ஹிஜிகி
ஹிஜிகி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | ஹிஜிகி |
இனம்: | |
இருசொற் பெயரீடு | |
ஹ (வில்லியம் என்றி ஆர்வி வில்லியம் ஆல்பர்ட் இசுட்செலல்) 1931 |
ஹிஜிகி நிஹாங்கோ அல்லது ஜப்பான்,கொரியா மற்றும் சீனா ஆகியவற்றைச் சுற்றி அமைந்திருக்கும் காடுகளில் உள்ள கடற்கரை பாறைகளில் வளர்கிறது. இது பழுப்பு நிறமுள்ள ஒரு வகை கடல் காய்கறி ஆகும்.ஹிஜிகி பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.இதில் நார்ச்சத்து,கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன.ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி ஹிஜிகி உடல்நலம் மற்றும் அழகுக்கு உதவுகிறது. இயற்கை தயாரிப்பு கடைகளில் ஹிஜிகி 30 ஆண்டுகளாக விற்கப்படுகின்றது.ஹிஜிகியின் சமையல் பயன்பாட்டு முறைகள் வட அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபத்திய ஆய்வுகள், ஹிஜிகியில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்துள்ளன.(ஜப்பானைத் தவிர) கனடா, ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் உணவு பாதுகாப்பு முகவர் நிலையங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளன.ஆனால் அமெரிக்கா இதற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளது.[1][2][3]
மேற்கில்
[தொகு]ஒரு ஆங்கில மொழி வெளியீட்டில் 1867 ஆம் ஆண்டில் "ஹிஜிகி" என்ற சொல் முதன்முதலில் தோன்றியது.அந்த வெளியிடானது ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன் எழுதிய ஜப்பானிய மற்றும் ஆங்கில அகராதி ஆகும்."ஹிஜிகி" என்ற சொல் அமெரிக்காவில் 1960 களிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.ஜப்பானிலிருந்து உலர்ந்த வடிவத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.இயற்கை உணவு கடைகளில் பரவலாகக் கிடைத்தது.
தோற்றம் மற்றும் தயாரிப்பு
[தொகு]காடுகளில் பச்சை அல்லது பழுப்பு நிறங்களில் ஹிஜிகி கிடைக்கின்றன. ஒரு மீனவர் அல்லது தொழில்முறை மூழ்காளர் மார்ச் முதல் மே மாதத்தின் வசந்த அலை,குறைந்த அலை காலங்களில் அரிவாளைக்கொண்டு ஹிஜிகியை அறுவடை செய்கிறார்.ஒன்றாக சேகரிக்கப்பட்ட கடற்பாசிகள் பிறகு வேகவைக்கப்பட்டு உலர்ந்த ஹிஜிகியாக விற்கப்படுகிறது.உலர்ந்த பதப்படுத்தப்பட்ட ஹிஜிகியானது கருப்பு நிறமாக மாறும். உலர்ந்த ஹிஜிகியை சமையலுக்கு பயன்படுத்த, அதை முதலில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் சோயா சாஸ் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களுடன் சேர்த்து சமைக்க வேண்டும். ஹிஜிகி பொதுவாக ஜப்பானில் காய்கறிகள் அல்லது மீன் போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது வேகவைத்த,சோயாசாஸ் அல்லது மீன் சாஸில் ஊறவைத்து செய்யப்படுகிறது.சூப்பிலும் சேர்க்கப்படுகிறது.ஹிஜிகி என்னும் கடற்பாசி சுஷி செய்வதற்காக அரிசியுடன் கலக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து
[தொகு]ஹிஜிகியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு,கால்சியம்,மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன.ஹிஜிகியில் கால்சியம்,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் 2க்கு 1என்ற விகிதத்தில் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Survey of Total and Inorganic Arsenic in Seaweed - Food Safety Research Information Office". United States Department of Agriculture. 2004. Archived from the original on 28 March 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
- ↑ "Inorganic Arsenic and Hijiki Seaweed Consumption". Canadian Food Inspection Agency. 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- ↑ [1] பரணிடப்பட்டது சூலை 19, 2013 at the வந்தவழி இயந்திரம்
மேலும் அறிக
[தொகு]Zou, Hui-xu; Pang, Qiu-Ying; Zhang, Ai-Qin (January 2015). "Excess copper induced proteomic changes in the marine brown algae Sargassum fusiforme". Ecotoxicology and Environmental Safety (2015) 111: 271–280. doi:10.1016/j.ecoenv.2014.10.028. பப்மெட்:25450944.
வெளி இணைப்புகள்
[தொகு]- Canadian Food Inspection Agency — Factsheet
- Food and Environmental Hygiene Department of Hong Kong — Hijiki and Arsenic
- Food Standards Agency of the United Kingdom — Hijiki: your questions answered
- New Zealand Food Safety Authority — Hijiki media release
- Seaweeds Used as Human Food