 9500
யாசிமிட்டி தேசியப் பூங்கா, ஐக்கிய அமெரிக்க நாடு [10] 38°N 3600 11800 சியாரோ நிவேடாவின் கிழக்கில்
இமயமலை 28°N 4400 14400
ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடு 20°N 2800 9000 Precipitation low above the Wind#Planetary wind belts
கோஸ்ட்டா ரிக்கா 9.5°N 3400 11200
கிளிமஞ்சாரோ மலை, டான்சானியா 3°S 3000 9800
நியூ கினி 6°S 3900 12800
ஆண்டீஸ், பெரு 11°S 3900 12800 கிழக்குப் பகுதி
சியாரா டி கோர்டபா, அர்கெந்தீனா 31°S 2000 6560
ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா 36°S 2000 6560 ஆஸ்திரேலியா ஆல்ப்ஸ்சின் மேற்குப் பகுதி
ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ், ஆஸ்திரேலியா 36°S 1700 5580 ஆஸ்திரேலியா ஆல்ப்ஸ்சின் கிழக்குப் பகுதி
தெற்குத் தீவு, நியூசிலாந்து 43°S 1200 3940

ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா மர வரிசைகள்

[தொகு]

ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்கா துருவப் பகுதிகளின் மர வரிசைகள், புவியியல், ஆற்றுச் சமவெளிகள், கடல் நீரோட்டங்கள் பொறுத்து, துருவ மரவரிசைகள் மாறுபடுகிறது.

அமைவிடம் நிலநிரைக்கோடு நிலநடுக்கோடு குறிப்பு
நார்வே 24°Q 71°N வட அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தால் இப்பகுதி, பிற பகுதிகளை விட சற்றுக் கூடுதல் வெப்பம் நிலவுகிறது.
மேற்கு சைபீரியச் சமவெளிகள் 75°R 66°N
மத்திய சைபீரியாப் பீடபூமி 102°S 72°N Extreme continental climate means the summer is warm enough to allow tree growth at higher latitudes, extending to 72°30'N at Ary-Mas (102° 27' E) in the Novaya River valley, a tributary of the Khatanga River.
ருசியாவின் தூர கிழக்கு (கம்சாத்கா) மற்றும் (சுக்சி தீபகற்பம்) 160°E 60°N The Oyashio Current and strong winds affect summer temperatures to prevent tree growth. The Aleutian Islands are almost completely treeless.
அலாஸ்கா 152°W 68°N Trees grow north to the south facing slopes of the Brooks Range. The mountains block cold air coming off of the Arctic Ocean.
கனடாவின் வடமேற்கு நிலப்பரப்புகள் 132°W 69°N Reaches north of the Arctic Circle due to the continental nature of the climate and warmer summer temperatures.
நுனாவுட் 95°W 61°N Influence of the very cold Hudson Bay moves treeline southwards.
கியூபெக் 72°W 56°N Very strong influence of the Labrador Current on summer temperatures. In parts of Labrador, Canada, the treeline extends as far south as 53°N.
கிறீன்லாந்து 50°W 64°N Determined by experimental tree planting in the absence of native trees due to isolation from natural seed sources; a very few trees are surviving, but growing slowly, at Søndre Strømfjord, 67°N.
தியாரா டெல் பியூகோ, சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகள் 69°W 55°S Tree growth reaches very close to the southernmost point of South America, with the limit related to extreme exposure rather than climate.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  • Arno, S. F. & Hammerly, R. P. 1984. Timberline. Mountain and Arctic Forest Frontiers. The Mountaineers, Seattle. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-085-7
  • Ødum, S. 1979. Actual and potential tree-line in the North Atlantic region, especially in Greenland and the Faroes. Holarctic Ecology 2: 222-227.
  • Ødum, S. 1991. Choice of species and origins for arboriculture in Greenland and the Faroe Islands. Dansk Dendrologisk Årsskrift 9: 3-78.
  • Beringer, J., Tapper, N. J., McHugh, I., Lynch, A. H., Serreze, M. C., & Slater, A. 2001. Impact of Arctic treeline on synoptic climate. Geophysical Research Letters 28 (22): 4247-4250.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர_வரிசை&oldid=4060278" இலிருந்து மீள்விக்கப்பட்டது