1969 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
5-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
நடத்தும் நகரம்யங்கோன், மியான்மர்
பங்கேற்கும் நாடுகள்6
துவக்க விழா6 டிசம்பர் 1969
நிறைவு விழா13 டிசம்பர் 1969
அலுவல்முறை துவக்கம்நீ வின்
மியான்மர் பிரதமர்
Ceremony venueபோக்யோக் ஆங் சான் அரங்கம்
1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் 1971 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்  >

1969 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1969; ஆங்கிலம்: 1969 Southeast Asian Peninsular Games) என்பது 5-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.

சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1969 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் நான்காவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

1968-இல் வடக்கு வியட்நாமின் தாக்குதல் காரணமாக, வியட்நாம் குடியரசு இந்தப் போடியை நடத்த மறுத்து விட்டது.

விளையாட்டு விழாவின் பெயரை தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்று மாற்றுவதற்குச் சிங்கப்பூர் பரிந்துரைத்தது.[1]

விரிவாக்கம் செய்யப்படும் கூட்டமைப்பில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ப்பதால் நிதிச் சிக்கல்களைத் தணிக்கலாம்; விளையாட்டுகளின் போட்டித் தரங்கள் உயரலாம் என்றும் கருத்துரைக்கப் பட்டது.

இந்த 5-வது போட்டியை நடத்திய பிறகு, நிதிப் பிரச்சினைகளினால் அடுத்தடுத்த விளையாட்டுகளை நடத்துவதற்கு பர்மா தயக்கம் காட்டியது.

மியான்மர், யங்கோன் நகரில் 1969 டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை, 15 விளையாட்டுகளுடன் நடைபெற்றது.

யங்கோன் போக்யோக் ஆங் சான் அரங்கத்தில் (Bogyoke Aung San Stadium) பர்மாவின் பிரதமர் நீ வின் (Ne Win), இந்த விளையாட்டு நிகழ்வைத் திறந்து வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் மியான்மர், தாய்லாந்து; சிங்கப்பூர்; ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.[2]

விளையாட்டுகள்[தொகு]

பங்கேற்பு நாடுகள்[தொகு]

விளையாட்டு[தொகு]

பதக்க அட்டவணை[தொகு]

      போட்டி நடத்திய நாடு (மியன்மார்)

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  மியான்மர் 57 46 46 149
2  தாய்லாந்து 32 32 45 109
3  சிங்கப்பூர் 31 39 23 93
4  மலேசியா 16 24 39 79
5  வியட்நாம் 9 5 8 22
6  லாவோஸ் 0 0 3 3

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
பாங்காக்

4-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் (1967)
பின்னர்
1971 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்