அன்சு ராஜ் அன்சு
அன்சு ராஜ் அன்சு | |
---|---|
அன்சு ராஜ் அன்சு (வலது) யுவராஜ் அன்சு உடன் | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23-மே-2019 | |
முன்னையவர் | உதிர் ராஜ் |
தொகுதி | வடமேற்கு தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஏப்ரல் 1962 சபிபூர், பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | நவராஜ் அன்சு & யுவராஜ் அன்சு |
இணையத்தளம் | www |
இசை வாழ்க்கை | |
பிறப்பிடம் | ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
இசைத்துறையில் | 1983–present |
அன்சு ராஜ் அன்சு (Hans Raj Hans) என்பவர் இந்தியப் பாடகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் மற்றும் பத்மசிறீ விருதைப் பெற்றவர்.[1]
இவர் பஞ்சாபி நாட்டுப்புறப் பாடல்கள் சூஃபி இசை மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடி வருகிறார். மேலும் தனது சொந்த முயற்சியின் காரணமாக 'பஞ்சாபி-பாப்' இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றார். கச்சே தாகே திரைப்படத்தில் நுசுரத் பதே அலி கான் போன்ற பிற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அன்சு ராஜ் அன்சு இந்தியாவின் பஞ்சாபில் ஜலந்தருக்கு அருகிலுள்ள சாபிபூர் கிராமத்தில் பிறந்தார். அன்சு ஜலந்தரில் உள்ள டி. ஏ. வி. கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.[3]
அன்சு தனது பதின்ம வயதிலிருந்தே, உஸ்தாத் புரான் ஷா கோடியிடம் பாடுவதில் பயிற்சி பெற்றார்.[4]
2014-ல், அன்சு ராஜ் இசுலாம் மதத்திற்கு மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவர் இதனை மறுத்தார்.[5][6]
இசை வாழ்க்கை
[தொகு]இளைஞனாக இருக்கும்போது, அன்சு இசையமைப்பாளர் சரஞ்சித் அஹுஜாவிடம் இசைக் கற்றுக்கொண்டார். பின்னர் பஞ்சாபி நாட்டுப்புற, பக்தி மற்றும் சூஃபி இசைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.[7] கச்சே தாகே படத்தில் நுசுரத் ஃபதே அலி கானுடன் இணைந்து பணியாற்றினார்.
அன்சு வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் சான் ஜோஸ் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கெளரவ இசைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.[8]
அரசியல் வாழ்க்கை
[தொகு]அன்சு சனவரி 2009-ல் சிரோமணி அகாலி தளம் கட்சியில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஜலந்தர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[9]
இவர் 18 திசம்பர் 2014 அன்று சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து விலகி பிப்ரவரி 2016-ல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[10]
பின்னர் திசம்பர் 10, 2016 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[11] அன்சு 2019 இந்திய பொதுத் தேர்தலில் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு உதித் ராஜை தோற்கடித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
இசைத்தொகுப்பு தரவுகள்
[தொகு]இசைத் திரட்டு
[தொகு]- 2017 முண்டே பஞ்சாபி
- 2014 ஜாது
- 2011 ஏக் இஷாஆஆ
- 2008 யாரா ஓ யாரா
- 2007 வஞ்சாரா
- 2004 தி நைட்
- 2003 தேரா இஷ்க்
- 2002 ஹாயே சோஹ்னியே
- 2002 காமா தி ராத்
- 2001 சப் டன் சோஹ்னி
- 2001 ஜஞ்சர்
- 2000 சொர்னி
- 1996 லால் கராரா
- 1994 மொஹபத்
- 1993 இஷ்கே டி பர்சாத்
- 1992 ஜஞ்சரியா
- 1992 ஆர் டுடி நா பார் டுடி
- 1991 தாஹ் கார்கே
- 1990 தேரா மேரா பியார்
- 1990 ஆஷிகான் டி கஹ்தி ஜிந்தகி
- 1990 வாரிஸ் பஞ்சாப் டி
- 1989 பலே நி ரஹே ரஹே
- 1987 ஏக் டாங் ஹோர் மர் ஜா
- 1987 ஏக் குரி மைனு ரஜ்ஹெயோன் ஃபகிர் கர் கை
- 1983 ஜோகியன் டி கண்ணா விச்
மும்பை திரைப்பட உலகில்
[தொகு]- 2018 சோனு கே டிடு கி ஸ்வீட்டி [13]
- 2011 மௌசம்
- 2011 பாட்டியாலா ஹவுஸ்
