உள்ளடக்கத்துக்குச் செல்

2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஒன்பதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (9TH SAF GAMES) பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் 2004 மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொண்டது. 103 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய பாக்கிஸ்தான் இரண்டாமிடத்தையும், இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. முதல் தடவையாக கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் 1 தங்கம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பங்குபெற்ற நாடுகள்

[தொகு]

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

[தொகு]
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 170
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 169
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 213
  • மொத்தப் பதக்கங்கள் - 552

விளையாட்டுக்கள்

[தொகு]

அதிகாரபூர்வமாக 20 விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

பதக்க நிலை

[தொகு]
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 இந்தியா1035732192
2 பாக்கித்தான்385550143
3 இலங்கை173257106
4 நேபாளம்762033
5 வங்காளதேசம்3132440
6ஆப்கானிஸ்தான்132832
7 பூட்டான்13206
8 மாலைத்தீவுகள்00000

ஆதாரம்

[தொகு]

    வெளி இணைப்புகள்

    [தொகு]