தி. இரா. வெங்கடராம சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாலங்காடு ராஜு வெங்கடராம சாஸ்திரி
1940இல் தி. இரா. வெங்கடராம சாஸ்திரி
சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1924–1928
முன்னவர் சி. மாதவன் நாயர்
பின்வந்தவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 பெப்ரவரி 1874
பிரித்தானிய இந்தியா, மாயவரம்
இறப்பு 2 சூலை 1953(1953-07-02) (அகவை 79)
இந்தியா, சென்னை
தேசியம் பிரித்தானிய இந்தியர்
அரசியல் கட்சி இந்தியன் லிபரல் கட்சி
பணி வழக்கறிஞர்
தொழில் Attorney-General, statesman
சமயம் இந்து

திருவாலங்காடு ராஜு வெங்கடராம சாஸ்திரி (Thiruvalangadu Raju Venkatarama Sastri) (6 பிப்ரவரி 1874 – 2 சூலை 1953) எனுபவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1924 முதல் 1928 வரை மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் டி. ஆர். வி சாஸ்திரி என்றும் அழைக்கப்பட்டார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வெங்கடராம சாஸ்திரி 1874 பெப்ரவரி 6 அன்று மாயாவரத்தில் பிறந்தார் (இப்போது மயிலாதுதுறை என்று அழைக்கப்படுகிறது). இவரது தந்தை திருவாலங்காடி ராஜு சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர்.[2] வெங்கடராம சாஸ்திரி மாயாவரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், 1894 இல் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார், 1898 இல் மெட்ராஸில் உள்ள சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார். இதன்பிறகு ஏப்ரல் 1899 இல் மெட்ராஸ் நீதிமன்ற வழக்கறிஞரான சர் பி. எஸ். சிவசாமி அய்யரிடம் பயிற்சி வழக்கறிஞராக சேர்ந்தார்.

தொழில்[தொகு]

தனது படிப்பை முடித்தவுடன், 1899 இல் வழக்கறிஞர் தொழில் துறைக்கு வந்த சார்த்திரி,[3] சர் சி. பி. ராமசாமி ஐயருக்குப் பிறகு 1924 இல் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்தார்.

மேலும் வெங்கடராம சாஸ்திரி இந்திய லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்தார். 1945 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்த்தாகவும், சிறுபான்மை பிரதிநிதிகளுக்கும் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளைக் கொண்டதான ஒரு மத்திய அரசை உருவாக்க பரிந்துரைத்தார்.[4]

டி. ஆர். வெங்கடராம சாஸ்திரி ஆர். எஸ். எஸ்-சின் சட்டதிட்டங்களை உருவாக்கி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்ங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மீதான தடைய நீக்க உதவினர். இது மாதவ சதாசிவ கோல்வாக்கரின் விடுதலையை எளித்காகியது. .[5][6] இவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும், கோல்வால்கரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார்.[7]

மரணம்[தொகு]

வெங்கடராம சாஸ்திரி 1953 சூலை 2 அன்று இறந்தார்.[8] அவரது மரணம் குறித்து, அப்போதைய சென்னை முதல்வராக இருந்த சி.ராஜகோபாலாச்சாரி கூறிது:

"நீதிமன்றம் சட்ட வெளிச்சத்தை இழந்துவிட்டது, நான் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன்.."

குறிப்புகள்[தொகு]

  1. Jagdish Saran Sharma (1981). Encyclopaedia Indica, Volume 2, p.1104.
  2. Eminent lawyer's demise, The Hindu, Jul 03, 2003 பரணிடப்பட்டது 2004-11-22 at the வந்தவழி இயந்திரம்.
  3. NMML manuscripts: an introduction. Nehru Memorial Museum and Library. 2003. பக். 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87614-05-0. 
  4. "A Central Govt of Major Parties". Indian Express. 1945-11-13. 
  5. S Gurumurthy (16 October 2013). Lifting of ban on RSS was unconditional, The Hindu.
  6. Vidya Subrahmaniam (17 October 2013). Written constitution was indeed a pre-condition, The Hindu.
  7. Dwarka Prasad Mishra (1978). Living an era, Volume 2, p.65
  8. . 

குறிப்புகள்[தொகு]