நிப்பானிய ஆல்ப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிப்பானிய ஆல்ப்சு (சப்பானிய ஆல்ப்சு, சப்பானிய மொழியில் நிகோன் ஆருபுசு) என்பது நிப்பான் நாட்டின் ஒன்சூ தீவினை இரண்டாகப் பிரிக்கும் மலைத்தொடர் ஆகும். இச்சொல் சப்பானிய அகழ்வாராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் கௌலேண்டு என்பவரால் ஆளப்பட்டது. கௌலேண்டு அவர்கள் குறிப்பாக இதா மலைக்கு இப்பெயரிட்டாலும் இது தற்காலத்தில் மலைத்தொடருக்கே உரித்தாக விளங்குகிறது. ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்சு மலையின் தட்பவெப்ப நிலை இங்கு நிலவியதால் இம்மலைக்கு சப்பானிய ஆல்ப்சு எனப் பெயரிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிப்பானிய_ஆல்ப்சு&oldid=1381515" இலிருந்து மீள்விக்கப்பட்டது