1984 தெற்காசிய விளையாடுப் போட்டிகள் அல்லது முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (1st SAF Games) நேபாளத் தலைநகர் கத்மண்டுவில்1984செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றது[1]. முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 113 பேரும், இலங்கையில் இருந்து 42 பேரும் கலந்து கொண்டனர். இலங்கை விளையாட்டு வீரர்கள் ஜுலியன் போலிங் தலைமையில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.