உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய தாழைக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய தாழைக்கோழி
போட்சுவானாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜக்கானிடே
பேரினம்:
மைக்ரோபார்ரா

கேபானிசு, 1877
இனம்:
மை. கேபென்சிசு
இருசொற் பெயரீடு
மைக்ரோபார்ரா கேபென்சிசு
(சுமித், 1839)

சிறிய தாழைக்கோழி (Lesser jacana)(மைக்ரோபார்ரா கேபென்சிசு) என்பது ஜகானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது மைக்ரோபரா பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2]

விளக்கம்

[தொகு]

சிறிய தாழைக்கோழி பெயருக்கு ஏற்றார்போல மிகச் சிறிய மற்றும் பொதுவாக அசாதாரணமான காணப்படும் தாழைக்கோழியாகும். முதிர்ச்சியடைந்த பறவைகளின் முகடு, மார்பு, தொடை மற்றும் வால் முதலிய பகுதிகள் பழுப்பு நிறத்தில் காணப்படும் இளம் வயது பறவைகள் மந்த நிறத்தில் காணப்படும் இது தனித்துவமாக பறக்கக்கூடியது. அடர்த்தியான தாவரங்கள் நிறைந்த ஈரநிலங்களில், குறிப்பாக நீர் அல்லிகள் உள்ள இடங்களில் காணப்படும். மாறிவரும் நீர் நிலைகளுக்கு ஏற்ப இடம்பெயரும் தன்மையுடையன.[3]

காணப்படும் நாடுகள்

[தொகு]

சிறிய தாழைக்கோழி, அங்கோலா, போட்சுவானா, புர்கினா பாசோ, புருண்டி, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு , சாட், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எசுவாத்தினி, கோட் டிவார், எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மாலி, மூரித்தானியா, மொசாம்பியா, நமீபியா, நைஜீரியா, உருவாண்டா, சியரா லியோனி, தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, உகாண்டா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இதன் முதன்மை வாழ்விடங்கள் கடலோர மற்றும் உள்நாட்டு ஈரநிலங்கள் மற்றும் நீர்வழிகள் ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2017). "Microparra capensis". IUCN Red List of Threatened Species 2017: e.T22693536A111720873. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22693536A111720873.en. https://www.iucnredlist.org/species/22693536/111720873. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "ITIS Report: Microparra". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
  3. "Lesser Jacana - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  4. "Microparra capensis". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/classify/22693536/0. பார்த்த நாள்: 25 September 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_தாழைக்கோழி&oldid=3497313" இலிருந்து மீள்விக்கப்பட்டது