மனாத்
| மனாத் | |
|---|---|
| அதிபதி | விதி, இறப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நேரத்தின் தெய்வம் |
| இடம் | அல்-மூசாலால் |
| துணை | ஹுபல் |
| சகோதரன்/சகோதரி | அல்-லாத், அல்-உஸ்ஸா |
| சமயம் | அரேபியத் தீபகற்பம் |
மனாத் (Manāt) (அரபி: مناة அரபு பலுக்கல்: [maˈnaː(h)]), கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர், இசுலாமிற்கு முந்தைய அரேபியத் தீபகற்பத்தின், ஹெஜாஸ் பகுதிகளில், செமிடிக் மொழிகள் பேசிய மக்களால் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும்.[1]இப்பண் தெய்வத்தின் கணவர் ஹுபல் ஆவர்.
மெக்காவின் மூன்று பெண் சகோதரி தெய்வங்களில் மனாத் தெய்வம் தலைமையானர் ஆவார். மற்ற இரண்டு பெண் தெய்வங்கள் அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆவார். [2][3]
மனாத் பெண் தெய்வம் விதி, இறப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நேரத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். [3][4]
மனாத் பெண் தெய்வம், அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா ஆகிய பெண் தெய்வங்களுக்கு மூத்தவராவர்[5]
கி. பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் இசுலாம் வளர்ந்த பிறகு மெக்காவில் இருந்த மனாத் பெண் தெய்வத்தின் உருவச்சிலை அழிக்கப்பட்டு, மனாத் வழிபாடும் நின்று போனது.
வழிபாடு
[தொகு]மனாத் தெய்வத்தின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம், அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியில் அமைந்த மெக்காவிற்கும், மதீனாவிற்கும் இடையே, செங்கடலை ஒட்டி இருந்தது. [6] [7]
அரேபிய தீபகற்பத்தின் ஹெஜாஸ் பகுதியின் பானு அவ்ஸ் மற்றும் பானு கஷ்ராஜ் பழங்குடி மக்கள் மனாத் தெய்வத்தை வழிபட்டனர்.[7] [2]}}இம்மக்கள் மனாத் தெய்வத்தின் மரசிற்பத்தை இரத்தத்தால் பூசித்து வழிபட்டனர்.[3]
இம்மக்கள், மனாத் தெய்வத்தின் கல் உருவச்சிலையை மூசால்லால் பகுதியில் எழுப்பி வழிபட்டனர்.[7] இசுலாம் தோன்றுவதற்கு முன்னர், புனித யாத்திரையாக, மூசல்லால் பகுதியில் உள்ள மனாத் தெய்வத்தை வழிபடச் செல்லும் அரேபியர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு, மனாத் தெய்வத்தின் உருவச் சிலை முன் நின்று வழிபட்டனர். [2] மனாத் தெய்வத்தின் சிலையை வழிபடாது, தங்களின் புனித யாத்திரை நிறைவடையாது என்று இம்மக்கள் கருதினர்.[2]
காபாவில் இருந்த 360 தெய்வ உருவச் சிலைகளில் மனாத் தெய்வத்தின் சிலையும் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய வரலாற்று அறிஞரான (கிபி 737 - 819) இசம் - இபின் - கல்பி, [8], காபாவை சுற்றி வரும் வழிபாட்டாளர்கள், ஆசிர்வாதம் வேண்டி மனாத் தெய்வத்தின் பெயருடன் அவரது சகோதரிகளின் பெயர்களையும் உச்சரிப்பர் என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார். [9]
மனாத் கோயிலின் இடிப்பு
[தொகு]முகமது நபியின் ஆனையின் படி, சாத் பி சையித் அல்-அஷ்ஹாலி என்பவரின் தலைமையில் 20 குதிரை வீரர்கள் அடங்கிய படைக்குழு, [10]முசால்லாலில் உள்ள, அரேபிய பழங்குடிகள் வழிபட்ட மனாத் தெய்வத்தின் கருங்கல்லிலால் ஆன உருளை வடிவச் சிற்பத்தையும், கோயிலையும் அழித்தனர்.[11][12][13][14]
சோமநாதர் கோயில்
[தொகு]மனாத் தெய்வத்தின் கல் சிற்பத்தை, அன்றைய பழமைவாத அரேபியர்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்ப பகுதியின் சோமநாதபுரத்தில் வைத்து வழிப்பட்டிருக்கலாம் என்ற செய்தியால், கிபி 1024-இல் கஜினி முகமது, சோமநாதபுரக் கோயில் கருங்கல் உருளை வடிவ லிங்கத்தை உடைத்து, அதனை கசினி நகரத்தின் மசூதியின் படிக்கற்களாக அமைத்தார். [15]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Manāt, ARABIAN GODDESS
- 1 2 3 4 Al-Kalbi 2015, ப. 13.
