தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை (National Policy on Education) இந்தியாவில் கல்வியை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசால் வடிவமைக்கப்பட்ட ஆவணம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளது. முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கமும், இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை 1986-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கமும், மூன்றாவது தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமும் வெளியிட்டன.[1]
வரலாறு
[தொகு]1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய அரசாங்கம் கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் கல்வியறிவு பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி நிதியுதவி செய்தது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சா் அபுல் கலாம் ஆசாத், நாடு முழுவதும் கல்வியை வலுவான ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ், ஒரு சீரான கல்வி முறையுடன் கொண்டு வர திட்டமிட்டார். இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கோடு திட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு பல்கலைக்கழக கல்வி ஆணையம் (1948-1949), இடைநிலைக் கல்வி ஆணையம் (1952–1953), பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் கோத்தாரி ஆணையம் (1964–66) ஆகியவற்றை நிறுவியது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு அறிவியல் கொள்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றியது. நேரு அரசு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற உயா்-தர அறிவியல் ரீதியான கல்வி நிறுவனங்களை நிறுவ நிதியுதவி வழங்கியது. 1961-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தை (NCERT) கல்விக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உருவாக்கியது.[2]
1968
[தொகு]கோத்தாரிக் கல்விக் குழுவின் (1964-1966) அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரதம மந்திரி இந்திரா காந்தி அரசு 1968-ஆம் ஆண்டில் கல்விக்கான முதல் தேசிய கொள்கையை அறிவித்தது, இது "தீவிர மறுசீரமைப்புக்கு" அழைப்பு விடுத்ததன்றி, ஒருங்கிணைப்பு மற்றும் அதிக கலாச்சார-பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்துருவாக கொண்டது.[3] இந்திய அரசியலமைப்பு ஆணையின்படி, 14 வயதிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி நிறைவேற்றுவதற்கான கொள்கை மற்றும் ஆசிரியர்களின் சிறந்த பயிற்சி மற்றும் தகுதி ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக சமமான கல்வி வாய்ப்புகளை முன்மொழிந்தது.[3] இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆசிரியர்களின் சிறப்புப் பயிற்சி மற்றும் தகுதி ஆகியவற்றால் வகுக்கப்பட்டுள்ள, 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வியை நிறைவேற்றக் இக்கொள்கை அழைப்பு விடுத்தது. இடைநிலைக் கல்வியில் செயல்படுத்தப்பட வேண்டிய ஆங்கில மொழி, பள்ளி இருக்கும் மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழி, மற்றும் இந்தி மொழி ஆகிய மும்மொழிக் கொள்கையை கோடிட்டுக் காட்டி பிராந்திய மொழிகளைக் கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கொள்கை அழைப்பு விடுத்தது.[3] அறிவுஜீவிகளுக்கும் வெகுஜனங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க மொழிக் கல்வி இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளும் முடிவு சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பொதுவான மொழியை ஊக்குவிக்க இந்தியின் பயன்பாடு மற்றும் கற்றல் ஒரே சீராக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கொள்கை அழைப்பு விடுத்தது.[3] இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் இன்றியமையாத பகுதியாகக் கருதப்பட்ட பண்டைய சமசுகிருத மொழியைக் கற்பிப்பதை இந்தக் கொள்கை ஊக்குவித்தது. 1968-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை கல்விச் செலவினங்களை தேசிய வருமானத்தில் ஆறு சதவீதமாக அதிகரிக்க அழைப்பு விடுத்தது.[4] 2013-ஆம் ஆண்டின் போது, தேசிய கல்விக் கொள்கை, 1968, தேசிய இணையதளத்தில் இடம் மாறிவிட்டது.[5]
1986
[தொகு]1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.[6] புதிய கொள்கை, "வேறுபாடுகளை அகற்றுதல் மற்றும் கல்வி வாய்ப்பு சமப்படுத்துதல்" ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததானது, குறிப்பாக இந்திய பெண்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு சாதகமாக அமைந்தது.[6] அத்தகைய ஒரு சமூக ஒருங்கிணைப்பை அடைய கல்வி உதவித்தொகையை விரிவுபடுத்துதல், வயது வந்தோர் கல்வி, பட்டியலிடப்பட்ட சாதியினரிடமிருந்து அதிக ஆசிரியர்களை நியமித்தல், ஏழை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதற்கான ஊக்குவிப்பு, புதிய நிறுவனங்களை உருவாக்குதல், மற்றும் வீட்டுவசதி மற்றும் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை கொள்கை ஆதரித்தது.