உள்ளடக்கத்துக்குச் செல்

பொலோனியம் டெட்ராபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் டெட்ராபுரோமைடு
இனங்காட்டிகள்
60996-98-7
InChI
  • InChI=1S/4BrH.Po/h4*1H;/q;;;;+4/p-4
    Key: MOAWHUMOOBCMOF-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22753593 (charge error)
  • Br[Po](Br)(Br)Br
பண்புகள்
Br4Po
வாய்ப்பாட்டு எடை 528.62 g·mol−1
தோற்றம் வெளிர் சிவப்பு திண்மம்[1]
கரைதிறன் எத்தனால் கரைசலில் கரையும்[2]
புரோமின் கரைசலில் கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (படிக முறை)
புறவெளித் தொகுதி Fm3m (No. 225)
Lattice constant a = 5.6 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொலோனியம் டெட்ராபுளோரைடு
பொலோனியம் நாற்குளோரைடு
பொலோனியம் டெட்ரா அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் செலீனியம் டெட்ராபுரோமைடு
தெலூரியம் டெட்ராபுரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொலோனியம் டெட்ராபுரோமைடு (Polonium tetrabromide) என்பது PoBr4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

200 ° செல்சியசு வெப்பநிலை முதல் 250 °செல்சியசு வெப்பநிலை வரையிலான வெப்பநிலையில் புரோமின் மற்றும் பொலோனிம் தனிமங்கள் நேரடியாக வினைபுரிந்தால் பொலோனியம் டெட்ராபுரோமைடு உருவாகும்.[2]

பொலோனியம் டெட்ரா அயோடைடைப் போலவே, பொலோனியம் டையாக்சைடும் ஐதரசன் புரோமைடும் வினைபுரிந்தாலும் பொலோனியம் டெட்ராபுரோமைடு உருவாகும்:[2]

PoO2 + 4 HBr → PoBr4 + 2 H2O

பண்புகள்

[தொகு]

பொலோனியம் டெட்ராபுரோமைடு ஒரு வெளிர் சிவப்பு நிற திடப்பொருளாகும். இது எளிதில் நீர்த்துப்போகும் தன்மை கொண்டது.[1] கனசதுரப் படிக அமைப்பில், இடக்குழு Fm3m (எண். 225) மற்றும் அணிக்கோவை அளவுரு a = 5.6 Å என்ற அளவுடன் படிகமாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 P. E. Figgins (1961), The Radiochemistry of Polonium, National Academies, p. 13
  2. 2.0 2.1 2.2 2.3 M. Schmidt, W. Siebert, K. W. Bagnall (October 2013). The Chemistry of Sulphur, Selenium, Tellurium and Polonium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. p. 960-961. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1483158655.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. H. J. Emeléus, A. G. Sharpe (January 1962). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080578535.