உள்ளடக்கத்துக்குச் செல்

லாகோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாகோஸ், நைஜீரியா
விக்டோரியா தீவின் அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து பார்க்கும் போது லாகோஸ்
விக்டோரியா தீவின் அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து பார்க்கும் போது லாகோஸ்
லாகோஸ், நைஜீரியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் லாகோஸ், நைஜீரியா
சின்னம்
அடைபெயர்(கள்): Eko
முக்கிய நகரப்பகுதிகளைக் காட்டும் லாகோசின் நகரப் படம்
முக்கிய நகரப்பகுதிகளைக் காட்டும் லாகோசின் நகரப் படம்
நாடுநைஜீரியா
மாநிலம்லாகோஸ் மாநிலம்
LGAலாகோஸ் தீவு
பரப்பளவு
 • நகரம்8.7 km2 (3.3 sq mi)
 • நகர்ப்புறம்
999.6 km2 (385.9 sq mi)
மக்கள்தொகை
 (2006 census, preliminary)[2]
 • நகரம்2,09,437 (Lagos Island LGA)
 • அடர்த்தி24,182/km2 (62,631/sq mi)
 • நகர்ப்புறம்
79,37,932 (Metropolitan Lagos)
 • நகர்ப்புற அடர்த்தி7,941/km2 (20,568/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (CEST)
இணையதளம்http://www.lagosstate.gov.ng/

லாகோஸ் /ˈlɡɒs/[3] (அல்லது லேகோஸ்) நைஜீரியாவில் லோகோசு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரமும் அதைச் சூழ்ந்துள்ள புறநகர் பகுதிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக உள்ளன. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகவும்,[4][5][6][7][8][9][10] அதிக மக்கள் தொகை நிறைந்த நகர்புற திரட்சியாகவும் உள்ளது.[11][12] லாகோஸ் ஆப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மையம் ஆகும்; இந்தப் பெருநகரம் அதிக உள்நாட்டு உற்பத்தி அளவையும், கண்டத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகங்களுள் ஒன்றையும் கொண்டுள்ளது.[13][14][15]

லாகோஸ் ஆரம்ப காலத்தில் தீவுக்கூட்டங்களில் இருந்து தோன்றிய துறைமுக நகரமாக இருந்தது, அந்த தீவுகள் தற்போது உள்ளூர் அரசு பகுதிகளான லாகோஸ் தீவுகள், எடி ஓசா, அமுவா ஓடோபின் மற்றும் அபாபாவில் அமைந்துள்ளன; தீவுகள் லாகோஸ் கடற்காயலில் இருந்து தோன்றும் சிறுகுடாக்களினால் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை முகவாயின் கிழக்கு மேற்காக 100 கீமீ (60 மைல்) வரை பரவியுள்ள பவளத் தீவுகள், மணற் திட்டுகள் மற்றும் நீரிடைக் கடற்கரை போன்றவற்றால் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. விரைவாக நகரமயமாதலின் காரணத்தால் நகரானது கடற்காயலின் மேற்கே தற்போது லாகோஸ் நிலப்பகுதி, அஜிரோமி - லிபோடின் சுருலெரே வரை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக லாகோஸ் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது: தீவுப்பகுதி, ஆரம்ப கால லாகோஸ் நகரம் மற்றொன்று நிலப்பகுதி,ref name="Lagos Case Study">"CASE STUDY OF LAGOS" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)</ref> விரிவடைந்த நகரப்பகுதி. 1967 இல் லாகோஸ் மாநில உருவாக்கத்திற்கு முன்பு வரை நகரப் பகுதியானது, லாகோஸ் நகர குழுவினால் மைய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாநில உருவாக்கத்தின் மூலம் மேற்கு பகுதியைத் தவிர்த்து லாகோஸ் நகரானது ஏழு உள்ளூர் அரசு பகுதிகளாக பிரிக்கப்பட்டது (தற்போது அவற்றையும் சேர்த்து 13 உள்ளூர் அரசுப் பகுதிகள் உள்ளன). 1914 இல் நைஜீரிய ஒருங்கிணைப்பிலிருந்து லாகோசானது அதன் தலைநகராகவும், பின்னர் லாகோசு மாநில உருவாக்கத்திற்கு பின் அதன் தலைநகராகவும் இருந்துவந்தது. ஆனால் 1976 இல் மாநிலத் தலைநகரானது இக்ஜாவிற்கு மாற்றப்பட்டது, அதேவேளையில் 1991 இல் கூட்டாட்சியின் தலைநகரானது அபூஜாவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் லாகோசானது ஒரு நகரமாக பரவலாக அறியப்பட்ட வந்தது. தற்போதைய லாகோசு, "பெருநகர லாகோசு" என்றும் அறியப்படுவது, அதிகாரப்பூர்வமாக "லாகோசு பெருநகரப் பகுதி",[16][17][18] ஒரு நகர்புற திரட்சியாகவும் அல்லது தொகுதியாகவும் உள்ளது.[19] இதில் மாநிலத் தலைநகரான இகெஜா உட்பட 16 உள்ளூர் ஆட்சிப் பகுதிகள் உள்ளன. இந்த நகரத்தொகுதியானது லாகோசு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 37% ஆக்கிரமிப்பதுடன், மாநில மக்கள் தொகையில் 85% கொண்டுள்ளது.

