மோமினல் ஹாக்
மோமினல் ஹாக் (Mominul Haque (பிறப்பு: செப்டம்பர் 29, 1991) என்பவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.இவர் தாக்கா மாகாணத்திற்காக விளையாடி வருகிறார். தேர்வுத் துடுப்பாட்டங்களில் வங்காளதேச துடுப்பாட்டக்காரர்களில் அதிக மட்டையாளர் சரசரியைக் கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு ஆட்டத்தின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் நூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்கள் அடித்த முதல் வங்காளதேச வீரர் மற்றும் பதினொரு தேவுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்கள் எடுத்த வங்காளதேச வீரர் எனு சாதனை படைத்துள்ளார்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]இவர் செல்ஹெட் ராயல்ஸ் அணிக்காக வங்காளதேச பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். 2008 -2009 ஆம்ம் ஆண்டுகளில் சிட்டகொங் மாகாண அளவில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 22 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஆட்டமிழக்காமல் இரண்டு ஓட்டங்களும் எடுத்தார். மேலும் நான்கு ஓவர்கள் வீசினார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் குல்னா ராயல் பெங்கால்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53* ஓட்டங்கள் எடுத்து அணியினை 4 இலக்குகளால் வெற்றி பெறச் செய்தார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.[1]
2013 -2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் ரோசன் சில்வாவுடன் இணைந்து நான்காவது இணைக்கு 276 ஓட்டங்கள் எடுத்தார்.[2]
செப்டம்பர், 2015 ஆம் ஆண்டில் வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் வங்காளதேச அ அணியின் தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டார்.[3]
2018-2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ள வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் ராஜாசி கிங்ஸ் அணியின் சார்பாக விளையாட உள்ளார்.[4]
சர்வதேச போட்டிகள்
[தொகு]மார்ச் 8, 2013 இல் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்தார். இதன் மூன்று ஆட்டப் பகுதிகளில் 156 ஓட்டங்கள் எடுத்தார். இவரின் சராசரி 52.00 ஆக இருந்தது. அதே ஆண்டில் சிட்டகொங்கில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 பந்துகளில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இரண்டாவது போட்டியிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் தமீம் இக்பாலுக்கு அடுத்தபடியாக் தொடர்ச்சியாக இரு நூறுகளை அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[5]
வங்காளதேசத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு இரண்டாவது போட்டியில் மோமினல் நூறு அடித்து அணிக்கு உதவினார். இலங்கை அணி குமார் சங்கக்காராவின் மூன்று நூறுகளால் 587 ஓட்டங்கள் எடுத்தது. வங்காளதேச அணி 271 ஓட்டங்கள் எடுத்தது. இதிலும் மோமினல் நூறு ஓட்டங்கள் அடித்தார். சாக் அரங்கத்தில் இவர் அடித்த இரண்டாவது நூறு ஓட்டங்கள் இதுவாகும். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[6]
ஏப்ரல், 2018 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் 10 துடுப்பாட்ட வீரர்களுக்கு சிறந்த வீரர்களுக்கான விருதினை வழங்கியது. மோமினலும் அதில் ஒருவர் ஆவார்.[7]
சான்றுகள்
[தொகு]- ↑ "Barisal Burners v Khulna Royal Bengals, 22 February 2012 – day/night (20-over match)". பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
- ↑ "The Home of CricketArchive". www.cricketarchive.com. Archived from the original on 19 பெப்பிரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2017.
- ↑ "Mominul to lead strong Bangladesh A squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 September 2015.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mominul ton leads Bangladesh fightback". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 October 2013.
- ↑ "Bangladesh save Test but SL take series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2014.
- ↑ "BCB cuts contracts list for 2018 to ten". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.