1971 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்
நடத்தும் நகரம் | கோலாலம்பூர், மலேசியா | ||
---|---|---|---|
பங்கேற்கும் நாடுகள் | 7 | ||
துவக்க விழா | 6 டிசம்பர் 1971 | ||
நிறைவு விழா | 13 டிசம்பர் 1971 | ||
அலுவல்முறை துவக்கம் | அப்துல் ஹலீம் யாங் டி பெர்துவான் அகோங் | ||
Ceremony venue | மெர்டேகா அரங்கம் | ||
|
1971 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்; (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1971; ஆங்கிலம்: 1971 Southeast Asian Peninsular Games) என்பது 6-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.
சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1971 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் ஆறாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1]
மலேசியா, கோலாலம்பூர் நகரில் 1971 டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை, 15 விளையாட்டுகளுடன் நடைபெற்றது. 1965-க்குப் பிறகு மலேசியா இரண்டாவது முறையாக, இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
அடுத்த தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகளில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா இரு நாடுகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்துமாறு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தாய்லாந்திற்கு அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் பயனில்லை.[2]
கோலாலம்பூர், மெர்டேகா அரங்கத்தில் (Stadium Merdeka); மலேசியாவின் மாமன்னர் அப்துல் ஹலீம் (Ismail Nasiruddin), இந்த விளையாட்டு நிகழ்வை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
விளையாட்டுகள்
[தொகு]பங்கேற்பு நாடுகள்
[தொகு]விளையாட்டு
[தொகு]பதக்க அட்டவணை
[தொகு]போட்டி நடத்திய நாடு (மலேசியா)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | தாய்லாந்து | 44 | 27 | 38 | 109 |
2 | மலேசியா | 41 | 43 | 55 | 139 |
3 | சிங்கப்பூர் | 32 | 33 | 31 | 96 |
4 | மியான்மர் | 20 | 28 | 13 | 61 |
5 | கம்போடியா | 17 | 18 | 18 | 53 |
6 | வியட்நாம் | 3 | 6 | 9 | 18 |
7 | லாவோஸ் | 0 | 1 | 4 | 5 |
மேற்கோள்
[தொகு]- ↑ "South East Asian Games - The biennial multi-sport South East Asian Peninsular Games were first held in 1959 and, with the admission of Indonesia and the Philippines, renamed the South East Asian Games in 1975". www.gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ Percy Seneviratne (1993) Golden Moments: the S.E.A Games 1959-1991 Dominie Press, Singapore பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-00-4597-2