ரிச்சி பெனோட்
![]() பெனாட் 1998 இல் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிச்சார்ட் பெனோட் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | அக்டோபர் 6, 1930 பென்ரித், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 10 ஏப்ரல் 2015 சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | (அகவை 84)|||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ரிச்சி | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை கால்-சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பல்துறை, வர்ணனையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 190) | 25 சனவரி 1952 எ மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12 பெப்ரவரி 1964 எ தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1948–1964 | நியூ சவுத் வேல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, டிசம்பர் 22 2007 |
ரிச்சார்ட் "ரிச்சி" பெனோட் (Richard "Richie" Benaud, 6 அக்டோபர் 1930 – 10 ஏப்ரல் 2015) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். 1964 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பிரபலமான ஒரு துடுப்பாட்ட வர்ணனையாளரானார்.
தேர்வுத் துடுப்பாட்ட பல்துறை வீரரான ரிச்சி பெனோட், 1950களின் ஆரம்பத்தில் துடுப்பாட்ட அரங்கில் பின்தங்கியிருந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியை 1960களின் ஆரம்பத்தில் மீண்டும் மேனிலைக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றினார். 1958 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக 1964 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் பணியாற்றினார்.
துடுப்பாட்ட சாதனைகள்[தொகு]
- இவரது ஆரம்பத் துடுப்பாட்டக் காலத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் 78 நிமிடங்களில் 100 ஓட்டங்கள் எடுத்தார். இது இது வரைகால தேர்வு வரலாற்றில் மூன்றாவது விரைவான சதம் (நேர அடிப்படையில்) ஆகும். அத்துடன் ஆத்திரேலியர் ஒருவரின் இரண்டாவது விரைவான சதமும் ஆகும்.[1]
- பெனோடின் அதிகபட்ச தேர்வு ஓட்டங்கள் 122 தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கில் 1957–1958 இல் எடுக்கப்பட்டது.[2]
- இந்தியாவுக்கு எதிராக சென்னை 1956–1957 தேர்வுப் போட்டியில் 72 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை வீழ்த்தியமை இவரது அதிகப் பட்ச இலக்குகளாகும்.[2]
- இவர் தலைவராக விளையாடிய எந்தவொரு தேர்வுத்தொடரையும் ஆத்திரேலியா இழக்கவில்லை. ஆத்திரேலிய அணியின் தலைவராக 28 தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். இவற்றில் 12 வெற்றிகளைப் பெற்றார். 11 வெற்றி தோல்வியின்றியும், 1 சமமாகவும் முடிந்தன. 4 போட்டிகள் தோல்வியடைந்தன.[2]
- ஆஷஸ் தொடரை ஆத்திரேலியா இழந்த பிறகு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1958–-59-களில் இவரது தலைமையில் ஆசசுக் கோப்பையை வென்றது.
- 1963 இல் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, 2000 ஓட்டங்களையும் எடுத்து இரண்டிலும் இரட்டைகள் எடுத்த முதலாவது வீரரானார்.
- சிட்னியில் தனது கடைசித் தேர்வுப் போட்டியை விளையாடிய போது இவர் தனது வாழ்நாள் சாதனையாக மொத்தம் 248 இலக்குகளைக் கைப்பற்றியிருந்தார். அக்காலத்தில் இது ஒரு தேர்வு சாதனையாகும். 2,201 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.[2]
மறைவு[தொகு]
2013 அக்டோபரில் சிட்னியின் கூஜி என்ற புறகரில் வாகன விபத்தில் சிக்கிய பின்னர் ரிச்சி பெனோடின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.[3] 2014 நவம்பரில் அவரது 84வது அகவையில், தனக்கு தோல் புற்றுநோய் உள்ளதாக அறிவித்தார்.[4] 2015 ஏப்ரல் 10 இல் படுக்கையில் காலமானார்.[5][6] இவருக்கு அரசு முறை இறுதி நிகழ்வுகள் இடம்பெறும் என பிரதமர் டோனி அபோட் அறிவித்தார்.[7][8]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Records - Test matches - Batting records - Fastest hundreds - ESPN Cricinfo". Cricinfo.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Richie Benaud". Cricinfo. 10 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Barrett, Chris (24 அக்டோபர் 2013). "Richie Benaud injured in car accident". சிட்னி மோர்னிங் எரால்டு. 10ரேப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ Richie Benaud diagnosed with cancer பரணிடப்பட்டது 2014-11-10 at the வந்தவழி இயந்திரம், ninemsn, 10 November 2014
- ↑ "Cricket great Richie Benaud dies". 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Richie Benaud Obituary, ABC News Australia, 10 April, 2015
- ↑ Hinchcliffe, Jessica (10 ஏப்ரல் 2015). "Richie Benaud dies: Prime Minister Tony Abbott offers a state funeral for cricket great". ABC. http://www.abc.net.au/news/2015-04-10/pm-says-richie-benaud-part-of-the-lives-of-millions/6382864. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.
- ↑ "Australia offers state funeral for Richie Benaud". பிபிசி. 10 ஏப்ரல் 2015. http://www.bbc.co.uk/news/world-australia-32229360. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2015.