ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

நிறுவல்:1994
வகை:ஆய்வு நூலகம்
இயக்குனர்:திரு. ஜி. சுந்தர்
அமைவிடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
(12°59′52″N 80°14′54″E / 12.997841°N 80.248464°E / 12.997841; 80.248464ஆள்கூற்று: 12°59′52″N 80°14′54″E / 12.997841°N 80.248464°E / 12.997841; 80.248464)
வளாகம்:நகர்ப்புறம்
இணையத்தளம்:[1]

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.[2] தமிழ்நாட்டில் கோட்டையூரில்[3] இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது. மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ. கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. 1994இல்[4] தொடங்கப்பட்ட இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது[5].

நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.rmrl.in
  2. சிகாகோ பல்கலைக்கழக தளம்
  3. S. Theodore Baskaran (19 August 2000). "An archive for Tamil studies". Frontline (Volume 17, Issue 17). http://www.frontline.in/static/html/fl1717/17170650.htm. பார்த்த நாள்: 15 September 2016. 
  4. ந.வினோத் குமார் (2018 ஆகத்து 14). "வங்கத்திலிருந்து வருகிறார்கள்... இங்கிருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை! - ரோஜா முத்தையா ஆய்வு நூலகர் சுந்தர் பேட்டி". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 15 ஆகத்து 2018.
  5. S. Muthiah (17 April 2006). "A library more accessible". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-library-more-accessible/article3190954.ece. பார்த்த நாள்: 15 September 2016. 

வெளி இணைப்பு[தொகு]