லாகோசின் சரியான மக்கள் தொகை குறித்து குழப்பம் நிலவுகிறது. 2006 ஆம் ஆண்டிற்கான கூட்டாட்சியின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, மாநகரத்தில் 8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இது மாநில அரசால் மறுக்கப்பட்டது. பின்னர் லாகோசு மாநில அரசு அதன் மக்கள்தொகை தரவின் வெளியிட்டது, அதன்படு நகரின் மக்கள்தொகை தோராயமாக 16 மில்லியன் ஆகும். 2015 இல் அதிகாரப்பூர்வமற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகள், லாகோசு மற்றும் அதைச் சூழ்ந்துள்ள ஓகுன் மாநிலம் வரை நீட்சியடையும் பெருநகரப் பகுதிகளை உள்ளடக்கிய "பெருநகர லாகோசின்" மக்கள்தொகை தோராயமாக 21 மில்லியன்கள் என்கிறது.

புவியியல்

[தொகு]

கட்டிட அமைப்பு

[தொகு]

லாகோசு நைஜீரியாவின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்டுள்ளது. லாகோசில் காணப்படும் கட்டிட அமைப்புகள் பன்முகத்தன்மை வாயந்தவை. வெப்பமண்டல, உள்ளூர் அமைப்புகளில் தொடங்கி ஐரோப்பிய பாணி மற்றும் அதிநவீன கட்டிடங்கள் கலந்த ஒரு கலவையாக உள்ளது. நீர் வீடு மற்றும் சிட்டா பே தொழுகைப்பள்ளி போன்றவற்றில் பிரேசில்லிய கட்டிடப் பாணி காணப்படுகிறது. வானுயுர் கட்டிடங்கள் தீவுப்பகுதியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன, அதேவேளையில் நிலப்பகுதியிலும் சில உயர்ந்த கட்டிடங்கள் உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், லாகோசு மாநில அரசு நீண்ட கால விரிவாக்க நோக்கங்களுடன் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் மற்றும் பசுமை பகுதிகளை புதுப்பித்துள்ளது.

காலநிலை

[தொகு]

லாகோசில் வெப்ப மண்டல புல்வெளி காலநிலை நிலவுகிறது, கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி வறண்டகாலம் மற்றும் மழைக்காலங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க படிவுவீழ்ச்சி காணப்படுகிறது. மழைக்காலம் ஏப்ரலில் தொடங்கி அக்டோபரில் முடிவடைகிறது, வறண்ட காலம் நவம்பரில் தொடங்கி மார்ச்சில் முடிவடைகிறது. மிகவும் ஈரப்பதமான மாதம் ஜூன், மொத்த படிவுவீழ்ச்சி அளவு 315.5 மில்லிமீட்டர்கள் (12.42 இன்ச்), மிகவறண்ட மாதம் ஜனவரி, மொத்த படிவுவீழ்ச்சி 13.2 மில்லிமீட்டர்கள் (0.52 இன்ச்).

