உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளைக் கடல்

ஆள்கூறுகள்: 65°30′N 37°30′E / 65.500°N 37.500°E / 65.500; 37.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளைக் கடல்
ஆள்கூறுகள்65°30′N 37°30′E / 65.500°N 37.500°E / 65.500; 37.500
வகைகடல்
வடிநில நாடுகள்உருசியா
மேற்பரப்பளவு90,000 km2 (34,700 sq mi)
சராசரி ஆழம்60 m (197 அடி)
அதிகபட்ச ஆழம்340 m (1,115 அடி)
மேற்கோள்கள்[1][2]

வெள்ளைக் கடல் (ஆங்கில மொழி: White Sea, உருசியம்: Белое море) என்பது உருசியா நாட்டின் வடமேற்குக் கரையிலுள்ளா பேரேண்ட்ஸ் கடலின் தெற்குக் கழிமுகக் கடலாகும். மேற்கே கரேலியாவும், வடக்கே கோலா தீபகற்பமும், வடகிழக்கே கனின் தீபகற்பமும் கொண்டுள்ளது. மொத்த வெள்ளைக் கடலும் ரஷ்ய ஆளுமைக்குட்பட்ட ரஷ்ய நீராகக் கருதப்படுகிறது.[3] நிர்வாகரீதியில் அர்காங்கெல்சுக் மாகாணம், மூர்மன்சுக் மாகாணம் மற்றும் கரேலியா எனப் பிரிந்துள்ளது.

வெள்ளைக் கடலில் உள்ள முக்கியத் துறைமுகம் அர்காங்கெல்சுக்கில் உள்ளது. இக்கடலே ரஷ்ய வரலாற்றில் முக்கியமான சர்வதேச கடல்வணிக தளமாக கொல்மோகோரி பகுதியில் வாழ்ந்த போமோர் பயன்படுத்திவந்தனர். தற்காலத்திலும் சோவியத் ஒன்றியத்தின் முக்கியக் கடற்படை மற்றும் நீர்மூழ்கித் தளமாக உள்ளது. வெள்ளைக் கடல்-பால்டிக் கால்வாய் வெள்ளைக் கடலையும் பால்டிக் கடலையும் இணைக்கிறது. கருங்கடல், செங்கடல் மற்றும் மஞ்சள் கடல் போல நிறத்தின் பெயரில் உள்ள நான்கு கடல்களில் இதுவும் ஒன்றாகும்.

பரப்பு

[தொகு]

ஸ்வடோய் நோஸ்(Svyatoi Nos மூர்மன்சு கடற்கரை, 39°47'E) மற்றும் கேப் கன்னினை இணைக்கும் கோடே சர்வதேச நீரியல் அமைப்பின் அளவின் படி வெள்ளைக் கடலின் வடக்கு எல்லையாகும்.[4]

இட அமைவு

[தொகு]
தென்கிழக்கு கடற் கரை அருகே ஒரு கோடை நாள்
கண்டலஸ்கா வளைகுட
கீ தீவின் ஒனேகா கடல் கரை

நான்கு முக்கிய விரிகுடா வெள்ளைக் கடலுக்கு உள்ளன. இந்த விரிகுடாக்கள் கூம்பு வடிவில் குறுகிய நீரிணைப்பு வழியாக பேரண்ட்ஸ் கடலுடன் இணைந்துள்ளன. வெள்ளைக் கடலின் மேற்குப் பகுதியில் கண்டலஸ்கா வளைகுடா உள்ளது. இதுவே 340 மீட்டர்கள் (1115 அடி) கொண்ட மிகவும் ஆழமான பகுதியாகும். தெற்கே ஒனேகா நதி கலக்கும் ஒனேகா வரிகுடா உள்ளது. தென்கிழக்கில் வடக்கு டிவினா நதி கலக்கும் டிவினா விரிகுடா உள்ளது இது அர்காங்கெல்சுக்கின் முக்கியத் துறைமுகமாகும். கிழக்குப் பகுதிகளில் கோலா தீபகற்பம் எதிரே மென்ஸ் நதி மற்றும் குலாய் நதி கலக்கும் மென்ஸ் விரிகுடா உள்ளது. வியக் நதி, நிவா நதி, உம்பா நதி, வர்சுகா நதி மற்றும் பொனொய் நதிகள் வெள்ளைக் கடலில் சேரும் இதர முக்கிய ஆறுகளாகும்.[1][2] மத்தியப் பகுதி மற்றும் டிவினா விரிகுடாவின் கடற்படுகை முழுதும் கரம்பை மற்றும் மணல் கொண்ட இடமாகும். வடக்கு கண்டலஸ்கா வளைகுடா மற்றும் ஒனேகா விரிகுடா பகுதிகளின் கடற்படுகை மணல் மற்றும் கற்கள் கொண்டுள்ளது. வடமேற்குக் கடற்கரை உயரமான மற்றும் கரடுமுரடானவை, தென்கிழக்கு சரிவு நிறைந்த பகுதியாகும்.[1]