- 2008 பிளாக் & ஒயிட்
- 2002 பெக்காம் போல வளைக்கவும்
- 2002 23 மார்ச் 1931: ஷஹீத்
- 2001 நாயக்
- 2001 ஜோடி நம்பர். 1
- 2001 மான்சூன் வெட்டிங்
- 2000 பிச்சூ
- 1999 கச்சே தாகே
மதம் சார்ந்த பதிப்புகள்
[தொகு]- 2011 அம்ரித் வர்கா பானி (சர்தூல் சிக்கந்தருடன் ) வார்ல்டு மியூசிக்
- 2009 கோய் ஆன் மிளவாய் (சாந்த் அனூப் சிங் (உனா சாஹிப் வாலே) & பாய் மனிந்தர் சிங் (ஸ்ரீ நகர் வாலே)
- 2008 300 சாலா ஹஸூர் சாஹிப் (டி-சீரிஸ்)
- 2006 போலே சோ நிஹால் (சர்தூல் சிக்கந்தருடன்)
- 2006 சிகி தியான் ஷானா
- 2004 நிக்கே நிக்கே து கல்சே (டி-சீரிஸ்)
- 2003 வாடா மேரா கோவிந்த்
- 2000 அமிர்தரா
- 1997 மேரா பஜான் வாலா மாஹி
- 1991 பட்டா பட்டா சிங்கன் டா வைரி (டி-சீரிஸ்)
திரைப்படவியல்
[தொகு]- துப்பட்டா தேரா சத் ரங் தா (ஸீபிடு ரிக்கார்டு)
சுயசரிதை
[தொகு]- ராக்ஸ் டு ராகஸ்... மற்றும் அப்பால் - ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், ப்ரீத் இந்தர் தில்லான், பவர் வெளியிடு
பாராட்டுக்கள்
[தொகு]விருது வழங்கும் விழா | வகை | பெறுபவர் | முடிவு | மேற்கோள் |
---|---|---|---|---|
4வது மிர்ச்சி இசை விருதுகள் | ஆண்டின் சிறந்த ஆண் பாடகர் | பரிந்துரை | [14] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Patiala House". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/music/music-reviews/Patiala-House/articleshow/7302466.cms.
- ↑ "Distinguished Alumni". davjalandhar.com. Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2019-08-30.
- ↑ "Puran Shah Koti, the legendry guru of many Punjabi singers". Oneindia. 18 May 2009. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
- ↑ "Hans Raj Hans on AAP's Allegations That He Converted to Islam | ABP News". YouTube.
- ↑ "Lok Sabha Polls 2019: Hans Raj Hans Denies Conversion to Islam, Hits Out at "Liar" Kejriwal".
- ↑ If one thing falls in place... பரணிடப்பட்டது 26 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம். Hindustan Times (21 January 2011). Retrieved on 19 April 2013.
- ↑ "Melody is out, noise is in, says Hans Raj Hans". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029001659/http://articles.timesofindia.indiatimes.com/2003-06-29/chandigarh/27196682_1_hans-raj-hans-cadets-sufi-singer.
- ↑ "Punjabi singer Hans Raj Hans in LS battle from Jalandhar". business-standard.com. Press Trust of India. 27 April 2009. http://www.business-standard.com/article/economy-policy/punjabi-singer-hans-raj-hans-in-ls-battle-from-jalandhar-109042700181_1.html.
- ↑ "Singer Hans Raj Hans joins Congress". Tribune India இம் மூலத்தில் இருந்து 2019-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191102215923/https://www.tribuneindia.com/video/singer-hans-raj-hans-joins-congress/13896.html.
- ↑ Now, Hans ditches Congress for BJP பரணிடப்பட்டது 22 சனவரி 2018 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "BJP's Delhi List Out, Singer Hans Raj Hans Replaces Lawmaker Udit Raj". NDTV. 23 April 2019. https://www.ndtv.com/india-news/lok-sabha-polls-2019-bjp-announces-candidates-for-all-7-seats-in-delhi-singer-hans-raj-hans-replaces-2027210.
- ↑ "Dil Chori Remake Honey Singh in 2017". http://redmux.com/song/dil-chori-sada-ho-gaya/.
- ↑ "Nominations - Mirchi Music Award Hindi 2011". 30 January 2013. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.