இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இராமாயணம்
உருவாக்கம்ராமானந்த சாகர்
நடிப்புஅருண் கோவில்l
தீபிகா
சுனீல் லாகிரி
Sanjay Jog
அரவிந்த திரிவேதி
தாரா சிங்
விஜய் அரோரா
Sameer Rajda
Mulraj Rajda
லலிதா பவார்
நாடு இந்தியா
மொழிஇந்தி(மூலமுதலான)
தமிழ்
கன்னடம்
தெலுங்கு
மராத்தி
வன்காலம்
அத்தியாயங்கள்78
தயாரிப்பு
ஓட்டம்45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைதூர் தர்ஷன்(மூலமுதலான)
விஜய் தொலைக்காட்சி(தமிழில்)
ஒளிபரப்பான காலம்ஜனவரி 25, 1987 –
ஜுலை 31, 1988
Chronology
பின்னர்லவ் குசா

இராமாயணம் பெரும் வெற்றியடைந்த[1][2] இந்திய தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடர் இராமனாந்த சாகரால் எழுதி இயக்கப்பட்டது. ஜனவரி 25, 1987 முதல் சூலை 31, 1988 வரை தூர்தர்ஷனில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.[3]

இந்து சமயத் தொடர்புள்ள காவியமான இராமாயணத்தின் தொலைக்காட்சித் தழுவலே இத்தொடராகும். வால்மீகியின் இராமாயணம் மற்றும் துளசிதாசரின்' இராம்சரித்மனசை முதன்மையாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. இதில் சில பகுதிகள் கம்பரின் கம்ப ராமாயணத்திலிருத்தும் சிறிதளவு சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தத் தொடர் தற்போது விஜய் தொலைக்காட்சி -யில் சூன் 15 முதல் இரவு 7:30 மணிக்கு (தமிழில்) ஒளிபரப்பப்படுகிறது.

நடிகர்கள்[தொகு]

உருவாக்கம்[தொகு]

1986 ஆம் ஆண்டில் இராமனாத் சாகரின் தொலைக்காட்சித் தொடர் விக்ரம் ஆர் பீட்டல் ஒரளவு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இராமனாத் சாகர் தூர்தர்சனின் செயற்குழுவினரைச் சந்தித்து இராமாயணத்தின் தொலைக்காட்சித் தொடர் பதிப்பைத் தயாரிக்கும் விருப்பத்தைப் பற்றிக் கூறினார். இத்தொடர் சாகரின் வாழ்நாள் கனவாக இருந்தது. துவக்கத்தில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டு பிறகு இதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டாலும், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இன உணர்ச்சியைத் தூண்டலாம் என்ற எண்ணத்தின் காரணமாகத் தாமதிக்கப்பட்டது. இறுதியாக இத்தொடர் 52 எபிசோடுகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது (இத்தொடருக்கு பேரளவிலான மக்களின் ஆதரவின் விளைவாக இரண்டு முறை இதன் எபிசோடுகள் நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் 13 எபிசோடுகள் மூலம் நீட்டிக்கப்பட்டு மொத்தமாக 78 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன). மேலும் இதற்காகத் தொலைக்காட்சியை மக்கள் குறைவாகப் பார்க்கும் நேரமான ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது[4] ஒவ்வொரு எபிசோடுக்கும் சாகருக்கு இந்திய உரூபாயில் 1,00,000 ஐ தூர்தர்சன் கொடுத்தது.[சான்று தேவை]

மக்கள் ஆதரவும் செல்வாக்கும்[தொகு]

இராமாயணத்தின் ஒளிபரப்பு தொடங்கிய போது இத்தொடர் மிகப்பெரிய அளவில் மக்களிடம் பிரபலமடைந்து 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது.[2] முதலில் குறைவான நபர்களே பார்த்தாலும்,[4] இத்தொடருக்கான மக்களின் ஆதரவு ஒரு சமயத்தில் இந்தியா முழுவதும் வளர்ச்சிபெற்றது. இத்தொடருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு பற்றிக் குறிப்பிடும் போது இந்தியா டுடே செய்திப் பத்திரிகையானது "இராமயணக் காய்ச்சல்" எனப் பட்டப்பெயர் அளித்தது. (இந்து மற்றும் இந்து அல்லாத) சமய தொடர்புள்ள சேவைகளானது இந்நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இணங்கிப் போவதற்காக மறு திட்டமிடப்பட்டன; இரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் புகைவண்டிகள் இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நிறுத்தப்பட்டன; மேலும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்தில் கூடினர்.[2][5]