நகரானது நிலநடுக்கோட்டின் அருகில் அமைந்துள்ளதால், வெப்பநிலை வெப்பமான மாதம் மற்றும் குளிரான மாதம் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடின்றி நிலையாக உள்ளது. மிக வெப்பமான மாதம் மார்ச், சராசரி வெப்பநிலை 28.5 °C (83.3 °F), குளிர்ச்சியான மாதம் ஆகஸ்ட், சராசரி வெப்பநிலை 25.0 °C (77.0 °F).

தட்பவெப்ப நிலைத் தகவல், லாகோஸ் (முத்ரலா முகமது பன்னாட்டு வானூர்தி நிலையம்) 1961–1990, அதிகபட்சம்: 1886–தற்போதுவரை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 40.0
(104)
37.1
(98.8)
37.0
(98.6)
39.6
(103.3)
37.0
(98.6)
37.6
(99.7)
33.2
(91.8)
33.0
(91.4)
33.2
(91.8)
33.7
(92.7)
39.9
(103.8)
36.4
(97.5)
40.0
(104)
உயர் சராசரி °C (°F) 32.2
(90)
33.2
(91.8)
32.9
(91.2)
32.2
(90)
30.9
(87.6)
29.3
(84.7)
28.2
(82.8)
28.3
(82.9)
28.9
(84)
30.3
(86.5)
31.4
(88.5)
31.8
(89.2)
30.8
(87.4)
தினசரி சராசரி °C (°F) 27.3
(81.1)
28.4
(83.1)
28.5
(83.3)
28.0
(82.4)
27.0
(80.6)
25.6
(78.1)
25.2
(77.4)
25.0
(77)
25.5
(77.9)
26.4
(79.5)
27.2
(81)
27.2
(81)
26.8
(80.2)
தாழ் சராசரி °C (°F) 22.4
(72.3)
23.7
(74.7)
24.1
(75.4)
23.7
(74.7)
23.2
(73.8)
21.9
(71.4)
22.3
(72.1)
21.8
(71.2)
22.1
(71.8)
22.4
(72.3)
23.0
(73.4)
22.5
(72.5)
22.8
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 12.6
(54.7)
16.1
(61)
14.0
(57.2)
14.9
(58.8)
20.0
(68)
21.2
(70.2)
15.0
(59)
19.0
(66.2)
13.0
(55.4)
17.9
(64.2)
11.1
(52)
11.6
(52.9)
11.1
(52)
பொழிவு mm (inches) 13.2
(0.52)
40.6
(1.598)
84.3
(3.319)
146.3
(5.76)
202.4
(7.969)
315.5
(12.421)
243.0
(9.567)
121.7
(4.791)
160.0
(6.299)
125.1
(4.925)
39.7
(1.563)
14.8
(0.583)
1,506.6
(59.315)
ஈரப்பதம் 81 79 76 82 84 87 87 85 86 87 84 82 83
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 1.5 2.8 6.6 9.0 12.5 16.2 13.2 11.6 12.7 11.2 4.9 2.1 104.3
சூரியஒளி நேரம் 164.3 168.0 173.6 180.0 176.7 114.0 99.2 108.5 114.0 167.4 186.0 192.2 1,843.9
[சான்று தேவை]

போக்குவரத்து

[தொகு]

நெடுஞ்சாலைகள்

[தொகு]

லாகோசு மேற்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய மற்றும் விரிவான சாலைப் வலைப்பின்னல்களுள் ஒன்றாக உள்ளது. அது புறநகர் தொடருந்துகள் மற்றும் படகு சேவைகளும் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் நகரில் அவற்றின் புவியியல் அமைப்பு மற்றும் நகரின் மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக வழக்கமாக உச்ச நேரங்களில் மிகவும் நெருக்கடியாக உள்ளன. லாகோசு பல நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களாலும் இணைக்கப்பட்டுள்ளது. பாட்கரி விரைவுச் சாலை முழுமைக்குமான ஒரு புதிய தொடருந்து அமைப்பு தற்போது கட்டப்பட்டு வருகிறது.