[6] தேசிய கல்விக் கொள்கை ஆரம்பக் கல்வியில் "குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு" அழைப்பு விடுத்தது, மேலும் நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக "கரும்பலகை திட்டம்" தொடங்கப்பட்டது.[7] இக்கொள்கை 1985-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் திறந்த பல்கலைக்கழக முறையை விரிவுபடுத்தியது.[7] மகாத்மா காந்தியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட "கிராமப்புற பல்கலைக்கழக" மாதிரியை உருவாக்கவும் கிராமப்புற இந்தியாவின் அடிமட்ட அளவில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கொள்கை அழைப்பு விடுத்தது.[7] 1986-ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.[8]
1992
[தொகு]1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை 1992-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசால் மாற்றியமைக்கப்பட்டது.[9]
தேசிய கல்வி கொள்கை 1986-இன் கீழ் 1992-ஆம் ஆண்டின் செயல் திட்டமானது, நாட்டில் தொழில் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் சேருவதற்கு அகில இந்திய அடிப்படையில் ஒரு பொது நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டது. பொறியியல் மற்றும் கட்டிடக்கலை / திட்டங்களில் சேர, அக்டோபர் 18, 2001 தேதியிட்ட தீர்மானம், மூன்று நிலை தேர்வுத் திட்டத்துக்கு வழிவகுத்தது (தேசிய அளவில் கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination - JEE) மற்றும் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகள் (All India Engineering Entrance Examinations - AIEEE) ஆகிய தேர்வுகளும், மாநில அளவிலான நிறுவனங்களுக்கு AIEEE விருப்பத்துடன், மாநில அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வுகள் (State Level Engineering Entrance Examinations - SLEEE) ஆகியவை). இந்த திட்டங்களில் பல்வேறு சேர்க்கை தரநிலைகளை இது கவனித்துக் கொள்வதுடன், தொழில்முறை தரநிலைகளை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இது நுழைவுத் தேர்வுகளின் பெருக்கம் காரணமாக மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மேலோட்டப் பிரச்சினைகள் மற்றும் உடல், மன மற்றும் நிதி சுமையை குறைக்கிறது.
இக்கல்விக் கொள்கையை செயல்படுத்திட 23 சிறப்புப் பணிக்குழுக்களை அமைத்தது. இவை கீழ்கண்ட பணிகளைச் செய்கின்றன.
- கல்வியின் தற்போதய நிலையை மதிப்பிடுவது
- தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது
- நிதி ஆதாரங்களை உரிய முறையில் செலவிடுவது
23 சிறப்பு பணிக்குழுக்கள்
[தொகு]- திட்டத்தை செயல்படுத்துதல்
- பள்ளிக் கல்வியின் பாடப்பொருள் மற்றும் செயல்முறைகள்
- பெண்களுக்கான கல்வியில் சம வாய்ப்பு
- தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி
- சிறுபான்மையினருக்கான கல்வி
- சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கல்வி
- வயது வந்தோர் மற்றும் தொடக்கக்கல்வி
- முன் மழலைப் பருவக் கல்வி
- தொடக்கக் கல்வி
- இடைநிலைக் கல்வி மற்றும் நவோதயா வித்யாலயா
- தொழிற்கல்வி
- உயர்கல்வி
- திறந்த வெளிப்பல்கலைக் கழகம் மற்றும் தொலை வழிக் கல்வி
- தொழில் நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மை
- ஆய்வு மேம்பாடு
- தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கல்வித் தொழில் நுட்பவியல்
- வாழ்வியல் நோக்கிற்கான கல்வி
- பண்பாட்டுத் தொலை நோக்கு மற்றும் மொழிக் கொள்கையை நிறைவேற்றுதல்
- உடற்கல்வி மற்றும் யோகா
- மதிப்பீட்டு வழிமுறை மற்றும் தேர்வு முறை மாற்றம்
- ஆசிரியர் பயிற்சி
- கல்வி மேலாண்மை
- ஊரகப் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்கள்
இத்துடன் தேசிய கல்வி கொள்கையின் செயல்திட்ட ஆவணம் 7 உட்பிரிவிகளையும் உள்ளடக்கி உள்ளது.[10]
2005-ஆம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் "பொது குறைந்தபட்ச திட்டத்தின்" அடிப்படையில் ஒரு புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டார்.[11]
2020
[தொகு]2019-ஆம் ஆண்டில், அப்போதைய கல்வி அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல பொது ஆலோசனைகள் நடத்தப்பட்டன[12]. அத்தியாவசிய கற்றல், விமர்சன சிந்தனை மற்றும் முழுமையான அனுபவ, விவாத மற்றும் பகுப்பாய்வு அடிப்படையிலான கற்றல், ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பாடத்திட்ட உள்ளடக்கத்தை குறைப்பது பற்றி இது விவாதிக்கிறது.[13] குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியின் அடிப்படையில் மாணவர்களுக்கான கற்றலை மேம்படுத்தும் முயற்சியில் 10+2 அமைப்பிலிருந்து 5+3+3+4 அமைப்பு வடிவமைப்பிற்கு பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பின் திருத்தம் பற்றியும் இது பேசுகிறது. பட்டப்படிப்பின் கடைசி ஆண்டில் ஆராய்ச்சி முறை சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் படிப்பை விட்டு வெளியேறி, அதன் படி சான்றிதழ் / பட்டத்தைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு விருப்பம் அளிக்கப்படும்.
