டனாக்
டனாக் (தனாக்) என்பது யூதர்களுக்கு புனித நூலாகிய யூத விவிலியத்தின் தொகுப்பைக் குறிக்கும் பெயர் ஆகும். இது எபிரேயத்தில் תַּנַ"ךְ (Tanakh) என்று எழுதப்படும். அதன் ஒலிப்பு taˈnaχ அல்லது təˈnax என்று வரும் (Tenakh, Tenak, Tanach போன்ற சொல் வடிவங்களும் உண்டு)[1]
டனாக் என்னும் சுருக்கப் பெயர் தோரா (Torah), நவியீம் (Nevi'im), கெதுவிம் (Ketuvim) என்னும் மூன்று எபிரேயச் சொற்களின் முதல் எழுத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைச்சொல் ஆகும் (அதாவது: TaNaKh). இச்சொல் எபிரேய விவிலியத்தின் மூன்று பகுதிகளையும் கீழ்வருமாறு குறித்துநிற்கிறது:
- தோரா (Torah): இதன் பொருள் "படிப்பினை" என்பதாகும். இதில் விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் அடங்கும். இவற்றை மோசே எழுதினார் என்பது மரபு.[2]
- நவீம் (Nevi'im): இதன் பொருள் "இறைவாக்கினர் நூல்கள்" என்பதாகும்.[3]
- கெத்துவிம் (Ketuvim): இதன் பொருள் "எழுத்துப் படைப்புகள்" என்பதாகும்.[4]
தனாக் நூல்களின் எண்ணிக்கை
[தொகு]யூத மரபுப்படி, தாநாக்கில் அடங்கியுள்ள நூல்கள் 24 ஆகும். அவை பின்வருமாறு:
- தோரா - ஐந்து நூல்கள்
- நவீம் - எட்டு நூல்கள்
- கெத்துவிம் - பதினொரு நூல்கள்.
தோரா நூல் வரிசை
[தொகு]- 1. Bereshith – தொடக்க நூல்
- 2. Shemot – விடுதலைப் பயணம்
- 3. Vayikra – லேவியர்
- 4. Bamidbar – எண்ணிக்கை
- 5. Devarim – இணைச் சட்டம்
நவீம் நூல் வரிசை
[தொகு]- 6. (יהושע / Y'hoshua) – யோசுவா
- 7. (שופטים / Shophtim) – நீதித் தலைவர்கள்
- 8. (שמואל / Sh'muel) – 1 சாமுவேல்; 2 சாமுவேல். (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன).
- 9. (מלכים / M'lakhim) – 1 அரசர்கள்; 2 அரசர்கள். (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)
- 10. (ישעיה / Y'shayahu) – எசாயா
- 11. (ירמיה / Yir'mi'yahu) – எரேமியா
- 12. (יחזקאל / Y'khezqel) – எசேக்கியேல்
- 13. The Twelve Prophets (תרי עשר) - பன்னிரு இறைவாக்கினர்கள்:
- a. (הושע / Hoshea) – ஓசேயா
- b. (יואל / Yo'el) – யோவேல்
- c. (עמוס / Amos) – ஆமோஸ்
- d. (עובדיה / Ovadyah) – ஒபதியா
- e. (יונה / Yonah) – யோனா
- f. (מיכה / Mikhah) – மீக்கா
- g. (נחום / Nakhum) – நாகூம்
- h. (חבקוק /Havakuk) – அபக்கூக்கு
- i. (צפניה / Ts'phanyah) – செப்பனியா
- j. (חגי / Khagai) – ஆகாய்
- k. (זכריה / Z'kharyah) – செக்கரியா
- l. (מלאכי / Mal'akhi) – மலாக்கி
(இப்பன்னிரு சிறு நூல்களும் ஒரே சுருளில் அடங்கியிருந்ததால் ஒரே நூலாக எண்ணப்பட்டன)
கெத்துவிம் நூல் வரிசை
[தொகு]- 14. (תהלים / Tehillim) – திருப்பாடல்கள்
- 15. (משלי / Mishlei) – நீதிமொழிகள்
- 16. (איוב / Iyov) – யோபு
The "Five Megilot" / "Five Scrolls": ஐந்து சுருள்கள்:
- 17. (שיר השירים / Shir Hashirim) – இனிமைமிகு பாடல்
- 18. (רות / Rut) – ரூத்து
- 19. (איכה / Eikhah) – புலம்பல்
- 20. (קהלת / Kohelet) – சபை உரையாளர்
- 21. (אסתר / Esther) – எஸ்தர்
பிற கெதுவிம் (எழுத்துப் படைப்புகள்):
- 22. (דניאל / Dani'el) – தானியேல்
- 23. (עזרא ונחמיה / Ezra v'Nechemia) – எஸ்ரா; நெகேமியா. (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)
- 24. (דברי הימים / Divrei Hayamim) – 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு. (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- Serve-A-Verse – Free online Hebrew Bible Explorer with audio, translation and transliteration of all 39 books of the Hebrew Bible.
- Lev Software – Download the complete Tanakh in Hebrew with vowels, translation and transliteration.
- Judaica Press Translation of Tanakh with Rashi's commentary Free online translation of Tanakh and Rashi's entire commentary
- Illustrated Summary and Analysis of the Torah (first 5 books of the Tanakh)
- Hebrew-English Tanakh: the Jewish Bible பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம் – Online edition of the oldest known complete Masoretic text of the Hebrew Bible (including contillation marks) placed next to classic Jewish translation; can be used on most Internet-connected computers and mobile devices.
- Download Hebrew-English Tanakh: the Jewish Bible (use code 5772) – The oldest known complete Masoretic text of the Hebrew Bible (including contillation marks) placed next to classic Jewish translation; can be used on any computer or mobile device.
- Mechon Mamre – The Hebrew text of the Tanakh based on the Aleppo codex and other Tiberian manuscripts close to it, edited according to the system of Rabbi Mordechai Breuer.
- Jewish Links for Online Judaica Resources (Anshe Emet Synagogue) பரணிடப்பட்டது 2015-10-03 at the வந்தவழி இயந்திரம் – free online primary Jewish sources and resources.
- Unicode/XML Westminster Leningrad Codex – A free transcription of the electronic source maintained by the Westminster Hebrew Institute.