உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்காடை
Buttonquail
கருங்காடை வகைகளில் ஒன்று. Black-breasted buttonquail (Turnix melanogaster)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Turnicidae

GR Gray, 1840
Genera

 Turnix
 Ortyxelos

Distribution of the buttonquails

கருங்காடை (Buttonquail) இவை பசினெடிய (Phasianidae) என்ற குடும்பத்தில் சார்ந்த காடை வகையைச் சாராத ஒரு சிறிய பறவை பிரிவுகளில் உள்ள மஞ்சள் கால் காடை இனத்தில் சேர்க்கப்பட்ட பறவையாகும். பொதுவாக இந்தியத் துணைக்கண்டம், மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசுதிரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவற்றில் 16 வகையான இனங்களில் இரண்டு இனம் பேரினத்தில் சேருகிறது.[1]

கருங்காடைகள் மங்கிய பழுப்பு நிறம் கொண்ட இவை பறப்பதில்லை, ஆனால் வேகமாக ஓடும் திறன் கொண்டு காணப்படுகிறது. பெண் பறவை இனப்பெருக்கக் காலத்தில் வண்ணம் கூடி பிரகாசமாக காட்சி கொடுக்கிறது. கருங்காடை இனத்தில் ஆண் ஒரு பெண்ணுடன் உறவுப் பழக்கத்தில் உள்ளது. ஆனால் பெண் காடைகள் பல ஆண்களுடன் பழக்கம் கொண்டுள்ளது. இதனால் நிலத்தில் கூடுகட்டி முட்டையிட்டவுடன் ஆண் பறவை அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்கிறது. ஆனால் பெண் பறவை ஒன்றை ஒன்று பின் தொடர்ந்து வேறு ஆணுடன் சென்றுவிடுகிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர 12 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பின்னர் குஞ்சுகள் இரண்டு வாரங்களில் பறக்கத் துவங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Archibald, George W. (1991). Forshaw, Joseph (ed.). Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85391-186-0.

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கருங்காடை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்காடை&oldid=3834872" இலிருந்து மீள்விக்கப்பட்டது