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இத்தொடர் குறித்து குறிப்பிடுகையில், "இராமாயணம் தொடரானது இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் கற்பனைகளைத் தூண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இந்தியத் திரைப்படங்களில் சமயத்தொடர்புள்ள கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதும் இராமாயணம் சமயத்தொடர்புள்ள கதைகளைச்[2] சார்ந்து எடுக்கப்பட்ட முதல் இந்திய தொலைக்காட்சித் தொடராக விளங்குகிறது. மேலும் பல பிற சமயத்தொடர்புள்ள தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்படுவதற்கு ஊக்கமூட்டுவதாகவும் அமைந்தது. எடுத்துக்காட்டாக பீ. ஆர். சோப்ராவின் மகாபாரதம் மற்றும் விஷ்வாமித்ரா, புத்தா மற்றும் சாகரின் லவ குசா மற்றும் கிருஷ்ணா போன்ற தொடர்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

தொடர் பற்றிய விமர்சனங்கள்[தொகு]

வேகமற்ற இசை, தொடர்பற்ற திரைக்கதை மற்றும் மோசமான தயாரிப்புத் தரத்தோடு இருப்பதால் துவக்கத்தில் இந்தத் தொடரை, நகர்சார்ந்த இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்தனர். இத்தொடருக்கு மக்களின் ஆதரவு பெருகியதில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான தொடராக (அந்த நேரத்தில்) இராமாயணம் மாறியது. எனவே பல விமர்சகர்கள் இந்தியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் கலந்துரையாடல்களை நிகழ்த்தியும், மக்களின் ஆர்வத்தை இவ்வளவு தூரம் பெறுவதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தனர்.[4]

உலக சாதனை[தொகு]

இராமாயணம் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விரைவிலேயே பெயர்பெற்றது. அதற்குப்பின், மறுஒளிபரப்பு மற்றும் வீடியோ தயாரிப்புகள் வழியாக இராமாயணம் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றது. மேலும் 2003 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை உலகில் அதிகமாகப் பார்க்கப்பட்ட புராணத் தொடராக லிம்கா புத்தகப் பதிவுகளில் சேர்க்கப்பட்டது.[6] '

துணைத்தயாரிப்புகள்[தொகு]

இத்தொடர் நிறைவுபெற்ற சிலவாரங்களில் துணைத்தயாரிப்பான உத்தர் இராமாயணம் (பின்னர் லவ குசா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்டது. இது இராமரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளினுள் கதையாகும்; இராமாயணத்தின் தயாரிப்பு குழு மற்றும் "இராமயணத்" தொடரில் நடித்த அதே நடிகர்களுடன் உருவாக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டில் சாகர் ஆர்ட்சின் மூலம் தயாரிக்கப்பட்ட இராமாயணத்தின் மறுதயாரிப்பானது என்.டி.டி.வி இமேசினில்(NDTV Imagine) ஒளிபரப்பப்பட்டது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Lutgendorf, Philip (1991). The Life of a Text: Performing the Ramcharitmanas of Tulsidas. Berkeley, California: University of California Press. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-06690-1. 
  2. 2.0 2.1 2.2 2.3 லுட்செண்டோர்ஃப், பீ., த லைஃப் ஆப் எ டெக்ஸ்ட், 411–412
  3. Lutgendorf, Philip (1990). "Ramayan: The Video". TDR/The Drama Review 34 (2): 127–176. doi:10.2307/1146030. பன்னாட்டுத் தர தொடர் எண்:10542043. http://www.jstor.org/stable/1146030. பார்த்த நாள்: 2009-08-08. 
  4. 4.0 4.1 4.2 Lutgendorf, Philip (2006). "All in the (Raghu) Family: A Video Epic in Cultural Context". in Hawley, John Stratton; Narayanan, Vasudha. The Life of Hinduism. The Life of Religion. Berkeley: University of California Press. பக். 140–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24913-4. 
  5. கார்ப், ஜோனதன் மற்றும் வில்லியம்ஸ், மைக்கேல். "இந்தியாவில் இந்து TV கடவுள்களின் ஆட்சியானது, பார்வையாளர்களை அவர்களது இருக்கையிலேயே ஒட்டவைத்துள்ளது." த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் , 22 ஏப்ரல் 1998
  6. "சாகர் ஆர்ட்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் லிம்கா புத்தகப் பதிவுகளின் சான்றிதழ்". 2009-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

இராமாயண வீடியோக்கள் ஆன்லைன்