அரச காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச காடை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கல்லிபார்ம்சு
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
சைனோயிகசு
இனம்:
சை. சைனென்சிசு
இருசொற் பெயரீடு
சைனோயிகசு சைனென்சிசு
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்
  • டெட்ராவ் சைனென்சிசு லின்னேயஸ், 1766
  • கோடர்னிக்சு சைனென்சிசு (லின்னேயஸ், 1766)
  • எக்சுகல்பாக்டரியா சைனென்சிசு லின்னேயஸ், 1766
சாம்சன்வேல், தென் கிழக்கு குயின்ஸ்லாந்து

அரச காடை (Synoicus chinensis-சைனோயிகசு சைனென்சிசு), நீலமார்புக் காடை, ஆசிய நீலக் காடை, சீன வர்ணக் காடை என்பது பாசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக காடை சிற்றினமாகும். இந்த சிற்றினம் மிகச்சிறிய காடை ஆகும். இது தெற்கு சீனா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முதல் ஓசியானியா வரை, தெற்கிலிருந்து தென்கிழக்கு ஆத்திரேலியா வரை 9 வெவ்வேறு துணையினங்களுடன் காடுகளில் உள்ளது. 1890களின் பிற்பகுதியில் இந்த சிற்றினத்தை நியூசிலாந்தில் அறிமுகப்படுத்த ஒடாகோ புதுச்சூழற்கிணங்கல் சமூகம் முயன்று அம்முயற்சியில் தோல்வியுற்றது. உலகளாவில் பறவை வளர்ப்பில் இது இடம்பெற்றுள்ளது. இது சில நேரங்களில் தவறாக "பொத்தான் காடை" என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் தொலைதூர தொடர்புடைய பறவைகளின் குடும்பமான பொத்தான் காடைகளின் பெயராகும்.

விளக்கம்[தொகு]

ஆண் அரச காடைகள் நீலம், பழுப்பு, வெள்ளி, செம்பழுப்பு, அடர் பழுப்பு, கருப்பு உட்பட பல வண்ணங்களில் காணப்படுகின்றன. இவற்றின் கால்கள் ஆரஞ்சு நிறத்தில் உள்ளன. இவற்றின் கால்கள் உறுதியானவை பல கல்லிபார்மஸ் பறவைகள் போலவே தரையில் தொடர்ச்சியாக வாழத் தக்க திறன் கொண்டவை. பெண் பறவைகள் ஆண் பறவைகளைப் போலவே இருக்கிறன. ஆனால் நீல நிற நிழல்களில் இருக்காது. பிடித்து வளர்க்கும் நிலையில் இவை 13 ஆண்டுகள் வரை வாழக்கூடியன. ஆனால் பொதுவாக இவற்றின் ஆயுள் 3-6 ஆண்டுகள் மட்டுமே.[சான்று தேவை] இவை காடுகளில் 1.5 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன. அரச காடையின் முட்டைகள் வெளிர், கிரீமி-பழுப்பு நிறத்தில் இருக்கும்.

வகைப்பாட்டியல்[தொகு]

இதில் ஆறு துணை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

இனப்பெருக்கம்[தொகு]

அரச காடை முட்டை மற்றும் 10 நாள் குஞ்சு
" எக்ஸ்கால்ஃபாக்டரியா சினென்சிஸ் " முட்டை

பெண் பறவைகளுடன் இணைய ஆண் பறவைகள் போராடுகின்றன. வெற்றியடையும் ஆண்பறவை பெண்ணுடன் இணை சேர்கிறது. இனச்சேர்கை நடந்த ஒன்று முதல் இரண்டு நாட்களுக்குள் பெண் பறவைகள் முட்டையிடுகின்றன. இவை முதலில் கூடு கட்டும் அல்லது தரையில் முட்டையிடும். பெண் பறவைகள் பொதுவாக தேவையான எண்ணிக்கையில் முட்டைகள் சேர்ந்த பிறகு மட்டுமே அடைகாக்கும். அதன் எண்ணிக்கை ஐந்து முதல் 13 முட்டைகள் வரை மாறுபடும். அடைகாக்கும் முன், தேவைப்படும் அனைத்து முட்டைகளும் இடப்பட்டிருக்கும். வளர்க்கப்படும் நிலையில், ஆறு முதல் எட்டு முட்டைகள் இட்ட பிறகு அடைகாக்கின்றன. சுமார் 16 நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கும்.

