லாரஸ் ஃபஸ்கஸ் ஃபஸ்கஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்ட்டிக்கு கடற்புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இலாரசு
இனம்:
இ. பசுகசு

இலாரசு பசுகசு பசுகசு (Larus fuscus fuscus) என்பது வடக்கு நார்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து முதல் வெள்ளைக் கடல் வரை இனப்பெருக்கம் செய்யும் ஒரு பெரிய கடல் புறா ஆகும். இது கருமுதுகுக் கடற்காக்கையின், துணையினம் ஆகும்.

விளக்கம்[தொகு]

வீட்டு வாத்து அளவுள்ள இது சுமார் 60 செ.மீ நீளம் இருக்கும். இதன் அலகு மஞ்சள் நிறத்திலும், விழிப்படலம், வெண்மை நிறத்திலும், கால்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதின் தலை, கழுத்து, உடலின் கீழ்ப்பகுதி ஆகியன வெண்மை நிறத்தில் இருக்கும். முதுகும், தோள் பட்டையும் கறுத்த சாம்பல் நிறமான ஓரளவு கறுப்பு என்று சொல்லக்கூடியவாறு இருக்கும். பறக்கும்போது இறக்கைகளின் வெள்ளை விளிம்புகளும், கறுத்த முதுகும் மற்ற கடற்காக்கைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டும்.[2] இதன் தோற்றம் இதன் முதன்மை இனமான கருமுதுகுக் கடற்காக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவில்லை. ஆனால் இதன் தோள்பட்டை சார்ந்த பகுதி கருங்கடுநிறத்தில் இருப்பதே ஒரு வேறுபாடு ஆகும்.

வலசை[தொகு]

இவை தென் இந்தியாவில் மேற்குக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் குளிர்காலத்தில் செப்டம்பர் முதல் மே வரை காணலாம். கோடியக்கரையில் காணப்பட்ட குறிப்புகள் உண்டு. குளிர் காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரும்போது தலையில் பழுப்பு நிறமான கோடுகள் மிகுதியாக காணலாம்.[2]

நடத்தை[தொகு]

இவை எப்போதும் கூட்டமாக காணப்படும். இது ஒரு அனைத்துண்ணி ஆகும். இவை கடற்கரைகளிலும் துறைமுகங்களிலும், மீன்பிடிக்கும் துறைகளிலும், கருடனோடும் பிற கடற்காங்களைகளோடும் சேர்ந்து பறப்பதைக் காண இயலும். இவை மீன்கள், பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், புழுக்கள், நட்சத்திரமீன்கள், மொல்லுடலிகள், விதைகள், பழங்கள், சிறிய பாலூட்டிகள், முட்டை, சிறிய பறவைகள், குஞ்சுகள், இறைச்சிக் கழிவுகள், கழிவுப்பொருள், அழுகும் பிணம் போன்றவற்றை உண்கின்றன.

கீஓவ்.. கீஓவ்.. என உரத்தக் குரலில் ஒலி எழுப்பும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Larus fuscus". IUCN Red List of Threatened Species 2019: e.T22694373A155594163. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22694373A155594163.en. https://www.iucnredlist.org/species/22694373/155594163. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 188-189. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரஸ்_ஃபஸ்கஸ்_ஃபஸ்கஸ்&oldid=3839943" இலிருந்து மீள்விக்கப்பட்டது