யோகீதா பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகீதா பாலி
2011 ஆம் ஆண்டில் பாலி
பிறப்பு13 ஆகத்து 1952 (1952-08-13) (அகவை 71)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1971–1989
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்4, மகாஅக்சய் சக்ரவர்த்தி உட்பட

யோகீதா பாலி சக்ரவர்த்தி (Yogeeta Bali Chakraborty) (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1952) ஒரு முன்னாள் இந்திய இந்தி திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களிலும் திரைத்துறையில் மிகவும் தீவிரமான செயல்பாட்டில் இருந்தார்.[1]

வாழ்க்கை[தொகு]

பாலி 13 ஆகஸ்ட் 1952 இல் பிறந்தார். அவர் 1976 ஆம் ஆண்டில் கிஷோர் குமாரை மணந்தார், 1978 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் 1979 ஆம் ஆண்டில் மிதுன் சக்ரவர்த்தியை மணந்தார். இவர்களுக்கு மகாஅக்சஷய், உஷ்மே, நமாஷி ஆகிய மூன்று மகன்களும் திஷானி என்ற மகளும் உள்ளனர். மகா அக்சய், "மிமோ" ஒரு நடிகர், அதே நேரத்தில் நமாஷி பேட் பாய் படத்தில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yogeeta bali profile". in.com. Archived from the original on 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகீதா_பாலி&oldid=3946625" இலிருந்து மீள்விக்கப்பட்டது