ஹர்பஜன் சிங் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹர்பஜன் சிங் (ஆங்கிலம்: Harbhajan Singh) (பிறப்பு: 1920 ஆகஸ்ட் 18 - இறப்பு: 2002அக்டோபர், 2002 ) இவர் ஒரு பஞ்சாபி கவிஞரும், விமர்சகரும், கலாச்சார வர்ணனையாளரும் மற்றும் மொழிபெயர்ப்பாளருமாவார். அமிர்தா பிரிதமுடன், பஞ்சாபி கவிதை எழுதும் பாணியில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையும் ஹர்பஜனுக்கு உண்டு. இவர் இரெஜிஸ்தான் விச் லகார்காரா உட்பட 19 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 19 இலக்கிய வரலாற்றின் படைப்புகள் மற்றும் அரிசுடாட்டில், சாபக்கிளீசு, இரவீந்திரநாத் தாகூர் மற்றும் இருக்கு வேதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை உட்பட 14 இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஹர்பஜன் சிங் 1920 ஆகஸ்ட் 18 அன்று அசாமில் உள்ள இலாம்திங்கில் கங்கா தே மற்றும் கந்தா சிங் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை காசநோயால் பாதிக்கப்பட்டவர். குடும்பம் லாகூருக்குச் செல்ல வேண்டியிருந்தது, அங்கு அவர்கள் காவல்மாண்டியில் இரண்டு வீடுகளை வாங்கினர்.

அவரது தந்தை இவரது ஒரு வயதிற்கு முன்பே இறந்து போனார். பின்னர் அவரது தாயும் இரண்டு சகோதரிகளும் அவரது 4 வயதிற்குள் இறந்து போனார்கள். லாகூரின் இக்ராவில் வசித்து வந்த அவரது தாயின் தங்கை அவரை வளர்த்து வந்தார். உள்ளூர் டி.ஏ.வி பள்ளியில் கல்வி கற்ற அவர், சிறு வயதிலிருந்தே ஒரு சிறந்த மாணவராக இருந்தார். அவரது கல்வி முயற்சிகளில், அவர் பஞ்சாபில் முதல் மூன்று இடங்களை பிடித்தார். ஆனால் பணம் இல்லாததால் தனது படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. லாகூரில் உள்ள ஒரு ஓமியோபதி மருந்து கடையில் விற்பனைச் சிறுவனாக பணியில் சேர்ந்தார். பின்னர், புதுதில்லியில் இந்திய அரசாங்கத்தின் கீழ் பிரிவு எழுத்தராகவும், பின்னர் புதுதில்லியில் உள்ள கால்சா பள்ளியில் உதவி நூலகராகவும் ஒருசில பணிகளை மேற்கொண்டார்.

சிங் கல்லூரிக்குச் செல்லாமல் உயர் கல்வியை முடித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி இலக்கியத்தில் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளார். அவரது பி.எச்.டி. ஆய்வறிக்கை குர்முகி எழுத்தில் இந்தி இலக்கியம் பற்றி விவாதித்தது.

அவரது மூன்று மகன்களில் ஒருவர் மதன் கோபால் சிங் ஒரு பிரபல பாடகர் மற்றும் அறிஞராவார்.

தொழில்[தொகு]

இந்தி மொழியாசிரியர் மற்றும் பின்னர் பஞ்சாபி மொழியாசிராக மாறுவதற்கு முன்பு ஆங்கில ஆசிரியராக தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார். தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்த இவர் 1984 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இந்திய தொழில்நுட்ப நிறுவனம், குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சம்மு பல்கலைக்கழகம் மற்றும் குவகாத்தி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் அவர் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

நவீன இந்திய மொழிகள் துறையில் சேர அவர் அழைக்கப்பட்டார். பேராசிரியர் பிரிதம் சிங் உள்ளிட்ட மானுடவியலாளர்கள் மற்றும் மொழியியலாளர்கள் குழு, சிங் இறக்கும் வரை பெரிதும் ஆதரித்தனர்.

தாக்கங்கள்[தொகு]

அவர் உஸ்தாத் ரெஹாம் தின், லாலா சூரஜ் பன், டாக்டர் மோகன் சிங் திவானா மற்றும் டாக்டர் நாகேந்திரா ஆகியோரை தனது படிக்கும் காலங்கள் முழுவதிலும் மிகவும் விரும்பும் ஆசிரியர்கள் என்று பாராட்டினார். குரு நானக் தேவ், குரு அர்ஜன் தேவ், சா உசைன், வாரிஸ் சா, புல்லே சா, மிர் தாக்கி மிர், லோர்கா, இரவீந்திரநாத் தாகூர், நூன் மீம் ரசீத் மற்றும் புரான் சிங் ஆகியோர் அவர் மிகவும் பாராட்டிய மற்றும் மதிப்பிடப்பட்ட கவிஞர்கள் ஆவார்கள்.

அத்தர் சிங், திர்லோக் சிங் கன்வார், அதம்சித் சிங், மகிந்தர் கவுர் கில் மற்றும் சதீந்தர் சிங் உள்ளிட்ட பல கவிஞர்களும் அறிஞர்களும் அவருக்கு கீழ் பி.எச்.டி முடித்துள்ளனர்.

மரியாதைகள்[தொகு]

  • 1970: நா துப்பே நா சான்வே என்ற அவரது படைப்பிற்காக இந்திய சாகித்திய அகாதமி வழங்கிய சாகித்திய அகாதமி விருது.[1]
  • 1987: கபீர் சம்மன் - மத்திய பிரதேச அரசு வழங்கிய இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய கௌரவங்களில் ஒன்று.
  • 1994 இல் : சரஸ்வதி சம்மன் - இந்தியாவில் இலக்கிய சிறப்பிற்கான விருது,
  • 1994: சாகித்திய அகாதமி பெல்லோஷிப், புது தில்லி - ஏற்கனவே சர்தார் குர்பாக்ஸ் சிங் ப்ரீத் லாரி என்ற ஒரு பஞ்சாபி எழுத்தாளர் மட்டுமே பெற்றுள்ளார்.[2]
  • சோவியத் ஒன்றிய நேரு விருது - இப்போது அழிந்துபோன விருது. அது இருந்தபோது மிகவும் விரும்பப்பட்டது
  • 2002: 'தலிவால் சன்மான் - லூதியானாவின் பஞ்சாபி சாகித்ய அகாதமி அவருக்கு வழங்கிய மிக உயர்ந்த விருது

குறிப்புகள்[தொகு]

  1. Punjabi பரணிடப்பட்டது 31 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi.
  2. "Biography". பார்க்கப்பட்ட நாள் 10 August 2006.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பஜன்_சிங்_(கவிஞர்)&oldid=3807715" இலிருந்து மீள்விக்கப்பட்டது