2020 சூலை 29 அன்று, இந்திய கல்வி முறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் 2026 வரை படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது[14].
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சர்மா, சஞ்சய் (29 சூலை 2020). "தேசிய கல்விக் கொள்கை 2020: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்" (in en). டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆன்லைன்) இம் மூலத்தில் இருந்து 2 சூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210702065430/https://timesofindia.indiatimes.com/home/education/news/national-education-policy-2020-all-you-need-to-know/articleshow/77239854.cms.
- ↑ NCERT சுயவிவரப் பிரசுரங்கள். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு. http://www.ncert.nic.in/html/pdf/FinalNCERT_ProfileBrochures.pdf. பார்த்த நாள்: 9 சனவரி 2024.
- ↑ 3.0 3.1 3.2 3.3 தேசிய தகவல் மையம். தேசியத் தகவல் மையம். பக். 38–45. http://www.education.nic.in/policy/npe-1968.pdf. பார்த்த நாள்: 10 சனவரி 2024.
- ↑ "தேசியத் தகவல் மையம்". PDF (தேசியத் தகவல் மையம்): 38–45. https://www.education.gov.in/hi/schemes-hindi. பார்த்த நாள்: 10 சனவரி 2024.
- ↑ http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/NPE-1968.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 6.0 6.1 6.2 "தேசிய கல்விக் கொள்கை, 1986". தேசிய தகவல் மையம். pp. 38–45. Archived from the original on 19 சூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 10 சனவரி 2024.
- ↑ 7.0 7.1 7.2 "தேசிய கல்விக் கொள்கை, 1986". தேசிய தகவல் மையம். pp. 38–45. பார்க்கப்பட்ட நாள் 2009-07-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ திலக், ஜன்த்யால பி.ஜி. (2006). "கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்குவது பற்றி" (in en). பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ் 41 (7): 613–618. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4417837. பார்த்த நாள்: 25 சூன் 2022.
- ↑ "தேசிய கல்விக் கொள்கை, 1986 (1992 இல் மாற்றியமைக்கப்பட்டது)" [National Policy on Education, 1986 (As modified in 1992)] (PDF) (in ஆங்கிலம்). அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். Archived from the original (PDF) on 26 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2024.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ முனைவர் எஸ்.லட்சுமியின் தலைமையிலான வளநூலாசிரியர் குழு (2009). தமிழ் டிஜிடல் நூலகம் இந்திய கல்வி முறை (Indian Education System). தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை. pp. 63–65.
{{cite book}}
: Check|url=
value (help) - ↑ "அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகள்" [AIEEE] (in ஆங்கிலம்). அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். Archived from the original on 13 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2024.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "மாநில கல்வி வாரியங்கள் தேசிய அமைப்பால் கட்டுப்படுத்தப்படும்: வரைவு தேசிய கல்விக் கொள்கை" (in en). டைம்ஸ் ஆஃப் இந்தியா (IN) இம் மூலத்தில் இருந்து 11 சனவரி 2024 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/screenshot/https://timesofindia.indiatimes.com/home/education/news/state-education-boards-to-be-regulated-by-national-body-draft-nep/articleshow/71816449.cms.
- ↑ மட்டூ, அமிதாப் (16 நவம்பர் 2019). "கல்வியை பொதுப் பொருளாகக் கருதுதல்" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191120094339/https://www.thehindu.com/opinion/lead/treating-education-as-a-public-good/article29986292.ece.
- ↑ "புதிய கல்விக் கொள்கை 2020 சிறப்பம்சங்கள்: அனைத்து நிறுவனங்களும் ‘லாபத்திற்காக அல்ல’ நிறுவனங்களாக தணிக்கை செய்யப்பட வேண்டும்" (in en). இந்தியன் எக்ஸ்பிரஸ் (புதுதில்லி) இம் மூலத்தில் இருந்து 29 சூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200729174409/https://indianexpress.com/article/education/new-education-policy-2020-live-updates-cabinet-approves-nep-ramesh-pokhriyal-prakash-javadekar-6529139/.