உள்ளடக்கத்துக்குச் செல்

சிமி கரேவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமி கரேவால்
2012 சனவரியில் சிமி கரேவால்
பிறப்புசிம்ரிதா கரேவால்
17 அக்டோபர் 1947 (1947-10-17) (அகவை 76)
லூதியானா, கிழக்கு பஞ்சாப், இந்தியா
பணிதிரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், அரட்டை நிகழ்ச்சி தொகுப்பாளர்.
செயற்பாட்டுக்
காலம்
1962 முதல் தற்போது வரை

சிமி கரேவால் (Simi Garewal) அக்டோபர் 17, 1947இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் இரண்டு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர், தோ பதன், சாத்தி,மேரா நாம் ஜோக்கர், சித்தார்த்தா, கர்ஜ் மற்றும் உதீகான் (பஞ்சாபி மொழி) போன்ற திரைப்படங்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார். இவரது பிரபலமான பேச்சு நிகழ்ச்சி, "ரெண்டெஸ்வூஸ் சிமி கரேவால்" எனவும் அறியப்படுகிறது.

இளமைப்பருவம்

[தொகு]

சிமி கரேவால் பஞ்சாபிலுள்ள முகட்சரில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை பிரிகடியர் ஜெ. எஸ். கரேவால் இந்தியத் தரைப்படையில் பணிபுரிந்தவர். சிமி, தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் மனைவியான பமீலா சோப்ராவின் உறவினராவார். சிமியின் தாய் தார்ஷியும், பமீலாவின் தந்தை மொகிந்தர் சிங்கும் உடன்பிறந்தவர்களாவர்.[3] சிமி, அவரது சகோதரி அம்ரிதாவுடன் இங்கிலாந்திலுள்ள "நியூலேண்ட் ஹவுஸ் ஸ்கூலில்" படித்தார்.[4]

தொழில்

[தொகு]

இங்கிலாந்தில் தனது குழந்தைப் பருவத்தை கழித்த பிறகு, கரேவால் தன் பதின்பருவத்தில் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். ஆங்கில மொழியில் சரளமாக பேசும் திறன் இருந்ததால், ஆங்கில மொழித் திரைப்படமான "டார்சன் கோஸ் டு இந்தியா"வில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 15 வயதான கரேவால் 1962 ஆம் ஆண்டில் இந்த படத்தில் பெரோஸ் கானுடன் இணைந்து அறிமுகமானார்.[5] இப் படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததால் மேலும் பல பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. 1960 மற்றும் 70களில் வெளிவந்த முக்கிய இந்தியத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அவற்றில், இயக்குனர் மெகபூப் கானின் சன் ஆஃப் இந்தியா, (இந்தி நடிகர்) ராஜ் கபூரின், மேரா நாம் ஜோக்கர் (1970), சத்யஜித் ராயின் அரான்யர் டின் ராத்ரி, மிருணாள் சென்னின் பதாதிக் மற்றும் ராஜ் கோஸ்லாவின் தோ பதன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமி_கரேவால்&oldid=3889349" இலிருந்து மீள்விக்கப்பட்டது