எண்ணிக்கை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rw:Igitabo cyo Kubara
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bar:Numeri
வரிசை 61: வரிசை 61:
[[ar:سفر العدد]]
[[ar:سفر العدد]]
[[ast:Númberos]]
[[ast:Númberos]]
[[bar:Numeri]]
[[bg:Числа (Библия)]]
[[bg:Числа (Библия)]]
[[ca:Llibre dels Nombres]]
[[ca:Llibre dels Nombres]]

12:42, 18 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

மோசே பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தல் (எண் 20:1-13). ஓவியர்: பர்த்தலமே முரில்லோ (1618-1682). இசுபானியா.

எண்ணிக்கை (எண்ணாகமம்) (Numbers) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) நான்காவது நூலாக இடம்பெறுவதாகும்.

நூல் பெயர்

"எண்ணிக்கை" என்னும் இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Bəmidbar" அதாவது "பாலைநிலத்தில்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "arithmoi" (Αριθμοί = எண்கள்) என்பதாகும்.

நூலின் மையப்பொருள்

இசுரயேல் மக்கள் கணக்கெடுப்பு நிகழ்ந்தது தவிர, அவர்களுக்கு காதேசு-பர்னேயாவில் நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள், மக்கள்மேல் அக்கறைகொண்டு அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.

அதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

எண்ணிக்கை நூல் உட்கிடக்கை

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. இசுரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல்

அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு
ஆ) சட்டங்களும் விதிமுறைகளும்
இ) இரண்டாம் பாஸ்கா

1:1 - 9:23

1:1 - 4:49
5:1 - 8:26
9:1-23

197 - 215

197 - 205
205 - 214
214 - 215

2. சீனாய் மலை முதல் மோவாபு வரை 10:1 - 21:35 215 -237
3. மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42 237 - 257
4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1-49 257 - 258
5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13 258 - 263
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிக்கை_(நூல்)&oldid=745344" இலிருந்து மீள்விக்கப்பட்டது