இந்தியாவில் தொலைக்காட்சி
இந்தியாவில் தொலைக்காட்சித் துறை (Television in India) என்பது மிகவும் மாறுபட்டது. மேலும் இந்தியாவின் பல உத்தியோகபூர்வ மொழிகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. அனைத்து இந்திய குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு தொலைக்காட்சியை வைத்திருக்கிறார்கள்.[1] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 857 [2] தொலைக்காட்சி நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 184 கட்டணத் தொலைக்காட்சிகளாகும்.[3][4]
வரலாறு
[தொகு]1950 ஆம் ஆண்டு சனவரியில், இந்தியன் எக்சுபிரசு சென்னையின் தேனாம்பேட்டையில் ஒரு மின்பொறியியல் மாணவரான பி. சிவகுமார் என்பவரால் ஒரு தொலைக்காட்சி காட்சிக்கு வைக்கப்பட்டதாக அறிவித்தது.
முதல் ஒளிபரப்பு
[தொகு]ஒரு கடிதம் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் படம் எதிர்மின் கதிர் குழாய்திரையில் காட்டப்பட்டது. அந்த அறிக்கை "இது முழு தொலைக்காட்சி அல்ல, ஆனால் இது நிச்சயமாக கணினியின் மிக முக்கியமான இணைப்பாகும்" என்று கூறியதுடன், இந்த வகையான நிகழ்வு "இந்தியாவில் முதலாக" இருக்கலாம் என்றும் கூறியது.[5]
கொல்கத்தா, நியோகி குடும்பத்தின் வீட்டில் தொலைக்காட்சி முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் தொழில்மயமாக்கலுக்கு ஒரு பெரிய மைல்கல்லாக இருந்தது. இந்தியாவில் நிலப்பரப்பு தொலைக்காட்சி செப்டம்பர் 15, 1959 அன்று தில்லியில் ஒரு சிறிய டிரான்ஸ்மிட்டர் மற்றும் ஒரு தற்காலிக அரங்கத்துடன் சோதனை ஒளிபரப்புடன் தொடங்கியது.[6]
அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக 1965 இல் தினசரி ஒலிபரப்பு தொடங்கியது. தொலைக்காட்சி சேவை பின்னர் 1972 இல் மும்பை மற்றும் அமிர்தசரஸ் வரை நீட்டிக்கப்பட்டது. 1975 வரை, ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன.[7] செயற்கைக்கோள் அறிவுறுத்தல் தொலைக்காட்சி பரிசோதனை (SITE) என்பது தொலைக்காட்சியை வளர்ச்சிக்கு பயன்படுத்த இந்தியாவால் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான படியாகும்.[8] இந்த நிகழ்ச்சிகள் முக்கியமாக தூர்தர்ஷன் தயாரித்தன. அது அப்போது அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக இருந்தது. ஒளிபரப்பு ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்தது. விவசாயம், சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான தகவல்களைத் தவிர இந்த திட்டங்களில் கையாளப்பட்ட மற்ற முக்கியமான தலைப்புகளாகும். நடனம், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் கிராமப்புற கலை வடிவங்களிலும் பொழுதுபோக்கு சேர்க்கப்பட்டது. தொலைக்காட்சி சேவைகள் 1976 இல் வானொலியில் இருந்து பிரிக்கப்பட்டன. தேசிய ஒளிபரப்பு 1982 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில், வண்ணத் தொலைக்காட்சி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1980கள்
[தொகு]இந்திய சிறிய திரை நிரலாக்கங்கள் 1980 களின் முற்பகுதியில் தொடங்கியது.[9] இந்த நேரத்தில், அரசாங்கத்திற்கு சொந்தமான தூர்தர்ஷன் என்ற ஒரு தேசிய தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. ஒரே பெயர்களில் இந்திய காவியங்களை அடிப்படையாகக் கொண்ட இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை தயாரிக்கப்பட்ட முதல் பெரிய தொலைக்காட்சித் தொடர்களாகும். இவைகள் பார்வையாளர் எண்ணிக்கையில் உலக சாதனையைப் பதிவு செய்தன. 1980 களின் பிற்பகுதியில், அதிகமான மக்கள் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருக்கத் தொடங்கினர்.
பிரசார் பாரதி
[தொகு]ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்தபோதிலும், தொலைக்காட்சி நிரலாக்கமானது செறிவூட்டலை எட்டியது. எனவே அரசாங்கம் தேசிய ஒளிபரப்பு மற்றும் பகுதி பிராந்தியங்களைக் கொண்ட மற்றொரு நிறுவனத்தைத் திறந்தது. இது டிடி 2 என அழைக்கப்பட்டது. பின்னர் டிடி மெட்ரோ என மறுபெயரிடப்பட்டது. இரண்டும் தரைவழியே ஒளிபரப்பப்பட்டன. 1997 ஆம் ஆண்டில், பிரசார் பாரதி, என்ற ஒரு சட்டரீதியான தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டது. அகில இந்திய வானொலியுடன் தூர்தர்ஷனும் பிரசார் பாரதியின் கீழ் அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன.[10] பிரசார பாரதி நிறுவனம் நாட்டின் பொது சேவை ஒளிபரப்பாளராக பணியாற்றுவதற்காக நிறுவப்பட்டது. இது அகில இந்திய வானொலி மற்றும் தூர்தாஷன் மூலம் அதன் நோக்கங்களை அடைகிறது. இது தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலிக்கு அதிக சுயாட்சியை நோக்கிய ஒரு படியாகும். இருப்பினும், தூர்தர்ஷனை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து காப்பாற்றுவதில் பிரசார் பாரதி வெற்றிபெறவில்லை.
