கரம்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்டல்

கரம்பை அல்லது வண்டல் (Silt) என்பது ஏரி, குளங்களில் அடியில் படியும் மண் ஆகும். காட்டில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்க்கும் போது அவை மண்ணில் மக்கும். மழைபெய்யும் போது இலைமக்குகள் மண்துகள்களோடு ஆற்றில் அடித்து வரப்படும். ஆற்றுநீர் ஏரி குளங்களில் தேக்கப்படும். நீரில் உள்ள மண்துகள்கள் நாளடைவில் நீர்நிலையின் அடியில் தரையில் படியும்.

கரம்பை[தொகு]

தஞ்சாவூர், திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில் கரம்பை என்னும் வழக்கு நடைமுறையில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊரின் பெயர் கரம்பை. கரம்பை என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டு பல கிராமங்கள் உள்ளன.(எ.கா.) குருவிக்கரம்பை, பேய்க்கரம்பை, கரம்பைக்குடி.

பயன்[தொகு]

கோடைகாலத்தில் நீர்நிலைகள் வற்றியபின் அடியில் படிந்த கரம்பை மண்ணை அள்ளி விவசாய நிலங்களுக்கு இடுவர். இதனால் விளைநிலம் வளம் பெறும். மேலும் நீர்நிலைகளும் தூர் வாரப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரம்பை&oldid=2008237" இருந்து மீள்விக்கப்பட்டது