நுசுரத் பதே அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுசுரத் ஃபதே அலி கான்
Picture taken 03.1987 - Copy.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு

அக்டோபர் 13, 1948(1948-10-13)


பைசிலாபாத், பஞ்சாப்
பாக்கித்தான்
இறப்பு ஆகத்து 16, 1997(1997-08-16) (அகவை 48)
இலண்டன், இங்கிலாந்து
இசை வடிவங்கள் கவ்வாலி, கசல்
தொழில்(கள்) இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்) பாடகர், ஆர்மோனியம்
இசைத்துறையில் 1965–1997

நுசுரத் ஃபதே அலி கான் (Nusrat Fateh Ali Khan, அக்டோபர் 13, 1948 – ஆகத்து 16, 1997) பாகிஸ்தான்|பாக்கித்தானைச் சேர்ந்த ஓர் உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார். இசுலாமியத்தின் ஓர் வகையான சுஃபிக்களின் பக்திப் பாடல்களின் வடிவான கவ்வாலி பாடுவதில் தேர்ந்தவர். குரல் வளம் மிக்க அலிகான் ஆறு கட்டைகள் வீச்சுடைய குரலால் உயர்ந்த சுருதியில் நீண்டநேரம் தொடர்ந்து பாடக்கூடியவர்.[1] 600 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கவ்வாலி இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பன்னாட்டளவில் இவ்வகை இசையைப் பரப்பக் காரணமாக இருந்தார்.[2][3] கவ்வாலியின் மன்னர் மன்னன் எனப் பொருள்படும் ஷாயென்ஷா-எ-கவ்வாலி என்ற பட்டத்தால் அறியப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. [3]
  4. Hommage à Nusrat Fateh Ali Khan (liner notes by Pierre-Alain Baud), 1999, Network, Germany.

மேலும் படிக்க[தொகு]

  • Baud, Pierre-Alain. Nusrat Fateh Ali Khan, The Messenger of Qawwali. Editions Demi-Lune, 2008. (நுசுரத்தின் வாழ்க்கைவரலாறு.)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுசுரத்_பதே_அலி_கான்&oldid=1359735" இருந்து மீள்விக்கப்பட்டது