உள்ளடக்கத்துக்குச் செல்

வி.எச்.எஸ். மருத்துவமனை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவனை
தொண்டு நிறுவனம்
Voluntary Health Services
அமைவிடம் தரமணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மருத்துவப்பணி Tertiary
வகை Referral
படுக்கைகள் 465
நிறுவல் 1958; 66 ஆண்டுகளுக்கு முன்னர் (1958)
வலைத்தளம் [Official Website வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவனை]
பட்டியல்கள் Hospitals in India

வி. எச். எஸ். மருத்துவமனை என்று பிரபலமாக அறியப்படும் வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனை (Voluntary Health Services hospital, Chennai) என்பது தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் சென்னையில், தரமணியை ஒட்டியுள்ள ராசீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், டைடல் பார்க் ஆகியன அமைந்துள்ளன. அருகில் உள்ள தொடர்ந்து நிலையம் இந்திரா நகர் தொடருந்து நிலையம் ஆகும். இது பல்துறை சிறப்பு வசதிகள் கொண்ட ஒரு உயர் சிறப்பு மருத்துவமனையாகும். இது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு சேவை செய்வதாக கூறப்படுகிறது.[1] இந்த மருத்துவமனையானது 1958 ஆம் ஆண்டு இந்திய மருத்துவர், சமூக சேவகர் பத்மசிறீ [2] மற்றும் பத்ம பூசண் [3] விருதுகளைப் பெற்றவரான கிருஷ்ணசாமி சீனிவாஸ் சஞ்சீவி என்பவரால் நிறுவப்பட்டது. மேலும் இதே பெயரிலான ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[4][5] சென்னை தரமணியில் உள்ள ராஜீவ் காந்தி சாலையை ஒட்டி இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.[6]

வரலாறு[தொகு]

சென்னை மருத்துவ சேவையில் முத்த மருத்துவரான கிருஷ்ணசாமி சீனிவாஸ் சஞ்சீவி 1958 இல் அரசு பணியிலிருந்து விலகி, சென்னையின் முக்கிய சமூகத் தலைவர்களான கஸ்தூரி சீனிவாசன், தி. இரா. வெங்கடராம சாஸ்திரி, எம். பக்தவத்சலம், மு. அ. சிதம்பரம் ஆகியோரின் உதவியுடன் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சேவை செய்வதற்காக ஜூலை [7] ஜுலையில் வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு தொண்டு அறக்கட்டளையை பதிவு செய்தனர்.[8] 1961 அக்டோபரில் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவால் மருத்துவமனை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1963 சூலையில் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தது.

எச். ஐ. வி-க்கு தனியான சிகிச்சை மையம் இங்குதான் முதலில் தொடங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச். ஐ. வி. நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டத்துள்ளது.

வசதிகள்[தொகு]

இந்த மருத்துவமனையானது 465 உள்நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட மருத்துவமனையாக உள்ளது.[1] இந்த மருத்துவ மனையானது பொது அறுவை சிகிச்சை, நரம்பியல், கண், நரம்பியல் அறிவைச் சிகிச்சை, நீரிழிவு மருத்துவமனை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மற்றும் போதை மறுவாழ்வு போன்ற ஏழு முக்கிய சிறப்புகளைக் கொண்டுள்ளது.[9] இங்கு 1965 இல் நரம்பியல் துறை தொடங்கப்பட்டது மற்றும் மருத்துவ உளவியல், இயங்கியல் மருத்துவம், கால்-கை வலிப்பு, சிறப்பு தேவை சிகிச்சை மற்றும் உணவுமுறை ஆகியவற்றைக் கையாளுகிறது. மகப்பேறு மருத்துவப் பிரிவுக்காக 1965 ஆம் ஆண்டில் பிரசவத்துக்கு முந்தைய, பிந்தைய கவனிப்புக்கு வெளிநோயாளர் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டது. 1991 இல், மகப்பேறியல் மற்றும் மலட்டுத்தன்மை மருத்துவகங்கள் அதிக ஆபத்துள்ள பிரசவப் பிரிவில் சேர்க்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி அவர்களால் டாக்டர். ஏ. இலட்மிபதி நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்று பெயரிடப்பட்ட நரம்பியல் மையம் இங்கு தொடங்கப்பட்டது.[10] இது சிக்கலான மண்டை மற்றும் முதுகெலும்பு கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி கொண்டதாக உருவாகியுள்ளது.[11]

பொது அறுவைசிகிச்சைத் துறையில் குடலிறக்கம், தைராய்டு பிரச்சினைகள், குடல் அறுவை சிகிச்சை, இரைப்பை குடல், தொராசி மற்றும் அடிவயிற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை பெருங்குடல் அகநோக்கல் மற்றும் உள்நோக்கியியல் போன்ற நவீன மருத்துவ வசதிகள் மூலமாக செய்யப்படுகிறது. கண் அழுத்த நோய், விழித்திரை நோய்கள், உளவிழி தழும்பு போன்ற கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவப்பிரவு இந்த மருத்துவமனையில் உள்ளது. மேலும் இங்கு விழித்திரை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளளப்படுகின்றன. மனநல மருத்துவத் துறை, ராஜாஜி டி-அடிக்ஷன் மையம்,[12] என பெயரிடப்பட்ட மனநல மருத்துவத் துறை, 22 படுக்கைகளைக் கொண்டுள்ளது மற்றும் வெளிநோயாளர் சேவைகள் தவிர, போதைக்கு அடிமையாதல் சிகிச்சைக்கான குறுகிய கால உள்நோயாளிகளுக்கான சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவ மனையில் 1963 ஆம் ஆண்டு முதல் குருதி வங்கி இயக்கி வருகிறது, அங்கு தன்னார்வ குருதிக் கொடை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நரம்பியல் அறிவியல் கல்வி நிறுவனம்[தொகு]

