உள்ளடக்கத்துக்குச் செல்

1989 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1989 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது நான்காவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (4th SAF Games) பாக்கிஸ்தானில் இசுலாமாபாத் நகரில் 1989 ஒக்டோபர் 20 முதல் ஒக்டோபர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 149 வீரர்களும், நேபாளத்திலிருந்து 185 வீரர்களும், இலங்கையிலிருந்து 132 வீரர்களும், மாலைதீவிலிருந்து 23 வீரர்களும் பங்கேற்றனர். இலங்கை அணிக்கு ஜுலியன்போலிங் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய பாக்கிஸ்தான் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள்

[தொகு]

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

[தொகு]
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 111
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 111
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 122
  • மொத்தப் பதக்கங்கள் -344

விளையாட்டுக்கள்

[தொகு]

அதிகாரபூர்வமாக 10 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

பதக்க நிலை

[தொகு]
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இந்தியா 61 43 20 124
2  பாக்கித்தான் 42 33 22 97
3  இலங்கை 6 10 21 37
4  நேபாளம் 1 13 32 46
5  வங்காளதேசம் 1 12 24 37
6  பூட்டான் 0 0 3 3
7  மாலைத்தீவுகள் 0 0 0 0

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]