உள்ளடக்கத்துக்குச் செல்

கசுதவ் ஹார்ட்லாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுதவ் ஹார்ட்லாப்

கரேல் ஜோகன் கசுதவ் ஹார்ட்லாப் (Gustav Hartlaub)(8 நவம்பர் 1814 - 29 நவம்பர் 1900) என்பவர் ஜெர்மன் மருத்துவர் மற்றும் பறவையியல் நிபுணர் ஆவார் .

இளமை

[தொகு]

ஹார்ட்லாப் பிரெமனில் 1814ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோட்டிங்கனில் மருத்துவத்தில் பட்டம் பெறுவதற்கு முன்பு பான் மற்றும் பெர்லினில் கல்வி பயின்றார்.

பறவையியல் ஆய்வு

[தொகு]

1840ஆம் ஆண்டில், இவர் கவர்ச்சியான பறவைகள் குறித்துப் படிக்கவும் சேகரிக்கவும் தொடங்கினார். இவர் சேகரித்த பறவைகளின் மாதிரிகளை பிரெமன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். இதில் சில வகைகள் இவரால் முதல் முறையாக விவரிக்கப்பட்டுள்ளன. 1852ஆம் ஆண்டில், இவர் ஜீன் கபானிஸ், ஜர்னல் ஃபர் ஆர்னிதோலஜி எனும் ஆய்விதழை நிறுவினார். இவர் ஓட்டோ ஃபின்ச், பெய்ட்ராக் ஜூர் ஃபானா சென்ட்ரல் பாலினீசியன்ஸ்: ஆர்னிதோலஜி டெர் விட்டி-, சமோவா அண்ட் டோங்கா- இன்செல்ன் உடன் எழுதினார். ஹாலே, எச். ஷ்மிட். வண்ண அச்சுப்பிரதிகள் 1867 பணியின் போது சேகரித்த பறவை மாதிரிகளை அடிப்படையாக கொண்டது. எடுவார்ட் ஹென்ரிக் கிராபி கோடெஃபெர்ரோய் அருங்காட்சியகத்திற்காகச் சேகரிக்கப்பட்டவை இவை.

கவுரவம்

[தொகு]

ஹார்ட்லாப்சு கொக்கு, ஹார்ட்லாப்சு டுராகோ, ஹார்ட்லாப்சு வாத்து மற்றும் ஹார்ட்லாப்சு கடற்காகம் உள்ளிட்ட பல பறவைகள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுதவ்_ஹார்ட்லாப்&oldid=3361530" இலிருந்து மீள்விக்கப்பட்டது