ரூபெல் ஒசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரூபெல் ஒசைன்
Rubel Hossain
রুবেল হোসেন
Rubel Hossain (2) (cropped).jpg
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ரூபெல் ஒசைன்
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை நடுத்தர விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 56) 9 சூலை, 2009: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு 12–16 நவம்பர், 2014: எ சிம்பாப்வே
முதல் ஒருநாள் போட்டி (cap 94) 14 சனவரி, 2009: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 13 மார்ச், 2015:  எ நியூசிலாந்து
சட்டை இல. 34
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007/08–இன்று சிட்டகொங் பிரிவு
2012-இன்று சிட்டகொங் கிங்சு
தரவுகள்
தேஒ.நாமு.தப.அ
ஆட்டங்கள் 22 57 39 92
ஓட்டங்கள் 195 83 345 141
துடுப்பாட்ட சராசரி 9.28 6.38 8.84 5.87
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிகூடியது 45* 17 45* 18*
பந்துவீச்சுகள் 3600 2,594 5768 4280
விக்கெட்டுகள் 32 75 62 134
பந்துவீச்சு சராசரி 73.34 32.46 61.98 28.14
5 விக்/இன்னிங்ஸ் 1 1 2 3
10 விக்/ஆட்டம் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/166 6/26 5/60 6/18
பிடிகள்/ஸ்டம்புகள் 10/– 10/– 16/– 22/–

மார்ச் 6, 2014 தரவுப்படி மூலம்: [கிரிக்கின்ஃபோ]

முகம்மது ரூபெல் ஒசைன் (Mohammad Rubel Hossain, வங்காள: মোহাম্মদ রুবেল হোসেন; பிறப்பு: 1 சனவரி 1990) வங்காளதேசத்து துடுப்பாட்ட வீரர். நடுத்தர விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒரு-நாள் பன்னாட்டுப் போட்டியை, 2009 சனவரி 14 இல் இலங்கைக்கு எதிராக விளையாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதலாவது தேர்வுப் போட்டியை 2009 சூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இருபது20, 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார்.

சாதனைகள்[தொகு]

தேர்வுப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள்[தொகு]

# தரவுகள் ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு முடிவு
1 5/166 5  நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் ஆமில்டன் நியூசிலாந்து 2010 தோல்வி

ஒரு-நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகள்[தொகு]

# ஆட்டம் எதிராக அரங்கு நகரம் நாடு ஆண்டு முடிவு
1 6/26 41  நியூசிலாந்து சேர்-இ பங்க்ளா டாக்கா வங்காளதேசம் 2013 வெற்றி

குற்றச்சாட்டுகள்[தொகு]

நசுநீன் அக்தார் என்னும் நடிகை தன்னை ரூபெல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக காவல்துறையினரிடம் குற்றஞ்சாட்டியதை அடுத்து, ரூபெல் கைது செய்யப்பட்டார். 2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மூன்று நாட்களின் பின்னர் இவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக வங்காளதேச அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளில் அவ்வணி தெரிவு செசெய்யப்பட்டதை அடுத்தும், இப்போட்டியில் ஒசைனின் சிறந்த பங்களிப்புகளையும் அடுத்து, நசுனீன் தனது குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபெல்_ஒசைன்&oldid=2544090" இருந்து மீள்விக்கப்பட்டது