வினோத் மெக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோத் மெக்ரா
பிறப்பு(1945-02-13)13 பெப்ரவரி 1945
அமிருதசரசு, பஞ்சாப், பிரித்தானிய இந்திஅ
(தற்போதைய பஞ்சாப், இந்தியா)
இறப்பு30 அக்டோபர் 1990(1990-10-30) (அகவை 45)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1955–1960, 1971–1990
வாழ்க்கைத்
துணை
 • மீனா புரோக்கா
  (தி. 1974; விவாகரத்து 1978)
 • பிந்தியா கோஸ்வாமி]]
  (தி. 1980; வவிவாகரத்து 1984)
 • கிரண் (தி. 1987)
பிள்ளைகள்சோனியா மெக்ரா
ரோகன் மெக்ரா

வினோத் மெக்ரா (Vinod Mehra) (13 பிப்ரவரி 1945 - 30 அக்டோபர் 1990) பாலிவுட் திரைப்படங்களில் தோன்றிய இந்திய நடிகர் ஆவார். 1950 களின் நடுப்பகுதியில் குழந்தை நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் 1970 களில் இருந்து 1990 இல் தனது 45 வயதில் தான் இறக்கும் வரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குருதேவ் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார். இது இவர் இறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது

தொழில்[தொகு]

மெக்ரா தனது பத்து வயதில் 1955 ஆம் ஆண்டு அடல்-இ-ஜஹாங்கீர் என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ராகினி (1958) மற்றும் பேவகூஃப் (1960) போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். கிஷோர் குமார் நடித்த இந்தப் படத்தில் சிறுவயது கிஷோர் குமாராக நடித்தார்.

பின்னர் தனது திரைப்பட வாழ்க்கையை 1971 இல் தனுஜாவுடன் இணைந்து ஏக் தி ரீட்டா என்ற படத்தில் தொடங்கினார். இது எ கேர்ள் கால்டு ரீட்டா என்ற ஆங்கில நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[1][2] 1965 ஆம் ஆண்டு யுனைடெட் ப்ரொட்யூசர்ஸ் மற்றும் பிலிம்ஃபேர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய திறமைப் போட்டியின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களால் இறுதிப் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இவர் போட்டியில் ராஜேஷ் கண்ணாவிடம் தோற்று, போட்டியின் இரண்டாவதாக வந்தார். இவர், கோல்ட்ஃபீல்ட் மெர்கன்டைல் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்தார்.[3]

யோகீதா பாலி அறிமுகமான பர்தே கே பீச்சே திரைப்படத்தில் அவருக்கு இணையாக நடித்தார். அதைத் தொடர்ந்து எலான் (ரேகாவுடன்), அமர் பிரேம் (1971) மற்றும் லால் பத்தர் ஆகியவற்றில் தோன்றினார். சக்தி சமந்தாவின் இயக்கத்தில் மௌசமி சட்டர்ஜியுடன் சேர்ந்து நடித்த அனுராக் (1973) திரைப்படம் இவரை ஒரு நடிகராக நிலைநிறுத்தியது. இவர் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். இவர் பெரும்பாலும் இரண்டாம் நாயகன் , சகோதரர், நண்பர், மாமா, தந்தை மற்றும் காவல் அதிகாரி போன்ற வலுவான துணை வேடங்களில் நடித்தார். சுனில் தத், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ராஜேஷ் கன்னா மற்றும் அமிதாப் பச்சன் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றினார். ரேகா, மௌசமி சட்டர்ஜீ, யோகீதா பாலி, சபனா ஆசுமி மற்றும் பிந்தியா கோஸ்வாமி ஆகியோருடன் இணைந்து இவர் அடிக்கடி நடித்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

வினோத் மெக்ரா 1945 ஆம் ஆண்டு அமிர்தசரசில் ஒரு பஞ்சாபியான பரமேசுவர்தாசு மெக்ரா மற்றும் கமலா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தைக்கு மும்பையில் வணிகம் செய்ய ஆர்வம் இருந்ததால், சுதந்திரத்திற்குப் பிறகு குடும்பம் அமிர்தசரசில் இருந்து மும்பைக்கு வந்தார். இவருக்கு சாரதா என்ற மூத்த சகோதரி இருந்தார். வினோத் மெக்ரா சாண்டாகுருசு தூய இருதய ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் மும்பை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

திருமணம்[தொகு]

வினோத் மெக்ரா 70களின் மத்தியில் நடிகை ரேகாவுடன் நெருக்கமாக இருந்தார். உண்மையில், அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக பரவலாக நம்பப்பட்டது. ஆனால் 2004 ஆம் ஆண்டு சிமி கரேவால் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ரேகா அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மறுத்தார்.[4] பின்னர் மீனா பரோகா என்பவருடன் இவரது முதல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வினோத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நடக்கவில்லை என கூறப்படுகிறது. இவர் குணமடைந்த பிறகு, பிந்தியா கோஸ்வாமி என்பவருடன் உறவில் இருந்தார். இதனால் இவரது மனைவி மீனா விவாகரத்து பெற்றார். பிந்தியாவுடனான மெக்ராவின் உறவும் விரைவில் முடிவடைந்தது. மேலும் பிந்தியா இயக்குனர் ஜேபி தத்தாவை திருமணம் செய்து கொளண்டார்.[5] 1988 இல், மெக்ரா கென்யாவைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலதிபரின் மகள் கிரண் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரண்டு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வினோத் மெக்ரா 30 அக்டோபர் 1990 அன்று தனது 45 வயதில் மாரடைப்பால் இறந்தார்.

மெக்ராவின் மரணத்திற்குப் பிறகு, இவரது விதவை தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வாழ, கென்யாவுக்குச் சென்றார். குழந்தைகள் மொம்பாசாவில் வளர்க்கப்பட்டு உயர் கல்விக்காக ஐக்கிய இராச்சியம் சென்றனர். இருவரும் இறுதியில் பாலிவுட் திரையுலகில் நுழைந்தனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

 1. A serious satirist பரணிடப்பட்டது 28 மார்ச்சு 2005 at the வந்தவழி இயந்திரம் Subhash Chadda, இந்தியன் எக்சுபிரசு, 25 July 1997.
 2. Biography[தொடர்பிழந்த இணைப்பு] Yahoo! Movies.
 3. http://m.thehindubusinessline.com/blink/hang/quiz-india-at-70/article9811221.ece[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "India's Greta Garbo breaks silence" இம் மூலத்தில் இருந்து 25 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170825110012/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Indias-Greta-Garbo-breaks-silence/articleshow/717832.cms. 
 5. Salaam Bollywood. http://www.screenindia.com/20010921/fsalaam.html. பார்த்த நாள்: 2008-11-23. 
 6. "Rohan Mehra to make debut". Archived from the original on 14 December 2016. பார்க்கப்பட்ட நாள் 19 August 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_மெக்ரா&oldid=3920471" இலிருந்து மீள்விக்கப்பட்டது