வெள்ளைக் கடலில் அதிக எண்ணிக்கையில் தீவுகள் உள்ளபோதும் அவை பெரும்பாலும் சிறியவை. முக்கிய தீவு கூட்டம் என்பது கடலில் நடுவே ஒனேகா விரிகுடா அருகே உள்ள உள்ள ஸ்லோவஸ்கி தீவுகள் ஆகும். வரலாற்று மடங்களால் ஒனேகா விரிகுடாவில் உள்ள கீ தீவு முக்கியத்துவம் பெறுகிறது. கடற்கரை அருகே உள்ள வெளிகீ தீவே கண்டலஸ்கா வளைகுடாவில் உள்ள பெரிய தீவாகும்.[2]

2000 ஏப்பிரல் 23(மேல்) மற்றும் 2001 மே 3(கீழ்) இல் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படம்

வரலாறு

[தொகு]
வெள்ளைக் கடலின் வரைபடம் (1635)
ஸ்லோவஸ்கி மடம்

நொவ்கொரோட் மக்கள் குறைந்தது 11 ஆம் நூற்றாண்டு முதலே வெள்ளைக்கடலை அறிந்திருந்தனர். படிப்படியாக இதன் வணிக முக்கியத்துவம் அறிந்து கடற்கரைக் காடுகளில் உள்ள விலங்கின் மென்மயிர் வணிகம் வரை செய்தனர். டிவினா ஆற்றின் வடக்கு புறப் பகுதியான கொல்மோகோரியில் 14 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஆரம்பக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. 1492 இல் ரஷ்யாவின் இரண்டாம் இவான் தூதர்கள் தானியங்களுடன் டென்மார்க் பயணம் செய்து ரஷ்யாவின் முதல் சர்வதேசக் கடல் துறைமுகமாக ஆக்கினர்.

ரிச்சர்ட் சான்சலர் கட்டளையின் கீழ் 1553 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் போனவென்ச்சர் என்ற முதல் வெளிநாட்டுக் கப்பல் கொல்மோகோரிக்கு வந்தது.[5]

ஹக் வில்லோபை தன் தலைமையில் மாலுமிகளுடன் இரு கப்பல்களில் கிழக்கிந்தியத் தீவுகள், குறிப்பாக இந்தியா, சீனா போன்ற இடங்களுக்குச் செல்லும் வடக்குப்புற பாதையைக் கண்டார். இங்கிலாந்து அரசர் இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு நிதியுதவியில் நடந்த இந்த முயற்சியால் மாஸ்கோவிற்கும் லண்டனுக்கும் கடல்வழி தொடர்பு கிடைத்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 White Sea, Great Soviet Encyclopedia (in Russian)
  2. 2.0 2.1 2.2 White Sea, Encyclopædia Britannica on-line
  3. A. D. Dobrovolskyi and B. S. Zalogin Seas of USSR. White Sea, Moscow University (1982) (in Russian)
  4. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
  5. Compare: March, G. Patrick (1996). "3: Ivan IV and the Muscovite Drang nach Osten". Eastern Destiny: Russia in Asia and the North Pacific. Westport, Connecticut: Praeger Publishers. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275956486. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08. It was in pursuit of a northeast passage that the English under the leadership of Richard Chancellor arrived in Kholmogory in 1553.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
White Sea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்_கடல்&oldid=3572451" இலிருந்து மீள்விக்கப்பட்டது