தொடருந்து

[தொகு]

லாகோசு பெருநகரின் வழியாக ஓடும் விரிவான லாகோசு தொடருந்து பெருநகர போக்குவரத்து தற்போது கட்டப்பட்டு வருகிறது. லாகோசு தொடருந்து முனையத்தின் மூலம் பல நகர்புற தொடருந்து மற்றும் பயணிகள் வண்டிகள் சேவையாற்றி வருகின்றன.

படகுகள்

[தொகு]

லாகோசு மாநில படகு சேவை நிறுவனம் சில வழக்கமான தடங்களில் இயக்கி வருகிறது, எடுத்துக்காட்டாக லாகோசு தீவு மற்றும் நிலப்பகுதி இடையே நவீன படகுகள் மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தனியார் படகுகள் முறைசாரா சேவைகளை சில காயல்கள் மற்றும் சிறுகுடாக்களில் வழங்கி வருகின்றன.

வான்வழி

[தொகு]

லாகோசில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றான முர்தாலா முகம்மது பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. விமானநிலையம் இகெஜாவின் வடக்கில் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்ளன. 2008 இல் 5.1 மில்லியன் பயணிகளுடன், இந்த விமான நிலையம் நைஜீரியாவின் விமான போக்குவரத்தில் 50% விழுக்காட்டைக் கொண்டுள்ளது. இந்த விமானநிலையம் மெட்வியூ விமானநிறுவனம் மற்றும் அரிக் ஏரின் முதன்மை முனையமாகும், இவை தவிர முன்னணி விமான நிறுவனங்களான பிரிட்டிசு ஏர்வேசு, விர்ஜின் அட்லாண்டிக், கேஎல்எம், ஏர் பிரான்சு, லுபுத்தான்சா மற்றும் துருக்கி ஏர்லைன்சு போன்றவை லாகோசிலிருந்து உலகம் முழுவதும் தினசரி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்த விமான நிலையத்தில் சமீபத்தில் தரைக்கீழ் புதுப்பிப்புகள் மற்றும் புதிய முனையம் அமைக்கப்பட்டன.

மருத்துவம்

[தொகு]

லாகோசு பல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில நைஜீரிய மருத்துவ வரலாற்றில் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. எடுத்துக்காட்டாக நைஜீரியாவின் பழமையான மருத்துவமனை நகரில் அமைந்துள்ளது. அத்துடன் லாகோசில் தான் மேற்கு ஆப்பிரிக்காவின் முதல் வான்வழி அவசர ஊர்தி சேவை செயல்பாட்டுக்கு வந்தது. லாகோசின் மருத்துவ சேவையினை பொதுவாக அரசு மற்றும தனியார் துறைகள் எனப் பிரிக்கலாம். அவை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நலம் பேணல்களை வழங்குகின்றன. தனியார் மருத்துவமனைகள் அதிக செலவுபிடிப்பவையாக இருந்தாலும், அவை உயர்தர சிகிச்சை வழங்குகின்றன என்பதற்கு உத்திரவாதமில்லை.

