1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்வங்காளதேசம்டாக்கா, வங்காளதேசம்
பங்கெடுத்த நாடுகள்7
துவக்க விழாடிசம்பர் 20 1985
நிறைவு விழாடிசம்பர் 26 1985
திறந்து வைத்தவர்உசைன் முகம்மது எர்சாத்
முதன்மை அரங்கம்வங்கபந்து தேசிய அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு இந்தியா
1984 (முந்தைய) (அடுத்த) 1987

1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது இரண்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (2nd SAF Games) வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 1985 டிசம்பர் 20 முதல் டிசம்பர் 26 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றன. இரண்டாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் முறையை விட கூடுதலாக சில விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்க்க தெற்காசிய விளையாட்டுச் சம்மேளனம் தீர்மானித்தது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 238 வீரர்களும் இலங்கையில் இருந்து 35 வீரர்களும் கலந்து கொண்டனர். முதலாவது போட்டியை விட இலங்கை விளையாட்டு வீரர்கள் குறைவாகவே பங்கேற்றனர். இவர்கள் இம்முறனையும் ஜுலியன் போலிங் தலைமையிலேயே கலந்துகொண்டனர். போட்டியை நடத்தும் வங்காளதேசம் 200 போட்டியாளர்களையும் பாக்கித்தான் 139 போட்டியாளர்களையும் பங்கேற்கச் செய்தன. இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றது.

பங்குபற்றிய நாடுகள்[தொகு]

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்[தொகு]

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 94
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 91
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 99
  • மொத்தப் பதக்கங்கள் -284

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 7 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

பதக்க நிலை[தொகு]

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இந்தியா 61 32 14 107
2  பாக்கித்தான் 21 26 12 59
3  வங்காளதேசம் 9 17 38 64
4  இலங்கை 2 7 9 18
5  நேபாளம் 1 9 22 32
6  பூட்டான் 0 0 4 4
7  மாலைத்தீவுகள் 0 0 0 0

ஆதாரம்[தொகு]

  • டெயிலிநியுஸ், டிசம்பர் 19-28, 1985

வெளி இணைப்புகள்[தொகு]