இந்த மருத்துவமனையில் நரம்பியல் அறிவியல் கல்வி நிறுவனம் (TINS) 1965 ஆம் ஆண்டில் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சீனிவாசால் நிறுவப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த கல்வி நிறுவனமானது சமூக அடிப்படையிலான தொழில்முறை பயிற்சி, கல்விப் படிப்புகள், முதுகலை பட்டதாரிகளுக்கான உள்ளகப் பயிற்சிகள் (சமூகப் பணி மற்றும் உளவியல்) நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ மருத்துவ நரம்பியல் ஆகியவற்றை கொண்ட மையமாக விரிவடைந்துள்ளது. இத்துறையானது நரம்பியல் மனநல மருத்துவத்தில் பெல்லோஷிப்பை வழங்குகிறது.[13] மற்றும் நரம்பியல், நரம்பியல் மற்றும் மருத்துவ நரம்பியல் ஆகியவற்றில் முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது.[14] இதற்கான பாடநெறிகள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

சமூகப் பணிகள்[தொகு]

இந்த மருதுவமனை அதன் தொடக்கத்தில் இருந்து சுமார் 70 சதவீத நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இலவச மருத்துவ உதவிக்கான தகுதியாக நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினரின் வருவாய் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மருந்துகள், தங்குதல், உணவு ஆகியவை அடங்கும்.[4] இது எம். ஏ. சிதம்பரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிட்டி ஹெல்த் என்ற பதாகையின் கீழ், தமிழ்நாட்டில் 14 சிறு சுகாதார மையங்களில் ஆரம்ப சுகாதார வலையமைப்பைக் கொண்டு இயக்குகிறது.[4] இத்திட்டம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.[15] இதில் நோய்த்தடுப்பு, மகப்பேறு பராமரிப்பு, குடும்ப நலம், சுகாதாரம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனை, பிறப்பு , இறப்பு பதிவுகளை பராமரித்தல் ஆகியவற்றில் தமிழகத்தின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சுமார் 100,000 மக்களுக்கு சுகாதார மையங்கள் சேவை செய்யயப்படுகிறது.[4] இந்தத் திட்டம் மருத்துவ உதவித் திட்டத்தையும் உள்ளடக்கியது, இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான காப்பீட்டுத் திட்டமாகும்.[4]

ரேவதி ராஜ் என்ற, ஒரு குழந்தை நல மருத்துவர் இந்த மருத்துவமனையில் தலசீமியா நலன்புரி சங்கத்தை [16] டி.டி.கே. அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் மெட்ராஸ் உதவியுடன் நிறுவியுள்ளார்.[17] இந்த மையத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக குருதி ஏற்றுதல், இரும்புச் செலேஷன் சிகிச்சை மற்றும் ஆலோசனைப் பராமரிப்பு ஆகியவற்றை அளிக்கப்படுகின்றன.[16] இந்தச் சங்கம் நோய் பற்றிய விழுப்புணர்வு தகவல்களைப் பரப்புவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் தொடர்ந்து குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.[18]

குறிப்பிடத்தக்க மருத்துவர்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

 1. 1.0 1.1 "Reaching Life Savers". Rotary International. 1 ஆகத்து 2014. Archived from the original on 24 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2015.
 2. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 3. "Padma Bhushan". Government of India. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Visionary doctor's legacy". தி இந்து. 28 March 2005. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "U.S. AND INDIA COMBAT HIV/AIDS THROUGH AFRICAN PARTNERSHIPS". USAID. 2015. Archived from the original on 25 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 6. "VHS Wikimapia". Wikimapia. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 7. "Professor K. Swaminathan: A Himalayan Professor and Savant". Boloji. 2015. Archived from the original on 24 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
 8. "TOI". Times of India. 7 May 2009. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
 9. "Medical Services". VHS. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 10. "Prof. B. Ramamurthi: The legend and his legacy". Bio Online. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 11. "A. Lakshmipathi Neurosurgical Centre". ALNC. 2015. Archived from the original on 25 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 12. "More facilities for VHS de-addiction centre". 5 April 2010. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 13. "Affiliation Institutions - The Tamilnadu Dr.M.G.R. Medical University". tnmgrmu.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-03.
 14. "Research - Ph.D./D.Sc. - The Tamilnadu Dr.M.G.R. Medical University". tnmgrmu.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-03.
 15. "Other initiatives". VHS. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
 16. 16.0 16.1 "TEDxCEG - Revathi Raj - Technology in Medicine". YouTube. 2 June 2012. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
 17. "Thalassaemia Welfare Society". Thalassaemia Welfare Society. Archived from the original on 2 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
 18. "Rotary club enters into a MOU". 20 November 2011. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.