கிருஷ்ணசாமி சீனிவாஸ் சஞ்சீவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணசாமி சீனிவாஸ் சஞ்சீவி (1903–1994) என்பவர் ஒரு மருத்துவர், காந்தியவாதி மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் சென்னையில் சமூகத்தின் அடித்தட்டு மற்றும் நடுத்தரமக்களுக்கு சேவையாற்ற கூடிய வகையில் வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் (வி. எச். எஸ்.) என்ற ஒரு மருத்துவ சேவையை நிறுவினார்.[1][2][3] இந்திய அரசு 1971 ஆம் ஆண்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது பெரிய விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[4] ஐந்து ஆண்டுகள் கழித்து 1976-ஆம் ஆண்டு மூன்றாவது பெரிய விருதான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது.[5]

சுயசரிதை[தொகு]

சீனிவாஸ் சஞ்சீவி 1903ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை பி. எஸ். கிருஷ்ணசாமி ஐயர்[6] மற்றும் தாய் தர்மாம்பாள். கிருஷ்ணசாமி ஐயர், புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான முத்துலட்சுமி ரெட்டியின்[7][8] கல்லூரி நாட்களில் பொறுப்பாளராக தன்னை நியமித்துக் கொண்டார். சீனிவாஸ் சஞ்சீவி குடும்பத்தில் நான்காவதாக பிறந்தார். இவருக்கு முன் முதலாவதாக பிறந்தவர் ஒரு அக்கா. அவரது பெயர் வேதா. அதற்கு பிறகு இரண்டு அண்ணன்கள் பிறந்தனர். முதலாமவர் கிருஷ்ணசாமி சுவாமிநாதன்.[9] இரண்டாமவர் கிருஷ்ணசாமி வேங்கடராமன்.[10] இரண்டு அண்ணன்களும் பத்மபூஷன் விருதுகளை பெற்றனர்.[6][8]

உசாத்துணை[தொகு]

  1. Murali, N.S. (28 March 2005). "Visionary doctor's legacy". தி இந்து. https://www.thehindu.com/2005/03/28/stories/2005032803131200.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Rotary News". Rotary International. 1 August 2014. Archived from the original on 24 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  3. "VHS". VHS. 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  5. "Padma Bhushan". Government of India. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  6. 6.0 6.1 "Boloji". Boloji. 2015. Archived from the original on 24 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  7. S. Viswanathan (May 2008). "The Pioneers: Dr. Muthulakshmi Reddy". Frontline 25 (11). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2511/stories/20080606251101400.htm. 
  8. 8.0 8.1 "My musings". My musings. 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  9. "Indian Folklore". Indian Folklore. 2015. Archived from the original on 18 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  10. "NCL". National Chemical Laboratory. 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.