புதன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரிவாக்கம்
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
சி Jamil2K பக்கம் புதன் (நவக்கிரகம்) என்பதை புதன் (இந்து சமயம்) என்பதற்கு நகர்த்தினார்: புதன் (நவக்கிரகம்) என்ற பெயர் புதன் கிரகத்தை மட்டுமே குறிக்கும் அஃறிணைப் பெயர் போல் உள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

06:19, 16 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

புதன்
அதிபதிபுதன்
தேவநாகரிबुध
தமிழ் எழுத்து முறைபுதன்
வகைநவக்கிரகம்
கிரகம்புதன் கோள்
துணைஇலா

இந்துத் தொன்மவியலில், புதன் (Budha, சமக்கிருதம்: बुध) என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.

தோற்றம்

சந்திர தேவன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் கிரக அந்தஸ்தினைப் பெற்றார். அத்துடன் பிரஜாபதியான தட்சனின் இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் மணம் முடித்தார். அதனால் ஆணவம் கொண்டவராக மாறினார். அத்துடன் தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையை கவர்ந்து சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருடன் இணைந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது.

பிரம்ம தேவர் அந்தப் போரை நிறுத்தி, சந்திர தேவரிடமிருந்து தாரைவை மீட்டார். ஆனால் தாரா கற்பமாக இருந்தார் என்பதால் பிரகஸ்பதி அவரை ஏற்கவில்லை. தாராவிற்கு குழந்தை பிறந்த பொழுது, அக்குழந்தை அழகும், ஒளியும் உடையதாக இருந்தது. அதனால் புதன் என்று அழைக்கப்பட்டார். [1]

இவற்றையும் காண்க


மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. வாயு புராணம் - சோமன் வரலாறு பகுதி

வெளி இணைப்புகள்

வாயு புராணம் - தினமலர் கோயில்கள் தளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=புதன்_(இந்து_சமயம்)&oldid=2553471" இலிருந்து மீள்விக்கப்பட்டது