- 1 2 3 Tate 2005, ப. 170.
- ↑ Andrae 2012, ப. 17.
- ↑ Al-Kalbi 2015, ப. 12.
- ↑ Jordan 2014, ப. 187.
- 1 2 3 Papaconstantinou 2016, ப. 253.
- ↑ <Hisham ibn al-Kalbi
- ↑ Al-Kalbi 2015, ப. 17.
- ↑ Abu Khalil, Shawqi (1 March 2004). Atlas of the Prophet's biography: places, nations, landmarks. Dar-us-Salam. p. 226. ISBN 978-9960-897-71-4.
- ↑ "Obligation to destroy idols - islamqa.info". Retrieved 17 December 2014.
- ↑ "List of Battles of Muhammad". Archived from the original on 2011-07-26. Retrieved 2019-02-10.
- ↑ "The Sealed Nectar". Retrieved 17 December 2014.
- ↑ "Sa‘d bin Zaid Al-Ashhali was also sent", Witness-Pioneer.com பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Akbar, M. J. (2003-12-31). The Shade of Swords: Jihad and the Conflict between Islam and Christianity. Roli Books Private Limited. ISBN 9789351940944.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Al-Kalbi, Ibn (2015). Book of Idols. Princeton University Press. ISBN 9781400876792.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Andrae, Tor (2012). Mohammed: The Man and His Faith. Courier Corporation. ISBN 9780486119090.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Brown, Daniel W. (2011). A New Introduction to Islam. John Wiley & Sons. ISBN 9781444357721.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Griffo, Kedar; Birkley, Michael (2011). Religion, Politics, and Freemasonry: A Violent Attack Against Ancient Africa. lulu.com. ISBN 9780557886005.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Jordan, Michael (2014). Dictionary of Gods and Goddesses. Infobase Publishing. ISBN 9781438109855.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Khan, Nasir (2006). Perceptions of Islam in the Christendoms: A Historical Survey. International Specialized Book Service Incorporated. ISBN 9788256015016.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Papaconstantinou, Arietta; Schwartz, Daniel L. (2016). Conversion in Late Antiquity: Christianity, Islam, and Beyond: Papers from the Andrew W. Mellon Foundation. Routledge. ISBN 9781317159735.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Phipps, William E. (1999). Muhammad and Jesus: A Comparison of the Prophets and Their Teachings. A&C Black. ISBN 9780826412072.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Tate, Karen (2005). Sacred Places of Goddess: 108 Destinations. CCC Publishing. ISBN 9781888729177.
{{cite book}}: Invalid|ref=harv(help) - van der Toorn, Karel; Becking, Bob; van der Horst, Pieter (1999). MDictionary of Deities and Demons in the Bible. Wm. B. Eerdmans Publishing. ISBN 9780802824912.
{{cite book}}: Invalid|ref=harv(help) - Van Donzel, E. J. (1994). Islamic Desk Reference. BRILL. ISBN 9789004097384.
{{cite book}}: Invalid|ref=harv(help)