கல்வி

[தொகு]

லாகோசு மாநில அரசு பல்வேறு பள்ளிகளை நடத்தி வருகிறது. கல்வி முறையில், நாடு முழுவதும் பின்பற்றப்படும் 6-3-3-4 அமைப்பு பின்பற்றப்படுகிறது ஆரம்ப நிலை, இளையோர் இரண்டாம் நிலை (JSS), மூத்தோர் இரண்டாம் நிலை (SSS), பல்கலைக் கழகம் போன்ற நிலைகள் உள்ளன. முதல் ஒன்பது வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள் அரசால் நிதி அளிக்கப்படும் உறைவிடப் பள்ளிகளாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Summing the 16 LGAs making up Metropolitan Lagos (Agege, Ajeromi-Ifelodun, Alimosho, Amuwo-Odofin, Apapa, Eti-Osa, Ifako-Ijaiye, Ikeja, Kosofe, Lagos Island, Lagos Mainland, Mushin, Ojo, Oshodi-Isolo, Shomolu, Surulere) as per:
  The Nigeria Congress. "Administrative Levels - Lagos State". Archived from the original on 2005-12-25. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
 2. Summing the 16 LGAs making up Metropolitan Lagos (Agege, Ajeromi-Ifelodun, Alimosho, Amuwo-Odofin, Apapa, Eti-Osa, Ifako-Ijaiye, Ikeja, Kosofe, Lagos Island, Lagos Mainland, Mushin, Ojo, Oshodi-Isolo, Shomolu, Surulere) as per:
  Federal Republic of Nigeria Official Gazette (15th May, 2007). "Legal Notice on Publication of the Details of the Breakdown of the National and State Provisional Totals 2006 Census" (PDF). Archived from the original (PDF) on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29. {{cite web}}: Check date values in: |date= (help)
 3. "Lagos". Oxford Dictionary. Archived from the original on 20 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. African Cities Driving the NEPAD Initiative. UN-HABITAT. 2006. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789211318159.
 5. John Hartley; Jason Potts; Terry Flew; Stuart Cunningham; Michael Keane; John Banks (2012). Key Concepts in Creative Industries. SAGE. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-446-2028-90.
 6. Helmut K Anheier; Yudhishthir Raj Isar (2012). Cultures and Globalization: Cities, Cultural Policy and Governance. SAGE. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781446258507.
 7. Stuart Cunningham (2013). Hidden Innovation: Policy, Industry and the Creative Sector (Creative Economy and Innovation Culture Se Series). Univ. of Queensland Press. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-702-2509-89.
 8. Lisa Benton-Short; John Rennie Short (2013). Cities and Nature. Routledge Critical Introductions to Urbanism and the City. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134252749.
 9. Kerstin Pinther; Larissa Förster; Christian Hanussek (2012). "Afropolis: City Media Art". Jacana Media. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-431-4032-57.
 10. Salif Diop; Jean-Paul Barusseau; Cyr Descamps (2014). The Land/Ocean Interactions in the Coastal Zone of West and Central Africa Estuaries of the World. Springer. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-0638-81.
 11. "What Makes Lagos a Model City". New York Times. 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
 12. John Campbell (10 July 2012). "This Is Africa's New Biggest City: Lagos, Nigeria, Population 21 Million". The Atlantic (Washington DC). https://www.theatlantic.com/international/archive/2012/07/this-is-africas-new-biggest-city-lagos-nigeria-population-25-million/259611/. பார்த்த நாள்: 23 September 2012. 
 13. "Africa's biggest shipping ports". Businesstech. 8 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
 14. Brian Rajewski, (1998). Africa, Volume 1 of Cities of the world : a compilation of current information on cultural, geographical, and political conditions in the countries and cities of six continents, based on the Department of State's "post reports". Gale Research International, Limited,. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810376922.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
 15. Loretta Lees; Hyun Bang Shin; Ernesto López Morales (2015). Global Gentrifications: Uneven Development and Displacement. Policy Press. p. 315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-447-3134-89.
 16. "A Flood-Free Lagos: The Regional Imperative". பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
 17. Olukoju, Ayodeji. "The Travails of Migrant and Wage Labour in the Lagos Metropolitan Area in the Inter-War Years". Liverpool University Press. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
 18. "Lagos Metropolitan Area: Scope and scale of the shelter problem". பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
 19. Caprio, Charles (6 March 2012). "Lagos is wonderful and charming conurbation of Nigeria to visit". Go Articles. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகோஸ்&oldid=3702586" இலிருந்து மீள்விக்கப்பட்டது