அல்லாஹ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: mt:Alla
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Allah
வரிசை 73: வரிசை 73:
[[lv:Allāhs]]
[[lv:Allāhs]]
[[mhr:Аллах]]
[[mhr:Аллах]]
[[min:Allah]]
[[mk:Алах]]
[[mk:Алах]]
[[ml:അല്ലാഹു]]
[[ml:അല്ലാഹു]]

12:51, 9 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அரபு மொழி எழுத்துகளில் அல்லாஹ்

அல்லாஹ் அல்லது அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின் ).அதை போன்றே பன்மையும் இல்லை.இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.

Edirne Eski Camii-க்கு வெளியே அல்லாஹ் என்ற எழுத்துகளும் ஒரு பெண்ணும்

'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிரிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. "பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5)

கலிமா

ஒவ்வொரு முஸ்லிமும் ஓரிறைக்கொள்கையை உறுதிபடுத்திக்கொள்ள "'வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை. 'லா என்பதற்க இல்லை என்று பொருள் , இலாஹ் என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள். இல்லா என்பதற்கு தவிர என்று பொருள், அல்லாஹ் என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். ஆக "லா இலாஹ இல்லல்லாஹ் என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை" என்று பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாஹ்&oldid=1317861" இலிருந்து மீள்விக்கப்பட்டது