விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 11
Jump to navigation
Jump to search
சனவரி 11: அல்பேனியா - குடியரசு நாள் (1946)
- 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- 1782 – பிரித்தானியர் சேர் எட்வர்ட் இயூசு, சேர் எக்டர் மன்றோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
- 1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு துணைக்கோள்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
- 1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1932 – இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் (படம்) இறப்பு.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
- 1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
- 1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அண்மைய நாட்கள்: சனவரி 10 – சனவரி 12 – சனவரி 13