உள்ளடக்கத்துக்குச் செல்

டெரா ஆஸ்திராலிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ்
1570ஆம் ஆண்டு அப்ரகாம் ஓர்டெலியசு வரைந்த நிலப்படத்தில் "டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் நோன்டம் காக்னிடா" என்ற பெயரில் பெரும் கண்டம் ஒன்று நிலப்படத்தின் அடியில் காட்டப்பட்டுள்ளது; ஆர்க்டிக் கண்டம் என்று காட்டப்பட்டுள்ளதையும் காண்க.
வகைகருதுகோள்வழி கண்டம்
குறிப்பிடத்தக்க அமைவிடங்கள்படாலிசு

டெரா ஆஸ்திராலிசு (Terra Australis, இலத்தீனப் பொருள்: தெற்கு நிலம்) பண்டைக்காலத்தில் கருதுகோளாக முன்மொழியப்பட்ட கண்டம் ஆகும்; 15ஆவது முதல் 18ஆவது நூற்றாண்டு வரை இது நிலப்படங்களிலும் காட்டப்பட்டு வந்தது. நிலப்படங்களில் இந்த நிலப்பகுதி காட்டப்பட்டபோதும் எந்தவொரு நில அளவையும் மேற்கொள்ளப்பட்டதில்லை. வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நிலப்பகுதிகளுக்கு சமனாக தெற்கிலும் நிலப்பகுதி இருக்க வேண்டும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இது வரையப்பட்டது.[1] இத்தகைய நிலச் சமன்பாடு கருதுகோள் 5ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தப்பட்டு மாக்ரோபியசு வரைந்த நிலப்படங்களில் ஆஸ்திரேலியசு என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.[2]

1800களின் துவக்கத்தில் பிரித்தானிய கடலோடி மேத்தியூ பிலிண்டர்சு ஆத்திரேலியாவிற்கு டெரா ஆஸ்டிராலிசின் பெயரைச் சூட்டி பரவலாக அறியச் செய்தார்; ஆத்திரேலியாவிற்குத் தெற்கே குறிப்பிட்டளவிலான நிலப்பகுதி "இருக்க வாய்ப்பில்லை" என்பது இவரது முன்மொழிவாக இருந்தது.[3] 1814இல் வெளியான எ வாயேஜ் டூ டெரா ஆஸ்திராலிசு என்ற நூலில் பிலிண்டர்சு இதைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல பத்தாண்டுகளுக்குப் பின்னரே தற்போது அண்டார்ட்டிக்கா எனப் பெயரிடப்பட்டுள்ள கண்டம் இருப்பது தெரிய வந்தது; ஆனால் அதற்குள் ஆஸ்திரேலியா என்ற பெயர் பரவி விட்டதால் அண்டார்ட்டிக்காவிற்குப் புதிய பெயர் சூட்ட வேண்டியதாயிற்று.

கெரார்டு டெ யோடு, யுனிவர்சி ஓர்பிசு செயு டெர்ரெனி குளோபி, 1578. இதில் டெரா ஆஸ்திராலிசு நியூ கினி வரை இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

அந்தாட்டிக்கா

[தொகு]

டெரா ஆஸ்ட்ராலிசு கருத்தியல்படி அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் அந்தாட்டிக்கா 1820இல் முதன்முதலாக கண்டறியப்பட்டது. டெரா ஆஸ்ட்ராலிசின் முழுமையான அளவு கண்டறியப்பட்ட பின்னர் தெற்கு அரைக்கோளத்தில் வடக்கை விட குறைவான நிலப்பகுதியே இருப்பது அறியப்பட்டது. டெரா ஆஸ்ட்ராலிசில் இரு சிறு கண்டங்களே இருப்பது கண்டறியப்பட்டது: அந்தாட்டிக்கா & ஆத்திரேலியா.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. John Noble Wilford: The Mapmakers, the Story of the Great Pioneers in Cartography from Antiquity to Space Age, p. 139, Vintage Books, Random House 1982, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-75303-8
  2. Ambrosius Aurelius Theodosius Macrobius, Zonenkarte. Retrieved 7 July 2014.
  3. Matthew Flinders, A voyage to Terra Australis (Introduction). Retrieved 25 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரா_ஆஸ்திராலிசு&oldid=2697161" இலிருந்து மீள்விக்கப்பட்டது