விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூன்

பாக்ஸ் மங்கோலிகா எனும் பதத்திற்கு லத்தீன் மொழியில் “மாங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாடரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு. “இது அசல் பதமான பாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் யூரேசியப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிர்வாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்...


இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் என்பது அரேபியாவில் இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் அராபியத் தீபகற்பத்தின் அரேபிய மக்கள் பல கடவுள் வணக்க முறை, யூதம், கிறித்தவம் மற்றும் பாரசீக சொராட்டிரம் போன்ற சமய முறைகளைப் பின்பற்றினர் என்பதையும் அவர்களின் இசுலாம் அல்லாத சமய நம்பிக்கைகளைப்பற்றிக் குறிப்பிடுவதாகும். ஆரம்பத்தில், அரேபியாவின் பல கடவுள் வணக்க முறையில் தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அரேபியர்கள் ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மெக்காவில் உள்ள காபாவில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகளாக அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் காணப்பட்டன. மேலும்...

மே

வைரசு அல்லது தீநுண்மி என்பது தான் ஒட்டியுள்ள உயிரியின் செல்களுக்குள் பல்கிப் பெருகும் ஒரு தொற்றும் தன்மையுள்ள நோய்க்காரணியாகும். தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வைரசு தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களின் தன்மையை மாற்றி தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான படிகளை உருவாக்கச் செய்கிறது. வைரசுகளுக்கும் மற்ற பெரும்பாலான உயிர்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடு என்னவெனில் வைரசுகளில் பிரிந்து பெருகும் செல்கள் இல்லை. மாறாக இவை தான் ஒட்டியுள்ள உயிரின் செல்களுக்குள் சென்று இணைகின்றன. மேலும்...


இராகினி மாநிலம் என்பது மியன்மரின் (பர்மா) ஒரு மாநிலமாகும். மியான்மரின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் இதன் வடக்கில் சின் மாநிலம், கிழக்கே மாகுவே மண்டலம், பாகோ பிராந்தியம் மற்றும் அயெயர்வாடி பகுதி, மேற்கில் வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு வங்காளத்தின் சிட்டகாங் கோட்டம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தோராயமாக வடக்கில் 17°30' மற்றும் 21°30' க்கு இடையிலும், கிழக்கில் 92°10' மற்றும் 94°50' இடைப்பட்ட நீளத்தில் அமைந்துள்ளது. மத்திய பர்மாவில் இருந்து இராகினி மாநிலத்தை தனிமைப்படுத்துவதாக அரக்கான் மலைகள் உள்ளன. மேலும்...

ஏப்ரல்

மூச்சுத் திவலை என்பது பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ள ஒரு துகள் ஆகும். இது உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விரைவாக தரையில் விழும் அளவுக்கு பெரியது. பெரும்பாலும் 5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது. சுவாசிப்பது, பேசுவது, தும்மல், இருமல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற செயல்பாடுகளின் விளைவாக சுவாசத் துளி இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது தூசுப்படலத்தை உருவாக்கும் மருத்துவ நடைமுறைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் அல்லது பிற வீட்டு வேலை நடவடிக்கைகள் மூலம் செயற்கையாகவும் இத்துளிகளை உருவாக்க முடியும். மேலும்...


புவி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. மேலும்...