பாதுகாப்பு நிலை[தொகு]

ஆத்திரேலியா[தொகு]

அரச காடைகள் ஆத்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999 இன் படி அச்சுறுத்தளுக்கு உள்ளானதாக பட்டியலிடப்படவில்லை.

விக்டோரியா மாநிலம், ஆத்திரேலியா[தொகு]

இந்த இனம் விக்டோரியன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உத்தரவாதச் சட்டத்தில் (1988) படி அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக பட்டியலிடப்பட்டுள்ளது. [3] இந்தச் சட்டத்தின் கீழ், இந்த இனத்தின் மீட்பு மற்றும் எதிர்கால மேலாண்மைக்கான செயல் திட்டம் தயாரிக்கப்படவில்லை. [4]

விக்டோரியாவில் அச்சுறுத்தளுக்கு உள்ளான முதுகெலும்பி விலங்கினங்களின் 2007 ஆலோசனைப் பட்டியலில், இந்த இனம் அருகிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. [5]

பறவை வளர்ப்பு[தொகு]

இந்த காடைகள் பல ஆண்டுகளாக வைத்து இனப்பெருக்கம் செய்யப்பட்டதில் மிகவும் பிரபலமாகனதாக உள்ளது. பல மரபணுத் திரிபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காடைகளின் ஒரு பெரிய நன்மை என்னவென்றால், இவை தரையில் பிரத்தியேகமாக வாழ்கின்றன, மற்ற பறவைகளுக்கு தொந்தரவு தராது . [6] இவற்றை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் குறைந்த செலவே ஆகும். இவை கைக்கு அடக்கமானவையும் கூட.

உணவுமுறை[தொகு]

காடுகளில், அரச காடைகளின் உணவில் சிறிய பூச்சிகள், விதைகள், அந்த நேரத்தில் கிடைக்கும் பல்வேறு புற்கள் இடம்பெறுகின்றன. இவற்றை வளர்க்கும்போது, பலவிதமான விதைகள், ஆரோக்கியமான அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்கப்பட வேண்டும். இனப்பெருக்கத்தின் போது, முட்டை பிணைப்பைத் தடுக்க, கோழிகளுக்கு ஆளி ஓட்டுத்தூள் போன்ற சுண்ணாம்பு சத்து நிறைந்த பொருட்களைக் கொடுக்க வேண்டும். புதிதாக பொரித்தவ வந்த குஞ்சுகளுக்கு அதிக புரதச்சத்து கொண்ட துகள் உணவை சிறிது தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். புரதத்தம் மிக்க பிற உணவு ஆதாரங்களில் புழுக்கள் மற்றும் பல்வேறு பூச்சிகள் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Synoicus chinensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22678979A92797212. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22678979A92797212.en. https://www.iucnredlist.org/species/22678979/92797212. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Pheasants, partridges, francolins – IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2023-01-28.
  3. Department of Sustainability and Environment, Victoria பரணிடப்பட்டது 2005-07-18 at the வந்தவழி இயந்திரம்
  4. Department of Sustainability and Environment, Victoria பரணிடப்பட்டது 2006-09-11 at the வந்தவழி இயந்திரம்
  5. Victorian Department of Sustainability and Environment (2007). Advisory List of Threatened Vertebrate Fauna in Victoria – 2007. East Melbourne, Victoria: Department of Sustainability and Environment. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74208-039-0. 
  6. Don Harper, Pet Birds for the Home & Garden; Salamander Press

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Excalfactoria chinensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_காடை&oldid=3873954" இலிருந்து மீள்விக்கப்பட்டது