கஸ்தூரி சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஸ்தூரி சீனிவாசன்
பிறப்புகஸ்தூரி இரங்க ஐயங்கார் சீனிவாசன்
ஆகத்து 7, 1887(1887-08-07)
கும்பகோணம், சென்னை மாகாணம்
இறப்பு21 சூன் 1959(1959-06-21) (அகவை 71)
சென்னை, இந்தியா
தேசியம் இந்தியா
பணிபத்திரிக்கையாளர்
அறியப்படுவதுபத்திரிக்கைத் துறை
வாழ்க்கைத்
துணை
கோமலவள்ளி
பிள்ளைகள்சீ. இராதா
சீ. செண்பகவள்ளி
சீ. பார்த்தசாரதி
சீ. இரங்கராஜன்
விருதுகள்பத்ம பூசண் (1956)

கஸ்தூரி சீனிவாசன் (Kasturi Srinivasan) (7 ஆகஸ்ட் 1887 - 21 ஜூன் 1959) ஓர் இந்திய பத்திரிகையாளரும் தொழிலதிபரும் ஆவார்.

சுயசரிதை[தொகு]

சீனிவாசன், பிரபல வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான சீ. கஸ்தூரி இரங்க ஐயங்காருக்கு ஆகஸ்ட் 1887இல் மூத்த மகனாகப் பிறந்தார். சென்னை, மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சிறு வயதிலேயே தனது குடும்பத்திற்கு சொந்தமான தி இந்து என்ற செய்தித்தாளில் சேர்ந்தார். 1923இல் தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு இந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியராக இருந்த [[சீ. இரங்கசாமி ஐயங்காருக்குப் பின், பிப்ரவரி 1934 இல், சீனிவாசன் அப்பொறுப்பினை ஏற்றார். பின்னர், 21 ஜூன் 1959 இல் தான் இறக்கும் வரை தி இந்துவை வழிநடத்தினார்.

சீனிவாசன் இந்தியாவின் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் நிறுவனர்-தலைவராக இருந்தார். இவருக்கு, ஜனவரி 1956இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] 1969ஆம் ஆண்டில், திருக்குறளின் முழுப் படைப்பையும் ஆங்கிலத்தில் வசன வடிவில் மொழிபெயர்த்தார்.

இவருக்கு, சீ. இராதா, சீ. செண்பகவள்ளி என்ற மகள்களும், சீ. பார்த்தசாரதி, சீ. இரங்கராஜன் என்ற இரு மகன்களும் என நான்கு குழந்தைகள் இருந்தனர். இருவரது மகன்கள் இருவரும் தி இந்துவின் வெளியீட்டாளர்களாக இருந்தனர். தி இந்துவின் வெளியீட்டாளராக இருந்த மிகவும் பிரபலமான பார்த்தசாரதி, தனது 33 வயதில் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் சிறுது காலத்திலேயே இறந்தார். தி இந்துவின் மூலம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவருக்கு பரந்த நண்பர்கள் இருந்தனர். இரங்கராஜன் 2007 இல் இறந்தார். மேலும் சர்வதேச நாய் கண்காட்சியின் நடுவராகவும் இருந்தார்.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.

மேலும் படிக்க[தொகு]

  • V. K. Narasimhan (1969). Kasturi Srinivasan. Popular Prakashan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_சீனிவாசன்&oldid=3239027" இருந்து மீள்விக்கப்பட்டது