முக்கிய நிகழ்ச்சிகள்
[தொகு]1980 களில் ஹம் லோக் (1984-1985), வாக்லே கி துனியா (1988), புனியாத் (1986-1987) மற்றும் பரவலாக பிரபலமான புராண நாடகங்களைத் தவிர யே ஜோ ஹை ஜிந்தகி (1984) போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் இராமாயணம் (1987-1988) மற்றும் மகாபாரதம் (1989-1990) போன்றவையும், பின்னர் சந்திரகாந்தா என்றத் தொடரும் (1994-1996) தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. இந்தி திரைப்பட பாடல்கள் அடிப்படையிலான நிகழ்ச்சிகளான சித்ராஹார், ரங்கோலி, சூப்பர்ஹிட் முகாப்லா மற்றும் கரம்சந்த், பியோம்கேஷ் பக்ஷி போன்ற நாடகங்களும் ஒளிபரப்பப்பட்டன. குழந்தைகளை குறிவைத்த நிகழ்ச்சிகளில் திவ்யான்ஷு கி கஹானியன், விக்ரம் வேதாள், மால்குடி டேஸ், தெனாலி ராமா ஆகியவையும் அடங்கும். 1982 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவில் வண்ண தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை பெங்காலி திரைப்படத் தயாரிப்பாளர் பிரபீர் ராய்க்கு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியான நேரு கோப்பையின் போது நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. அதே ஆண்டு நவம்பரில் நடந்த தில்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தூர்தர்ஷன் இதைத் தொடங்கியது.[11]
தனியார் நிறுவனக்களின் வருகை
[தொகு]1991இல் பிரதமர் நரசிம்ம ராவின் கீழ் மத்திய அரசு தொடர்ச்சியான பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களைத் தொடங்கியது. புதிய கொள்கைகளின் கீழ் தனியார் மற்றும் வெளிநாட்டு ஒளிபரப்பாளர்களை இந்தியாவில் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்கம் அனுமதித்தது.[12] இந்த செயல்முறை அனைத்து அடுத்தடுத்த கூட்டாட்சி நிர்வாகங்களாலும் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
சி.என்.என், ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் ஜீ தொலைக்காட்சி, ஈ தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஏசியானெட் போன்ற தனியார் உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனக்களும் செயற்கைக்கோள் ஒளிபரப்பைத் தொடங்கின. 1962 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சியில் தொடங்கி, 1995 வாக்கில், இந்தியாவில் தொலைக்காட்சி 70 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியது. 100 க்கும் மேற்பட்ட சேனல்கள் மூலம் 400 மில்லியனுக்கும் அதிகமான நபர்களைப் பார்க்க வைக்கிறது.[13]
தொலைத்தொடர்பு ஊடகம்
[தொகு]இந்தியாவில் குறைந்தது ஐந்து அடிப்படை வகை தொலைக்காட்சிகள் உள்ளன: ஒளிபரப்பு அல்லது "வான் வழி" தொலைக்காட்சி, மறைகுறியாக்கப்பட்ட செயற்கைக்கோள் அல்லது "இலவசம்", வீட்டிற்கு நேரடியாக வரும் செய்மதித் தொலைக்காட்சி (டி.டி.எச்), கேபிள் தொலைக்காட்சி, இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி (ஐ.பி.டி.வி மற்றும்) மேலதிக ஊடக சேவைகள் (ஓ.டி.டி.) ஆகியவவை அடங்கும்
குறிப்புகள்
[தொகு]- ↑ "In India, the Golden Age of Television Is Now". https://www.nytimes.com/2007/02/11/business/yourmoney/11india.html.
- ↑ "List of Permitted Private Satellite TV Channels as on 31-01-2016" (PDF). mib.nic.in. Government Of India, Ministry of Information and Broadcasting. 31 January 2016. Archived from the original (PDF) on 19 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2016.
- ↑ 23.77 mn DTH subscribers by June 2010: Trai Business Standard
- ↑ "Is this the end of cable mafia?". http://www.mid-day.com/news/2012/jan/170112-Is-this-the-end-of-cable-mafia.htm.
- ↑ Seshadri, T. N. (6 January 1950). "Television Apparatus in Swadeshi Exhibition". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 May 2017.
- ↑ "Online Journal of Space Communication". spacejournal.ohio.edu. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.
- ↑ "Prasar Bharati looks at a turnaround". The Financial Express. 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.
- ↑ "Indian TV". mit.edu. Archived from the original on 29 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.
- ↑ Nkl SdWni (29 October 2014). Growth and reach of television in india. https://www.slideshare.net/nklsdwni9/growth-and-reach-of-television-in-india.
- ↑ "India's Public Regulatory".
- ↑ Chandran, Kannan (8 October 1982). "Indian TV goes colour for Games". The Straits Times: p. 13. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19821008-1.2.221.3. பார்த்த நாள்: 26 April 2018.
- ↑ Roy, Barun (2012). Beginner's Guide to Journalism & Mass Communication. p. 33.
- ↑ Unknown (28 March 2016). "Ranjan Velari's assignments: Development of Television in India and Television as a Medium of Education". Ranjan Velari's assignments. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.